தமிழ் சினிமா

காவியத்தலைவன்

காவியத்தலைவன் - Cineulagam
நாடகம் என்பது திரைப்படங்களின் முதுகெலும்பு என்பதை அறிய வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகனேஷன், பாலசந்தர் என இந்திய சினிமாவே போற்றும் கலைஞர்கள் அனைவரும் நாடகத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். நம் கலாச்சாரம், பண்பாடு ஆகிய அனைத்தின் வெளிப்பாடே நாடகம் தான் அதை இக்கால மக்களுக்கு உணர்த்தவே காவியத்தலைவனை உருவாக்கியுள்ளார் வசந்தபாலன்.


நாடகத்தின் கதை

படம் முழுவதும் நாடக அரங்கிலே நடக்கிறது. புகழ் வெறியும், பொறாமை குணமும் ஒரு சேர பிடித்தால் என்ன ஆகும்? அவர் எந்த துறையை சார்ந்தாலும் அது அழிந்து போகும் என்பதே காவியத்தலைவனின் கதை சுருக்கம்.


நாசர் வைத்திருக்கும் பெரிய நாடக கம்பெனியில் வந்து இணைகிறார்கள் பிருத்விராஜ், சித்தார்த். இது போல் வரும் அனைவரையும் தன்னுடன் இணைந்து கொண்டு நாடகம் நடத்தி வருகிறார். இவர்களை போலவே பஞ்சம் பிழைக்க வரும் வேதிகாவையும் தங்களுடன் சேர்த்து கொள்கிறார்கள். நன்றாக நாடகம் சென்று கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவனுக்கு கர்வம் ஏற இதை தொடர்ந்து நாடகம் அரங்கேறியதா? என்பதே மீதிக்கதை.

நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்

படத்தில் கதாநாயகர்கள் பிருத்விராஜும், சித்தார்த், நாசர் என்று யாரும் இல்லை, கடைசி வரை திரையில் படத்தை தாங்கி பிடிப்பது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். திரைக்கு பின்னால் தாங்கி பிடிப்பது வசந்தபாலனின் இயக்கமும், நீரவ் ஷோவின் ஒளிப்பதிவும் தான்.

சித்தார்த், பிருத்விராஜ், நாசர் ஆகியோர் தங்களில் அனுபவ நடிப்பை வைத்து பாஸ் மார்க் வாங்கி விடுகின்றனர். அதேபோல் பரதேசி மூலம் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார் வேதிகா. படத்தில் இரண்டாம் கதாநாயகியாக வரும் அனைகா தான் படத்திற்கு ஒட்டவில்லை.

வாழ்த்துக்கள்

கண்டிப்பாக ஏ.ஆர்.ரகுமானுக்கு தான், படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. கிளைமேக்ஸ் நெஞ்சை உறையவைக்கிறது. நாடக கலைஞர்களாக நடித்த அனைவரும் வாழ்ந்து இருக்கிறார்கள். நீரவ் ஷோவின் ஒளிப்பதிவு நாடகத்தை நம் கண்முன் கொண்டு வருகிறது.

வருத்தங்கள்

முதல் பாதி சற்று நீளமாகவும், மெதுவாகவும் நகர்கிறது. அனைகா கதாபாத்திரம், மற்றப்படி ஏதும் இல்லை.

இதுபோல் ஒரு கதையை களமாக எடுக்க வேண்டும் என்று நினைத்ததற்காகவே வசந்தபாலனுக்கு மலர் கொத்துக்களை கொடுத்து வரவேற்கலாம். மெல்ல மெல்ல மறைந்து வரும் நாடக கலைஞர்களின் இன்பம், துன்பம், சிரிப்பு, அழுகை என அனைத்தையும் நம் கண்முன் கொண்டு வந்து நம்மை நிஜ நாடக பார்வையாளராகவே மாற்றியுள்ளார். வாழ்த்துக்கள்+ நன்றி வசந்தபாலன்.
மொத்தத்தில் கண்டிப்பாக காவியத்தில் இடம்பெறுகிறான் இந்த தலைவன்.
நன்றி cineulagam

No comments: