அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட பரிசு யாருக்கு?

.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் விற்பனை செய்த அதிஸ்டலாப சீட்டுக்களின் குலுக்கல் தெரிவு ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்காபியில் இடம்பெற்றது. மண்டபத்தில் பலர் கூடியிருக்க.நடுவர்களாக திரு.வேலுப்பிள்ளை திரு.நவரெத்தினவேல் திரு.சிவராமலிங்கம் திருமதி.இந்திராணி சிவசம்பு ஆகியோர் முன்னிலையில் திரு.ஜெயமேனன் அவர்களால் நடாத்தப்பட்டது. தெய்வீகா மரியநாயகம் கேசினி கேதீசன் கனூஜா சிறீதரன் ஹர்சினி சிறீதரன் ஆகிய நான்கு சிறுமிகளைக்கொண்டு சீட்டிழுப்பு செய்யப்பட்டது. பல தொண்டர்களின் உதவியுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அதிஸ்ட இலக்கங்களை கீழே காணலாம்
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் இந்த சீட்டிழுப்புப்பற்றியும் இதனால் பெறப்படும் பணம் செலவு செய்யும் முறைபற்றியும் உரையாற்றினார்.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான சிவசம்பு பிரபாகரன் சீட்டிழுப்பின் விமுறைகளையும் விற்பனையான சீட்டுக்களின் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டதோடு இம்முறை அதிக சீட்டுகளை நேயர்கள் வாங்கி வானொலிக்கு பேராதரவு தந்துள்ளமைக்கு நன்றியும் தெரிவித்தார்.


அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு ஈசன் கேதீசன் அனைவருக்கும் நன்றி கூறியதுடன் இந்த வானொலியின் தேவையை உணர்ந்த நேயர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது என்றும் தெரிவித்தார்.
8.45 மணிக்கு வானொலி மூலமாக அதிர்ஸ்ட சீட்டுக்களின் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது. வெற்றியாளர்களை தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அறிவிக்கப்பட்டது.

பத்துப் பரில்களை பெறும் இலக்கங்கள் இவைதான்.

1ஆம் பரிசு - 1159
2 ஆம் பரிசு -1961
3ஆம் பரிசு - 2518
4ஆம் பரிசு - 2561
5ஆம் பரிசு - 2946
6ஆம் பரிசு - 2307
7ஆம் பரிசு - 1675
8ஆம் பரிசு - 1994
9ஆம் பரிசு - 1242
10ஆம் பரிசு - 2299.
No comments: