தமிழ் சினிமா


ஜீவா


கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட் தான்.தன்னுடைய படங்களில் எப்போதும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களையே படமாக எடுக்கும் சுசீந்திரன் இந்த முறை கையில் எடுத்திருப்பது கிரிக்கெட். நம் தமிழக மண்ணில் கிரிக்கெட் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை மிக நெருக்கமாக படம் பிடித்திருக்கிறார் .

மிக இயல்பாக நாயகனுக்கு கிரிக்கெட் சிறு வயதில் இருந்து அவனோடு எப்படி ஒட்டிப்போகிறது என்பதை படம் துவங்குவதில் மிக அழகாக சொல்லிவிட்டு, வழக்கமான ஒரு காதல் எபிசோடை ரொம்பவும் போட்டு திணிக்காமல், சின்னதாக ஒரு பிரேக் விட்டு பின்பு தொடர்கிறார்.

கிரிக்கெட்டையும் அதனால் ஏற்படும் சாதாரண குடும்பத்து பிரச்சினைகளையும், கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்கள் எப்படி எல்லாம் ஓரங்கட்டபடுவார்கள் என்பதை தைரியமாக சொல்லிவிட்டு, கிரிக்கெட் நட்பையும் அந்த நட்பின் பிரிவையும் அழுத்தமாக சொல்லி நெகட்டிவாக ஒரு எண்டு கார்டு போடாமல் பாசிட்டிவாக படத்தை முடித்து கைதட்டு வாங்கிவிட்டார் சுசீந்திரன்.

“ஜீவா” வாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் அப்படியே இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்திவிட்டார். நல்ல விளையாடுகிறார் [அவரும் ஒரு நிஜ கிரிக்கெட்டர்] நல்ல நடிக்கவும் செய்திருக்கிறார். இமான் பின்னணி இசையிலும் பாடல்களிலும் [ஒரே ஒரு பாடலை தவிர] பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவு மதி கிரிக்கெட் விளையாட்டை படம் பிடிப்பதில் இருக்கும் சிரமங்களை துளியும் திரையில் தெரியாமல் மிக நேர்த்தியாக படம் பிடித்து இருக்கிறார்.

கதாநாயகி ஸ்ரீ திவ்யா பள்ளிக்கு செல்லும் மாணவியாக, கல்லூரி மாணவியாக, வேலைக்கு செல்லும் பெண்ணாக பொருத்தமாக இருக்கிறார்.கிரிக்கெட்டில் திறமையும் வேகமும் மட்டும் இருந்தால் போதாது அதுக்கு வேற ஒரு குடியில பிறந்திருக்கணும் என்பதையும், கண்ணுக்கு தெரிந்த மனித விஷக்கிருமிகள் இன்னும் எத்தனையோ திறமைசாலிகளை ‘எப்படி இல்லாமல் ஆக்குகின்றனர்’ என்பதை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கும் படம்தான் “ஜீவா”.
மொத்தத்தில் “ஜீவா” கிரிக்கெட் வீரனின் மற்றொரு ஜீவன் -  நன்றி cineulagam

No comments: