அழிவுப் பாதை செல்வதா ? - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.
சாதி மத  பேத மின்றி
சரி  சமமாய்  மனிதர் நாம் 
மேதினியில்  ஒரு குடியாய் 
மிடுக்காய்  நிமிர்ந்து  வாழ்வோம் !

சிறிய  குருவிக் கூட்டமெல்லாம் 
  சேர்ந்தே இனிதாய் வாழ்கையில்
அறிவிற்  சிறந்த மனிதர் நாமும் 
அழிவுப் பாதை செல்வதா ?

உலகில் வாழும்  மனிதர்க்கெல்லாம் 
ஓடும் குருதி  ஒரே நிறம் 
கலகம் பண்ணிக் கடிந்து வாழ்தல் 
காட்டு விலங்கின் இழி குணம் 
பிறப்பில் மனிதர்  எவரு மிங்குப் 
பெரியர் சிறியர்  இல்லையே 
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச் 
சிந்தை  யாலே  உயருவர் !
   
பழிகள் செய்து பாவியாகிப் 
பாரில் வாழ்வோர் சிறியவர் !
தெளிந்த அறிவு அன்பினோடு 
.சேர்ந்து வாழ்வோம் இனிமையாய்.!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments: