பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்
விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களது புகைப்படங்கள் வெளியீடு
இஸ்ரேல் - காஸா பிராந்தியத்தில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு - மோதல்களில் பலியானவர்கள் தொகை 500 ஆக உயர்வு
விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கருதப்படும் 'பக் ஏவுகனை" ரஷ்யாவுக்கு கடத்தும் புகைப்படங்கள் வெளியீடு
விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு
இஸ்ரேலியர்களால் சுட்டுக் கொல்லப்படும் பாலஸ்தீனத்தின் அப்பாவி இளைஞன்...
தாய்வானில் கோர விமான விபத்து: 51 பேர் பலி
நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்
அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி
உக்ரேனிய பிரதமர் பதவி விலகல்
=======================================================
பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்
21/07/2014 பலஸ்தீன - காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு நடத்திய உக்கிர ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் பலியானதுடன் 400 பேருக்கும் அதிகமானோர் காய
மடைந்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி ஷெல் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ளன. இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஷியேயா பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட ஹமாஸ் அதிகாரியான காலில் அல்--ஹேயாவின் வீட்டை இலக்கு வைத்து நடத்திய ஷெல் தாக்குதலில் அவரது மகன், மருமகள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் அன்றைய தினம் அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களில் பலஸ்தீன புகைப்படக்கலைஞர் காலெத் ஹம்மாட் துணை மருத்துவ உத்தியோகத்தர் புவாத் ஜபார் ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி புகைப்படக்கலைஞரும் துணை மருத்துவ உத்தியோகத்தரும் பயணித்த அம்புலன்ஸ் வண்டி மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.அவர்கள் இருவரும் தாக்குதல்களில் காயம
டைந்தவர்களை மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பிராந்திய அவசர சேவைகள் பேச்சாளர் அஷ்ரப் அல்--கட்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்டாருக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ,பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பிராந்திய பதற்ற நிலை குறித்து கலந்து
ரையாடவுள்ளார்.
இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்குமிடையிலான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக அந்தப்பிராந்தியத்துக்கான பயணத்தை பான் கீ மூன் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
கடந்த 8 ஆம் திகதி ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 350க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெருமளவானோர் பொதுமக்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையானது கடந்த வியாழக்கிழமை காஸா பிராந்தியத்துக்கு தரைவழி படையினரை முதன்முதலாக அனுப்பியிருந்தது.இந்நிலையில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தரை வழித் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எல்லைப் பிராந்தியத்திலான சுரங்கங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைவீரர்களுக்குமிடையே சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இரு இஸ்ரேலிய படைவீரர்கள் பலியானார்கள்.
இந்நிலையில் காஸாவிலுள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள 50,000 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் உதவி விநியோகங்கள் தொடர்பில் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காஸாவின் எகிப்திய மற்றும் இஸ்ரேலிய எல்லைகளுக்கு அருகில் பெருமளவான மக்கள் இடம்பெயர்வு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அதிகாரி கூறினார்.
இந்நிலையில் இஸ்ரேல் -- காஸாவுக்கு இடையில் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுப்பதற்காக எகிப்து, கட்டார், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் முன்னேற்றத்தை எட்டத் தவறி யிருந்தன.
அதேசமயம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவுடன் சனிக்கிழமை சந்திப்பை மேற்கொண்ட பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்,யுத்த நிறுத்தமொன்றுக்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான தனது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூறினார்.
கட்டாரில் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பான் கீ மூன் குவைத், எகிப்து, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். நன்றி வீரகேசரி
விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களது புகைப்படங்கள் வெளியீடு
21/07/2014 கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்து சிதறிக் கீழே விழுந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களில் 22 சிறுவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி சிறுவர்கள் தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்கவும் உறவினர்களை சந்திக்கவும் விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விமான அனர்த்தத்தில் உயிரிழந்த 3 பாலகர்களில் ஒருவரான கேலா தோஸ் (21 மாதம்) மார்னிக்ஸ் வான் டென் ஹென்ட் (12 வயது) அவரது சகோதரர் பியாஸ் (15 வயது) சகோதரி மார்கயுக்ஸ் (8வயது) இந்தோனேசியாவிலுள்ள தமது பாட்டியின் கல்லறைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த மார்டின் போலிஸன் (5வயது) அவரது சகோதரி ஸ்ரி (3வயது) மலேசியாவைச் சேர்ந்த அப்ஸல் ஜியீ (17வயது) அவரது சகோதரர் அபிப் (19 வயது) மற்றுமொரு சகோதரரான அப்ருஸ் (13வயது) சகோதரியான மார்ஷா (15வயது) சகோதரர்களான மோ மஸ்லின் (12வயது) ஒரிஸ் (8வயது) அவர்களது சகோதரியான எவி (10 வயது) பாலிக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற சகோதரிகளான ரெஸ் துறுக் (10 வயது) எவி (8 வயது) தமது பெற்றோர் மற்றும் இரு சகோதரர்கள் சகிதம் உயிரிழந்த நெதர்லாந்து சகோதரிகளான அமெல் வெல்ஸ் ஜின்ட் விடுமுறை சுற்றுலா மேற்கொண்ட வொதர் ஸ்மோலென் பேர்க் மற்றும் அவரது சகோதரி கறிஜின் தனது நெதர்லாந்து தந்தை மற்றும் இந்தோனேசிய தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த யெலெனா கிளாறிக் ஹுயிஸென் நெதர்லாந்தைச் சேர்ந்த வான் வெல்ட்ஹுயி ஸன் தம்பதியின் பச்சிளம் பாலகனான மகன் ஆகியோரது புகைப்படங்களே மேற்படி வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ளடங்குகின்றன. நன்றி வீரகேசரி
இஸ்ரேல் - காஸா பிராந்தியத்தில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு - மோதல்களில் பலியானவர்கள் தொகை 500 ஆக உயர்வு
21/07/2014 இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்திலுள்ள போராளிகளுக்குமிடையே உடனடி யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது.

மேற்படி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிகெய்ரோ சென்றுள்ள நிலையிலேயே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸா பிராந்தியத்திலான தாக்குதல் நடவடிக்கையை இரு வாரங்களுக்கு முன் இஸ்ரேல் ஆரம்பித்ததிலிருந்து 500க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் பலர் பொது மக்களாவர்.
அதேசமயம் இஸ்ரேலிய தரப்பில் 18படை வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி மோதல்களில் அதிகளவானோர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். அன்றைய தினம் 13 இஸ்ரேலிய படை வீரர்களும் 100 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கருதப்படும் 'பக் ஏவுகனை" ரஷ்யாவுக்கு கடத்தும் புகைப்படங்கள் வெளியீடு
22/07/2014 மலேசிய எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பக் ஏவுகணை முறைமை கிழக்கு உக்ரேனிய நகரொன்றிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ டிரக் வண்டியொன்றில் கடத்தப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரால் எடுக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய எல்லையிலுள்ள பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வந்த டிரக் வண்டியை இரு கிலோமீற்றர் பின் தொடர்ந்து குறிப்பிட்ட வாகன சாரதி படமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதையொத்த இரண்டாவது டிரக் வண்டி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு
23/07/2014 கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார்.
அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ரஷ்யர் ஒருவரால் முதன்முதலாக டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் குறிப்பிட்ட நேரத்துக்குள் உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி

காஸா நகரில் அயலிலுள்ள ஷிஜாயியாஹ் பிரதேசத்தில் பலஸ்தீன ஆதரவு சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான முஹமட் அப்டெல்லாவால் இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் கடும் வான் தாக்குதலுக்கு உள்ளான பிரதேசத்தில் குறிப்பிட்ட பலஸ்தீன இளைஞருக்கு உதவும் முகமாக அவருடன் தானும் ஏனைய செயற்பாட்டாளர்களும் சென்ற போதே அந்த இளைஞர் பிறிதொரு இஸ்ரேலிய சின்னப்பர் தாக்குதலில் பலியானதாக அப்டெல்லாஸ் கூறினார்.
எனினும் இந்த வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என அதனை வெளியிட்டுள்ள பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நன்றி வீரகேசரிதாய்வானில் கோர விமான விபத்து: 51 பேர் பலி
23/07/2014 தாய்வானில் அவசரமாக விமானம் தரையிரங்கியபோது ஏற்பட்ட கோர விபத்தில் 51 பேர் பலியாகியுள்ளதோடு 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்
24/07/2014 கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களது சடலங்கள் நெதர்லாந்துக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அங்கு அந்த சடலங்களை அடையாளம் காண்பதற்கான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த 298 பேரில் 193 பேர் நெதர்லாந்து பிரஜைகளாவர்.

இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நெதர்லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் 200 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்றிய பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சடலங்களை ஒப்படைப்பதை தாமதப்படுத்துவதுடன் ஆதாரங்களை மாற்றிவருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

விமான அனர்த்தம் இடம்பெற்று 4 நாட்களின் பின் சுமார் 200 சடலங்களுடன் குளிரூட்டப்பட்ட புகையிரதம் உக்ரேனிய அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள கார்கிவ் நகரை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.இதனையடுத்து புதன்கிழமை காலை அவற்றில் 40 சவப்பெட்டிகள் கார்கிவ் விமான நிலையத்திலிருந்த இரு இராணுவ விமானங்களில் ஏற்றப்பட்டன.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் தூதுவர்களும், அதிகாரிகளும், படைவீரர்களும் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நெதர்லாந்தின் எயின்ஹோவன் விமான நிலையத்தை புதன்கிழமை மாலை முதலாவது விமானம் வந்தடைந்துள்ளது.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் அந்நாட்டு அரச குடும்பத்தினரும் சமுகமளித்திருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.
அதேசமயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்சியாளர்களால் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி தரவு உபகரணங்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவை பார்ன்பரோவிலுள்ள விமான விபத்துக்கள் தலைமையகத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதில் ரஷ்யா பொறுப்பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்தத்தில் ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தொடர்பு பட்டதற்கான சான்று எதுவும் இல்லை என அமெரிக்க சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சான்றுகளை சமர்பித்துள்ளனர்.
ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சூழ்நிலையின் கீழ் கிழக்கு உக்ரேனில் இருந்து ஏவப்பட்ட எஸ். ஏ.11 ஏவுகணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரிஅல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி

குறித்த விமானத்தில் சென்ற 6 விமான ஊழியர்கள் உட்பட 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்டு 50 ஆவது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரிஉக்ரேனிய பிரதமர் பதவி விலகல்
25/07/உக்கிரேனிய பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியுக் வியாழக்கிழமை பதவி விலகியுள்ளார்.

அதேசமயம் அவரின் பதவி விலகல் இடம்பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் இரு கட்சிகள் ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தன.
ரஷ்யாவின் முகவர்களாகவுள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றும் வகையில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வழிவகை செய்யும் முகமாகவே அந்த கட்சிகள் விலகியிருந்தன.
மேற்படி, கட்சிகளின் நடவடிக்கைக்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ வரவேற்பளித்துள்ளார்.
பிரதமர் அர்ஸெனியின் பதவி விலகலானது கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போருக்கு நிதிவசதி அளித்தல் மற்றும் 298 பேர் பலியாவதற்கு காரணமான மலேஷிய எம்.எச். 17 விமான அனர்த்தத்துக்கு பின்னரான நிலைமைகளை கையாளுதல் என்பன தொடர்பில் போராடி வரும் உக்ரேனின் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளை பெரிதும் பாதிப்பதாக அமைவதாக கூறப்படுகிறது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment