நோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? - நோர்வே நக்கீரா

.

பேரழிவுக்கு வித்தாக இருக்கும் டைனமெட்டைக் கண்டுபிடித்த சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபலின் பிறந்த தினத்தன்று, 10 மார்கழியில் அமைதிக்கான நோபல்பரிசு நோர்வேயில் வளங்கப்பட்டு வருகிறது. நோர்வே அன்று முதல் இன்று வரை அமைதியை விரும்பும் அமைதிக்காகப் பணிபுரியும் நாடு எனக்கருதியதால் அமைதிப்பரிசை நோர்வே கொடுக்கவேண்டும் என்பது அல்பிரட் நோபலில் விருப்பாக இருந்தது. இந்த நோபல் பரிசானது 1901ல் இருந்து தொடர்ச்சியாக நோர்வேயில் இருந்தே வளங்கப்பட்டு வருகிறது.

2014க்கான அமைதிப்பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலா~; சத்தியாதிக்கும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்கும் வளங்கப்படுகிறது. இருவரும் நேற்று ஒஸ்லோ விமானநிலையத்தை வந்தடைந்தார்கள். இம்முறை நோபல்பரிசானது குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியவர்களுக்கு மொத்தம் 278 பேரில் இருவருக்கு வளங்கப்படுகிறது. இந்த நோபல்பரிசு வழங்கும் நிகழ்வில் 6000 குழற்தைகள் பங்கு பற்ற உள்ளார்கள். இப்பரிசுக்கான 16கரட் தங்கப்பதக்கமும் பெரும்தொகை பணமும் காத்துக்கொண்டு இருக்கிறது.இந்தியாவில் மத்தியபிரதேசமான விதி~h மாவட்டத்தில் 11.01.1954ல் பிறந்த கைலா~; சத்தியார்த்தி ஒரு பொறியில்துறையில் முதுமானி பட்டம் பெற்றவர். 25வருடங்களுக்கு மேலாக குழந்தைகளின் உரிமைக்காக திட்டமிட்டுää அமைப்புரீதியாக வரையறுத்து செயற்பட்டு வந்துள்ளார். முக்கியமாக குழந்தைத் தொழிலாளர் பிரச்சனைகளை முடிவுகட்ட ஏழ்மைää கல்வியறிவின்மைää வேலையில்லாப்பிரச்சனைää மக்கள் தொகைப்பெருக்கம்ää சமூக உள்வெளி கட்டமைப்புக்களின் சீர்கேடுகள்ää கல்வி வளங்காமை போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகவும் போராடிவந்தார். முக்கியமாக இவர் குழற்தைத்தொழிலாளர் ஒழிப்பில் 80000க்கு அதிகமான பிள்ளைகளை பாதுகாத்து கல்வியறிவு கொடுப்பதற்காகப் போராடி வெற்றியும் கண்டுள்ளார்.

மலாலா யூசப்சாய் இவர் 12.07.1997ல் பாக்கிஸ்தானில் பிறந்த 17வயதுடைய சிறுமியாவர். இவர் தலிபான் எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சாவின் விழிம்பை எட்டித்தொட்டவர். இவரை மேற்குலகின் உதவியுடன் காப்பாற்றினார்கள். இவர் இஸ்லாத்தில் பெண்களின் கல்வி குறித்துப்போராடி வந்துள்ளார். இதற்கு அவரின் தந்தை ஜியாவுதீன் யூசப்சாய் இன் தாக்கமும் அதிகம் இருந்தது. இவர் தந்தையின் பாடசாலையில் படித்துவரும் வேளை பிபிசியில் பேசும் வாய்புக்கிடைத்தது. அங்கே பெண்கள் கல்வி பற்றிப்பேசிய உரை பெருவரவேற்பைப் பெற்றதால் தலிபான்களால் கொலைமிரட்டல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டது. இவர் பள்ளிப் பேருந்துவில் சென்று கொண்டிருந்தபோது சரமாரியாக தலிபான்களால் சுடப்பட்டு காயமுற்று ஐரோப்பா கொண்டுவரப்பட்டு உயிர்பிழைத்தார். இவர் இலண்டனிலுள்ள பேமிங்காம்பில் தனது படிப்பைத்தொடரும் வேளையும் தனது போராட்டத்தை பெண்கள் கல்விக்காக முன்னையதைவிட மூச்சாக ஈடுபட்டார்.இன்று நோபல்பரிசு பெற்றவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் மலாலா ஆவார்.

இவர் விமானநிலையத்தால் அழைத்துவரப்படும்போது அவர் கூறினார் நான் ஒருமுஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் இஸ்லாத்தில் கல்வி என்பது உரிமையல்ல கடமையாக வேண்டும் என்றார்.

சத்தியாதியும்ää மலாலாவும் அமர்ந்திருந்த கூட்டத்தில் சத்தியாதி மலாலாவைக் கேட்டார் "எனக்கு மகளாக வருகிறாயா" என்று. அதற்கு அவளும் சம்மதித்தாள் இதேவேள்வியை நோபல்குழு தலைவர் யாகலாண்டிடம் கேட்டபோது " நீ அவளை உன்மகளாக ஏற்பாயா" அவர் அழித்தபதில் ஆச்சரியமாக இருந்தது. " "அது உணர்வு சம்பந்தமானதுää நோபல்பரிசு அவர்களின் செயற்பாட்டுக்குக் கொடுக்கப்படுகிறது" என்றுசமாளித்தே பதில் அளித்தார். இங்கேதான் இந்த கீழத்தேய சத்தியார்த்தியையும் மேற்கத்தைய யாகலாட்டையும் ஒரேதராசில் நிறுத்திப்பார்க்க நேர்ந்தது. மனத்தின் முடிவு சொன்னது 'சத்தியார்த்தியின் செயற்பாடு உணர்வு பூர்வமானது" யாகலாண்டின் செய்ற்பாடு கடமை பூர்வமானது. அதாவது ஒரு மிசினும் கடமைபூர்வமானதே என்ற எண்ணத்தை என்மனதில் நிறுத்தலாம்.

விமர்சனம்:-
பேரழிவாயுதங்களுக்கு ஆரம்ப கர்த்தாவான டைனமயிட்டைக் கண்டுபிடித்த அல்பிரட் நோபல் அமைதிப்பரிசுக்காக தன்பணத்தை ஒதுக்கி அதுவும் சுவீடனைச் சேர்ந்த ஒருவர் நோர்வேயை அமைதிப்பரிசை வளங்குமாறு பணித்தமை எதிரும் புதிருமான செயல்களே.

பொறியிலாளர் என்பவர் பொருட்கள்ää தளபாடங்கள் பற்றிய அறிவுடையவர். இப்படிப்பட்ட ஒரு மனிதர் சத்தியாதி குழந்தைகள்ää குழந்தைத்தொழிலாளிகளின் உரிமைக்காக தன்னை அர்ப்பணித்தார் என்பதும் எதிரும் புதிருமானதே. கீழத்தேய நாடுகளில் கல்வி என்பது தொழில்ää பணம்ää புகழ் சம்பாதிப்பதற்காகவே என்பதை இவரின் வாழ்க்கை சுட்டிக்காட்டுகிறது. கல்வியானது உணர்வுää ஆர்வம் என்பனவற்றில் அடிப்படையில் அமைந்தால் மட்டுமே கல்வி வாழ்வுடன் ஒன்றியமாக அமையும்.

மலாலாவுக்குக் கொடுக்கப்படும் நோபல்பரிசின் சமிஞ்சை என்ன? பெண்கள் கல்விக்காக போராடும் பலர் இருந்தபோதிலும் மலாலாவுக்கு எதற்கு இந்தப்பரிசு? முக்கியமாக இவர் தலிபான் எனும் இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக பேசினாள். அவர்களால் தாக்கப்பட்டாள். இந்த நோபல்பரிசானது இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு விடும் எச்சரிக்கை சமிஞ்ஞையே ஆகும். நோபல்குழுத்தலைவர் தன்செவ்வியில் கூறினார் குழந்தைகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் கொடுக்கும் நம்பிக்கை என்றார். நோர்வே இந்த சமிஞ்ஞை நாளை இன்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதச் செயல்களுக்கு வித்திடும் என்பது உறுதி.

எதற்காக இப்பரிசு இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டது? முரண்பாடுகளைக் கொண்டு இந்தியாää பாக்கிஸ்தான் போன்ற நாட்டவர்களுக்கும்ää முரண்பாடுடைய மதங்களைக் கொண்டவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம்தான் என்ன? முரண்பாடுகளைத் தாண்டி குழந்தைகளின் உரிமைக்காகப் உழைத்தவர்கள் என்பதற்காக இருக்கலாம். ஆனால் இப்படிபட்டவர்கள் பலர் உலகம் முழுவதும் உள்ளனர். இருந்தும் இவர்கள் இருவரும் ஐரோப்பாவுடன் அதிகம் தொடர்வுடையவர்கள் என்பதை யாரும் மறந்துவிடல் ஆகாது. சத்தியார்தியினதும் மலாலாவினதும் பிற்புலத்தைப் பார்த்தால் இது புரியும்.

இவை அனைத்தையும் மீறி நோர்வே அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையதா? என்ற கேள்வி மனதை இடறத்தான் செய்கிறது. உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிpவாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் நேட்டோவினூடாக நிலைநிறுத்தியுள்ளது. ஆயுதங்களையும் போரையும் கட்டிக்காக்கும் நோர்வே அமைதிப்பரிசை வளங்க உரித்தடையா?

அல்பெர்ட் நோபலில் இருந்து இன்றுவரையுள்ள அமைதிக்கான நோபல் பரிசில் எதிரும் புதிருமான நிகழ்வுகளையே காணலாம். நோபல்பரிசே எதிரும் புதிருமானதா?

எழுதியவர் நோர்வே நக்கீரா 10.12.2014

No comments: