80 லட்சம் வாடிக்கையாளர்கள் பங்கேற்ற ஆன்லைன் திருவிழா

.
கூகுள் நிறுவனம் நடத்திய கிரேட் ஆன்லைன் ஷாப்பிங் திரு விழாவில் (ஜி.ஓ.எஸ்.எப்) 80 லட்சத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.
மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை இரவு முடிவடைந்தது. இந்த இணையதளத்தை விளம்பரப்படுத்தும் காலத்தையும் எடுத்துக் கொண்டால் மொத்தம் 1.4 கோடி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டார்கள் என்று கூகுள் தெரிவித்தது.
டிசம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை நடந்திருந்தாலும், இந்த ஆன் லைன் விழாவுக்கான 14 நாட்கள் இந்த இணையதளம் செயல்பட்டது. தற்போது இந்த இணையதளம் மூடப்பட்டுவிட்டது. கடந்த வருடம் நான்கு நாட்கள் இந்த விழாவில் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வாடிக்கை யாளார்களின் வருகை ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது.
220-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக ராஞ்சி, குண்டூர், ஹூப்ளி ஆகிய நகரங்களில் இருந்தும் கலந்துகொண்டதாக கூகுள் தெரிவித்தது. முதல் முறை வருபவர்கள் 299 ரூபாய் பொருள்கள் மீது கவனம் செலுத்தியதாகவும் கூகுள் கூறியது. இதில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களும் துணி வகைகளும் அதிகமாக விற்பனையானது.

http://tamil.thehindu.com/

No comments: