இலங்கைச் செய்திகள்


இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு பதில் மனு

ஜி.ஏ.சந்திரசிறி மீண்டும் வட மாகாண ஆளுநராக பதவியேற்றார்

நாய் குரைத்து சேவல் கூவியதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த அமெரிக்கர்: யாழில் சம்பவம்

பெண் மீது அசிட் வீச்சு

டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள்=================================================================

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு பதில் மனு

23/07/2014  இலங்கை புக­லிடக் கோரிக்­கை­யாளர் தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் பதில் மனு தாக்கல் செய்­துள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் அந்­நாட்டு உயர் நீதி­மன்றில் மனு­வொன்றை தாக்கல் செய்­தி­ருந்­தனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதி­மன்றம் அண்­மையில் கைது செய்­யப்­பட்ட 153 இலங்கைப் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு தடை விதித்­தி­ருந்­தது.
மூன்று நாட்­க­ளுக்கு அர­சாங்கத் தரப்பு நியா­யங்­களை விளக்கும் வகையில் பதில் மனு­வொன்றை தாக்கல் செய்­யு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இந்த நிலையில் அதற்கு அமைய நேற்று அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் இலங்கைப் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக பதில் மனு­வொன்றை தாக்கல் செய்­துள்­ளது. நன்றி வீரகேசரி 


ஜி.ஏ.சந்திரசிறி மீண்டும் வட மாகாண ஆளுநராக பதவியேற்றார்

21/07/2014  வட மாகாண ஆளுநராக ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் இன்று பதவியேற்றுள்ளார்.
இந்த நிகழ்வு   வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்.மாவட்ட மேலதிக செயலர் ரூபினி வரதலிங்கம்ஆகியோர் கலந்து இதில் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரி 
நாய் குரைத்து சேவல் கூவியதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த அமெரிக்கர்: யாழில் சம்பவம்

21/07/2014  நாய் குரைத்து சேவல் கூவியதால் தான் பெரும் அசொளகரியத்துக்கு உள்ளானதாக கூறி அமெரிக்க பிரஜை ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நாவலர் வீதியில் தங்கியிருந்த அமெரிக்க பிரஜையான ஜேம்ஸ் பேர்னின் என்பவர் அப்பகுதியில் தங்கிருந்த கிராம சேவகருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நாயின் உரிமையாளரிடம், எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் அப்பகுதியிலிருந்து நாயை வேறு இடத்துக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
இதன்போது நாய் உரிமையாளரின் மனைவி 'நாய் குரைப்பதும் சேவல் கூவுவதும் எமது உத்தரவை கேட்டு அல்ல. எனினும் இவற்றை அப்புறப்படுத்த பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி
பெண் மீது அசிட் வீச்சு

24/07/2014   திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்தில் பெண் ஒருவர் அசிட் வீச்சுக்கு  இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவரே இந்த அசிட் வீச்சை  மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிரவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது  அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி


டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள்

24/07/2014   கொழும்பு மாநகரில் டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 6 
பேர் உயிரிழந்திருப்பதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ளதால் பொதுமக்கள் தமது சூழலை நீர் தேங்காத வண்ணம் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் விஜயமுனி மேலும் தெரிவிக்கையில்;
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதை தடுக்கவும் கொழும்பு மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தவும் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் மற்றும் முப்படையினர் என 18,000 ஆளணியினர் இணைந்து கொழும்பு மாநகரில் 1,18000 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதோடு அரச தனியார் பாடசாலைகளும் பரிசோதிக்கப்பட்டு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
அசுத்தமான சூழலை வைத்திருக்கும் பிரதேசங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டுகளை விட நூற்றுக்கு 60 வீதம் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது வரையில் டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல ஏனைய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என 1788 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் வரை காலப்பகுதியில் 6 பேர் மட்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
வட கொழும்பு, கொழும்பு கிழக்கிலும் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளதால் பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 
நீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்மென்றும் டாக்டர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி

No comments: