தாயகத்தைப் பிரிந்த நாள் முதல் கதியற்றவர்களாகி ..........

.

தாயகத்தைப் பிரிந்த நாள் முதல் கதியற்றவர்களாகி அகதி எனும் பெயரோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேற்குலகம் எமைக் கை நீட்டி அழைத்து நேசக் கரத்துடன் தம் வாசற் கதவுகளை எமக்காகத் திறந்து வைத்திருந்தாலும் நாம் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள் எண்ணில் அடங்காது. தாயகத்தையும், எம் தாய் மண்ணையும் பிரிந்த நாள் முதல் என்றும் நெஞ்சில் ஊர் நினைப்பது வாட்ட எம் நாட்களை நகர்த்துகின்றோம். 

புலம் பெயர்ந்தாலும், நிலம் மறவாத இளையவர்களின் படைப்பாக... எம் கடந்த காலத்தையும். இக் காலத்தில் அவலப்படும் அகதித் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கையினையும் உரைக்கும் வகையில் "Boat Beat' எனும் Single's இசைத் தொகுப்பினைஅவுஸ்திரேலியாவில் இருந்து இப் படைப்பினை உங்கள் முன் சமர்பிக்கின்றோம். . 
இப் படைப்பின் தேவை உணர்ந்து... இதனை ஒவ்வோர் தமிழனும் அறிந்து கொள்ளும் வண்ணம் தங்களின் ஊடகங்களில் பிரசுரித்து எமக்கு நல்லாதரவு நல்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.  

இங்கே அழுத்தி பாடலைக் கேளுங்கள்


இந்த Boat Beat பாடலிற்கு
இசையமைத்திருக்கிறார் SA அருண்
பாடலைப் பாடியிருக்கிறார்கள்: SA அருண் மற்றும் AJ
பாடல் வரி: நிரூபன்
சொல்லிசை வழங்கியிருக்கிறார் SA அருண்

உங்களின் நல்லாதரவினை வேண்டி நிற்கின்றோம் உறவுகளே..
இம் மடலுடன் பாடலையும்MP3 வடிவில் இணைத்துள்ளோம்.

நன்றி நட்புக்களே..


No comments: