உலகச் செய்திகள்

.
* ஐ. எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த 17 வயது சிறுவன் - 
  சிலுவையில் அறையப்பட்டு படுகொலை

*பெங்களூர் சிறையயில் இருந்து வெளியேறினார் ஜெயலலிதா

சீனாவில் நிர்மாண தளத்தில் மோதல்: 4 பணியாளர்கள் உயிருடன் எரித்து 
   படுகொலை

லிபிய பென்காஸியில் உக்கிர மோதல்: 12 பேர் பலிஇ 10 பேர் காயம்

ஐ. எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த 17 வயது சிறுவன் - சிலுவையில் அறையப்பட்டு படுகொலை
சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவனை போராளிகள் பகிரங்கமாக 3 நாட்களாக சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்துள்ளனர். 
இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது. 
ரக்கா நகரிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த மேற்படி சிறுவன் அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் 500 துருக்கிய லிரா பெறுமதியான பணத்தைப் பெற்ற நிலையில் போராளிகளால் பிடிக்கப்பட்டான். 


இதனையடுத்து அந்த சிறுவனை சிலுவையில் அறைந்த போராளிகள் அவனது கழுத்தில் மேற்படி சிறுவன் மத கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டதுடன் தனது மதத்தையும் கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டு கடதாசி அட்டையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. 
மேற்படி சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் காட்சி ஐ.எஸ். போராளிகளால் சிறுவனது கழுத்தில் தொங்கவிடப்பட்டது.
*********************************************************************************
பெங்களூர் சிறையயில் இருந்து வெளியேறினார் ஜெயலலிதா
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்து வெளியேறினார்.
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா கார் மூலம் ஹெ.ஏ.எல் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
சிறை வளாகத்தில் இருந்து வெளியேவரும் ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரம் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.
ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா விமான நிலையம் சென்று  அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளார்.
11 பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர சிறையில் இருந்து வெளியேறினார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 27ஆம் திகதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராததையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்தது.
இதேவேளை, ஜெயலலிதா ஜெயராமுக்கு நேற்று இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
********************************************************************************
சீனாவில் நிர்மாண தளத்தில் மோதல்: 4 பணியாளர்கள் உயிருடன் எரித்து படுகொலை
தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற மோதல்களில் கிராமவாசிகளால் 4 நிர்மாண பணியாளர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
யுனான் மாகாணத்தில் புயு கிராமத்திலுள்ள நிர்மாண தளத்தில் இடம்பெற்ற மோதல்களால் மொத்தம் 6 நிர்மாண பணியாளர்களும் இரு கிராம வாசிகளும் உயிரிழந்துள்ளனர்.
தமது பிராந்தியத்தில் குறிப்பிட்ட வாணிப கட்டடம் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் கிராம வாசிகள் அதிருப்தியடைந்திருந்தமையே மேற்படி மோதல்களுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததால் பொலிஸாரால் அந்த நிர்மாணத்தளத்துக்குள் நுழைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமற்று இருந்ததாக கூறப்படுகின்றது.
பலியான கிராமவாசிகள் இரும்புக் குழாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 
******************************************************************************
லிபிய பென்காஸியில் உக்கிர மோதல்: 12 பேர் பலிஇ 10 பேர் காயம்
லிபிய பென்காஸி நகரில் படையினருக்கும் அந்நகரை  தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள  மதவாத குழுவினருக்குமிடையில் இடம்பெற்ற  மோதல்களில் குறைந்தது  12 பேர் உயிரிழந்துள்ளதுடன்  10 பேர்   காயமடைந்துள்ளனர்.

முன்னாள் இராணுவ ஜெனரல் கலிபா  ஹம்தாருக்கு விசுவாசமான படையினர் மேற்படி நகரிலிருந்து போராளிகளை பின்வாங்கச்செய்யும் முகமாக தாக்குதல்களை முன்னெடுத்ததையடுத்தே மோதல்கள்    ஆரம்பமாகியுள்ளன.
2011ஆம் ஆண்டு மும்மர் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் லிபியா  போராட்டக்குழுக்களுக்கிடையிலான அதிகாரப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் பென்காஸியில் போராளிகளுக்கு  எதிரான தாக்குதல் நடவடிக்கையில்  பீரங்கிகளும் உலங்குவானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
பலியானவர்களில் நபரொருவரும் 3 பிள்ளைகளும்  உள்ளடங்குகின்றனர்.
நன்றி வீரகேசரி 

No comments: