சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 2014 - --- அன்பு ஜெயா

.



 சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் அக்டோபர் 101112 தேதிகளில் சங்கத் தமிழ் மாநாட்டினை வெகு சிறப்பாக நடத்தினர்.

முதல் நாள் நிகழ்வு சிட்னி துர்க்கை அம்மன் வளாகத்தில் தமிழர் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, தாள வாத்தியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மன்றத் தலைவர் திரு மகேந்திரன் இரத்தினம் தலைமையுரையாற்றினார்.

இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார்பேராசிரியை உலகநாயகி பழனி இருவரும் சங்க இலக்கியம் குறித்து உரையாற்றினர். தில்லி தமிழ்ச் சங்கத்திலிருந்து திரு ராகவன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டு மலரினை பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வெளியிட்டார்.





மாநாட்டில் முனைவர் சந்திரிகா சுப்ரமணியனும் அவருடைய மகள் நிவாசினியும் எழுதிய முதல் மொழி தமிழ் என்ற நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் இந்நூலை வெளியிட்டார். இந்த நூல் இலவச விநியோகத்திற்கு என்பது குறிப்பிடத்தக்கது. பல்வைத்தியக்கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய கருத்தரங்கில், சங்க இலக்கியத்தில் வீரம், காதல் போன்ற தலைப்புகளில் சிட்னி நகர் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.




தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கருத்தரங்கம்வில்லுப்பாட்டு, நடனம்நாடகம் முதலிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சங்கத் தமிழ் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்குக் கோப்பைகளும்சான்றிதழ்களையும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வழங்கினார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சென்னையிலிந்து திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அன்பளிப்பாக அனுப்பியருந்த பேராசிரியர் சி. இலக்குவனார் எழுதிய நூல்களும் பரிசாக வழங்கப்பட்டன.




மாநாட்டின் இறுதி நாளன்று தமிழ்ப் பணியாற்றிய சான்றோர்களுக்குக் கீழ்காணும் விருதுகள் வழங்கப்பட்டன.

தொல்காப்பியர் விருது பெற்றவர்கள்-
பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
பேராசிரியை உலகநாயகி பழனி
திரு மகேந்திரன் இரத்தினம்



தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது பெற்றவர்கள்
பல்வைத்தியக் கலாநிதி இளமுருகனார் பாரதி 
திரு பஞ்சாட்சரம்
திருமதி கனகாம்பிகை ஜெகந்நாதன் 
எழுத்தாளர் திரு மாத்தளை சோமு
திரு அன்பு ஜெயா.



மாநாட்டின் மூன்று நாட்களும் திருமதி காந்திமதி தினகரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். சில மாணவர்களும் அவருடன் சேர்ந்து உதவி புரிந்தனர். இறுதி நாளன்று மன்றத்தின் செயலாளர் திரு பஞ்சாட்சரம் நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.


No comments: