சங்க இலக்கியக் காட்சிகள் 28- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காவலிட்டாள் தாய்! தாவிச் சென்றாள் மகள்!


அவள் பருவமடைந்த இளம் நங்கை. மிகவும் அழகானவள். அவளது அழகைப் புகழாதவர்களே இல்லை. அவளின் அழகிய தோள்களைப் பார்த்துப் பார்த்து அடிக்கடி அவளின் தாயே பாராட்டிப் பெருமிதம் அடைவாள். அவ்வளவு வனப்பான உடலமைப்பு அவளுக்கு. அந்த அழகில் தம்மைப் பறிகொடுத்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களில் ஒருத்தன் மீது அவளுக்குக் காதல் மலர்ந்தது. இருவரும் கண்ணால் கதைபேசி மகிழ்ந்தார்கள். கண்டு கொள்ளும் இடங்களில் உறவாடி நெகிழ்ந்தார்கள். இந்த விடயம் அவளின் தாய்க்குத் தெரிய வந்தது. மகள் எந்த ஆண்மகனுடனும் தொடர்பு கொள்வதை அவள் விரும்ப வில்லை. அதனால் மகளுக்குக் கட்டுக்காவல் போட்டாள். வெளியில் எங்கும் செல்லாதபடி அவளைத் தடுத்தாள். மகளோää தன் காதலனுடன் சேர்வதுதான் தனது பெண்மைக்குச் சிறப்பானது என்று நினைத்தாள். மகளின் அழகைப் புகழ்ந்து பாராட்டும் தாய் வேறு யார்கண்ணிலும் அவள் பட்டுவிடக்கூடாது என்பதிலே மிகவும் கரிசினையாக இருந்தாள்.



ஆனால் அவளது மகளின் காதலனோ அஞ்சா நெஞ்சம் கொண்டவன். அவன்மீது அவள் தன் உயிரையே வைத்திருந்தாள். ஒருநாள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அந்த ஊரைவிட்டு வெளியேறினார்கள். கடும் புலிகள் வாழும் காட்டுவழியூடாகத் தேரிலே நகர்ந்து சென்றார்கள். வெப்பம் மிகுந்த வீதிகளைக் கடந்து சென்றார்கள். அப்போது வழிப்போக்கர்கள் சிலர் எதிர்த்திசையிலே வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தனது ஊரினூடாகச் செல்பவர்கள் என்பதை அறிந்த அவள் அவர்களிடம் தங்களைப் பற்றிக் கூறினாள். என்னதான் இருந்தாலும் தனது தாய் தன்னைக் காணாமல் சோகத்தில் தவிப்பாள்ää தனக்கு என்ன நேர்ந்ததோ என்ற தெரியாமல் துன்பத்தில் துடிப்பாள் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் தனது காதலனுடன் தான் செல்வதைத் தாய்க்குத் தெரியப்படுத்த முயன்றாள்.
அதேவேளை தனது தாய் தன்னைக் கட்டுக்காவலில் வைத்திருந்தமை கொடுமையான செயல் என்பதை அவளுக்கு உணர்த்திää அஞ்சா நெஞ்சம் கொண்ட தன் காதலனுடன் விருப்பத்தோடு தான் செல்வதை அவளுக்கு உணர்த்தவும் விரும்பினாள். அதனால்தான் தனது தாயின் செய்கை தவறானது என்பதையும் வழிப் போக்கர்களுக்கு எடுத்துக் கூறினாள். தான் காதலனுடன் மகிழ்ச்சியாகச் செல்வதாகத் தெரிவிக்கவே அவனது அச்சமற்ற உள்ளத்தைப்பற்றியும்ää அபாயம் நிறைந்த புலிகள் வாழும் காட்டுவழியையும் கடந்து தேரிலே செல்வது பற்றியும் பெருமிதத்துடன் தன் தாயிடம் சொல்லும்படி கூறினாள்.

வழிப்போக்கர்கள் இப்போது அவளது ஊரினூடாகச் செல்கிறார்கள்.  அங்கே தனது மகளைக் காணவில்லையென்று சொல்லி அழுதுகொண்டிருந்த தாயைக் காண்கிறார்கள். அவளிடம் அவளின் மகளைத் தாம் கண்டமையைப் பற்றிச் சொல்கிறார்கள்.

நீளமான சுற்றுச் சுவராகிய மதிலால் பாதுகாக்கப்படும் நல்ல வீட்டிலே இருந்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பவளே! நீ முதன்முதலில் பெற்றெடுத்த உனது மூத்த மகள்ää துன்பம்கொடுக்கும் யானைகளும் புலிகளும் அலைந்துதிரிகின்ற கொடிய காட்டுவழியையும் கடந்துää தான் விரும்பிய காதலனுடன் ஒன்று கலந்தவளாகச் சென்றுகொண்டிருக்கின்றாள்.

இவ்வளவு பெரிய பாதுகாப்பான அழகிய நல்ல வசதியான வீட்டில் வாழ்வதை விடுத்துää உன்னையும் பிரிந்துää கொடிய விலங்குகள் வாழும் காட்டினூடாகச் செல்லவேண்டிய துன்பத்தையும்ää அபாயத்தையும் எதிர்கொண்டு அவள் செல்கிறாள் என்றால் அவள் அந்த அளவுக்குக் காதல்வசப்பட்டுள்ளாள் என்பதுதானே காரணம். அவளது காதலை நீ அங்கீகரித்து அவள் விரும்பியவனுக்கே அவளை மணமுடித்துக் கொடுத்திருந்தால் இப்படி அவள் சென்றிருக்கமாட்டாள்ää நீயும் துன்பப் பட்டிருக்க மாட்டாய் என்று சொல்கிறார்கள்.
“நயந்த காதலற் புணர்ந்து சென்றனள்” என்பதுஅவள் விரும்பியவனோடு இணைந்து செல்கிறாள்ää வேறென்னதான் செய்வாள் என்ற கருத்தை அழகாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

இத்தகைய காட்சியைப் புலப்படுத்தும் பல பாடல்களிலே ஐங்குறுநூறிலே இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

“கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ! ஆறுசென் மாக்கள்
நற்றோள் நயந்து பாராட்டி
எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே”

(ஐங்குறுநூறு. பாலைத்திணை. பாடியவர்: ஓதலாந்தையார்.  பாடல் இல: 385)

இதன் கருத்து:

எனது ஊரினூடாகச் செல்லும் வழிப்போக்கர்களாகிய மனிதர்களே! நீங்கள் வாழ்க! எனது அழகியதோள்களைப் பார்த்துப்பார்த்துப் பாராட்டிய எனது தாய் (நான் காதலனுடன் சேர்ந்து)என் பெண்மையைச் சிறப்படைய விடாமல் என்னைக் கட்டுக்காவலில் வைத்து அறமில்லாமல் கொடுமையாக நடந்துகொண்டாள். அதனால் தமது இரையைக் குறிதப்பாது தாக்கிப் பெற்றுக்கொள்ளும் வேங்கைகளைக் கொண்ட மலைப்பகுதிகளையும்ää வேறு பல அபாயங்களையும் தாண்டி அச்சமற்ற எனது காதலனோடு தேரிலே சென்றுவிட்டேன் என்று அவளிடம் சொல்லுங்கள். (என்று காதலனோடு செல்லும் தலைவி கூறுகின்றாள்)

“புன்கண் யானையொடு புலிவழங் கத்தம்
 நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே
 நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
 இடும்பை யுறுவிநின் கடுஞ்சூன் மகளே!”
(பாடல் இல: 386)
இதன் கருத்து:

நீண்ட சுற்றச் சுவரிரால் காக்கப்படுகின்ற நல்ல வீட்டிலேயிருந்துகொண்டு உன் மகளை நினைத்துத் துன்பத்தால் கலங்கிக் கொண்டிருப்பவளே! நீ உன் முதல் பிள்ளையாகப் பெற்ற மகள் தான் விரும்பிய காதலனுடன் ஒன்று சேர்ந்தவண்ணம் துன்பம் விளைவிக்கும் யானைகளும்ää புலிகளும் அலைந்து திரியும் கொடிய காட்டுவழியையும் கடந்த சென்றாளே! (நாங்கள் அதனைக் கண்டோமே)
(என்று வழிப்போக்கர்கள்ää மகளைக்காணாமல் அழுதுகொண்டிருக்கும் தாயிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது)

No comments: