புதிய பெயர் மாற்றம் 24.11.2014

.

எங்கள் அன்புக்குரிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும், இணையதள ஆசிரியர்களுக்கும்
எங்கள் பணிவன்பான வணக்கம்.
நீங்கள் தொடர்ந்தும் அளப்பரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றமைக்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
இதுவரை காலமும் விழுதல் என்பது எழுகையே என்ற பெயரைக் கொண்ட குழுமம் சார்பாக நெடுந்தொடரை இணையத்தளங்களில் நெடுந்தொடரைப் பிரசுரித்து வருகின்றோம். இக்கதைப்பிரிவு தொடந்து தனது பணியை உங்களுக்காக தொடரும்.
இன்றாகிய 24.11.2014 இருந்து எமது பாரிய தேடுதலின் பயனாக ஒன்றுபட்ட உலக எழுத்தாளர்களின்; ஒற்றுமையை நினைத்து „தமிழ் எழுத்தாளர் இணைய அகம்“ என்ற பொதுவான பெயருடன் இனிவரும் காலத்தில் தனது தமிழ் இலக்கியப் பயணத்தை பன்முகப் பணியாக மேற்கொள்ளும்.
இது தொடர்பான முன்னோட்ட அறிவித்தலை எமது வெளியீட்டுப் பொறுப்பாளர் பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் முன்பு (விழுதல் தொடர்கதை முகநூலில்) இன்று திமிழ் எழுத்தாளர் இணைய அகம் Tamil Writers Net Portal ஆக முகநூலாக மாறி உள்ள தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் இன்று இந்த இணைப்பு பணியில் நேரகாலம் பாராது தோழமையுடன் பணியாற்றிவரும் ஏலையா சஞ்சிகையின் பொறுப்பாசிரியரகவிருந்த திரு- ஏலையா முருகதாசன் அவர்களின் பாரிய முயற்சிகளே இன்றைய எமது வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது.
நெடுந்தொடரைத் தொடர்ந்து கவிதைத் தொடரையும் ஆரம்பிப்பது எனத் திட்டமிடப்பட்டு அதற்கான நடைமுறையை ஆரம்பித்துள்ளோம்.
இன்று எழுத்தாளர்கள் வாசகர்கள் என நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகியுள்ளோம். உங்களுடன் நாங்கள் கொண்டுள்ள ஐக்கியத்திற்கு எமக்கிடையிலிருக்கும் உண்மையான நேர்மையான நன்மதிப்பும் பெரும் நம்பிக்கையுமே மூலதனமாகும்.


பல்லாயிரம் மைல்களை கொண்ட இடைவெளிகளில் நாங்களும் நீங்களும் இருந்த போதிலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையே இததொடர்கதை வெற்றிகரமாக பயணிப்பதற்கான காரணம்.
இது எப்படிச் சாத்தியமானது எனச் சிந்தித்த போது நாமனைவரும் ஒரு குடும்பம் என்ற சிந்தனை மேலோங்கி, குடும்பம் வாழும் இடம் வீடேயாகும்.வீட்டுக்கு இன்னொரு பெயர் அகம் என்பதாகும் எனக் கொண்டு „அகம்“ என்ற பெயரே பொருந்துமெனக் கொண்டோம்.
அதனாலேயே „தமிழ் எழுத்தாளர் இணைய அகம்“ Tamil Writers Net Portal எனப் பெயரிட்டுள்ளோம்
தமிழ் என்ற பொதுக்குறியீடு உலகத் தமிழர் அனைவரையுமே குறிக்கும்.
எழுத்தாளர் என்பது எழுத்தின் துணை கொண்டு தமிழர் சமூகத்தை அறிவுசார் பரிணாமத்தை நோக்கிச் செல்ல வைக்கின்ற ஆற்றலாளர்களைக் குறிப்பதாகும்.
எழுத்து என்பது ஒரு ஊடகமென்பதும் அது வரலாற்றைச் சொல்லும் படிமுறை ஆவணமுமாகும். இது பல அலகுகளைக் கொண்டதாகும்.சிறுகதை, நாவல், தொடர்கதை, கட்டுரை, கவிதை என இன்னுமாய் விரிவடைந்து பெரும் பிரபஞ்சமாய் பரந்து நிற்பதே எழுத்தின் ஆளுமையாகும்.
கல்வெட்டு, ஏட்டுச்சுவடிகள், காகிதம் என அவை மீது பயணித்த எழுத்த நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு கணிணிக்கூடாக உலகை வலம் வருகின்றது.
உங்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு கணிணி ஊடாக இலக்கியப் பயணத்தை மேற்கொள்வதையே „இணைய“என்ற சொல் குறித்து நிற்கின்றது.
அன்பும் பாசமும் விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் குடும்ப உறவுகளுக்குள் இருப்பது போல நாமெல்லோரும் ஒரே மனமாக எமக்குள்ளும் ஆழமான நம்பிக்கையுடன் ஐக்கியமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே அகம் என்ற பெயரை இட்டுள்ளோம்.
ஆங்கிலப் பதத்தில் Tamil Writers Net Portal . என்பது portal கோட்டையின் கதவைக் குறிப்பதாகும்.
தமிழின வரலாற்றில் கோட்டை கொத்தளம் அரண்மனை அமைத்து ஆட்சி செய்த மன்னர்கள் கூட தமிழை வளர்த்த புலவர்களை தமக்குச் சமமாக மன்னர்களாக கருதினர்.தமது சிம்மாசனத்தில் இருத்தி அவர்களைக் கௌரவித்தனர்.
எனவே புலவர்களின் நீட்சியான எமது எழுத்தாளர்களை மன்னர்களாகவே நாம் காண்கிறோம். இவர்கள் வாழும் உலக நாடுகளை நாங்கள் ஒரு கோட்டையாகக் கருதி, இன்னும் இன்னுமாய் உலகெங்கும் வாழும் எழுத்துப்புலவர்களை உள்வாங்குவதற்கு எழுத்துலகக் கோட்டையின் உள்புகும் வழி என்றும் திறந்திருக்கும் என்பதைக் குறிக்கவே இப்பெயரை இட்டுள்ளோம்.
புதிய இப்பெயரில் இடது புறத்தில் கணிணியின் மத்தியில் தராசு இருப்பது போலவும் மத்தியில் உலகப் படமும் வலது புறத்தில் ஒரு புத்தகமும் இருக்கின்றன.
இடது புறத்திலிருக்கும் கணிணிப் படம், கணணிக்கூடாகவே இலக்கியப் பயணம் என்பதையும், அதன் மத்தியிலிருக்கும் தராசு வாகர்களிடமிருந்து நடுநிலையான விமர்சனங்களை வேண்டி நிற்கும் கருத்தைக் கொண்டதுமாகும்.
மத்தியிலிருக்கும் உலகப்படம் நாங்கள் வாழும் பூமியே எமது வாழ்விற்கான அடிப்படைத்தளமானது என்பதைக் குறிப்பதாகும்.
வலது புறத்திலிருக்கும் புத்தகம் அறிவு என்பதைக் குறிப்பதாகும். எனவே நவீனம், வாழ்வின் தளம், அறிவு எனபவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதைக் குறிப்பதற்கே இச்சின்னங்களை இட்டுள்ளோம்.
இதுவரை காலமும் நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு பணிந்து வணங்கி நன்றி செலுத்துகிறோம். இனிவருங்காலத்தில் இன்னும் பல இலக்கியத் திட்டங்களை உங்களுடைய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் உள்வாங்கி செயல்படுத்துவோம் இணைந்து செல்வோம் அனைவரும் வாருங்கள் என பணிவன்பாக அழைக்கிறோம்.
அன்புடன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal (Tamil.WNP)
தொடர்புகளுக்கு :- E.mail - infotamil@gmx.de என்ற மின்னஞ்சலில் எம்முடன் தொடர்புகைளை ஏற்படுத்தலாம்.
நன்றி
Mr.E.K.Krishnamoorthy
IM SPREE 10
59846 SUNDERN
GERMANY
Tel: 0049 15229510307
Office Tp 0049 1779750795
Skype pannagam1
www.pannagam.com

No comments: