மெல்பனில் நடந்த தமிழ் கவிதை இலக்கியம் அனுபவப்பகிர்வு

.

அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய  கலைச்சங்கம்   கடந்த   24 -5-2014    ஆம்    திகதி     சனிக்கிழமை        தமிழ்க்கவிதை   இலக்கியம்    அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சியை  மெல்பனில்      Darebin Intercultural Centre  மண்டபத்தில்  நடத்தியது.    சங்கத்தின்    நடப்பாண்டுக்கான    மூன்றாவது    அனுபவப்பகிர்வு   கவிதை    தொடர்பாக     நடத்தப்பட்டது.    சங்கத்தின்   தலைவர்    எழுத்தாளர்   Dr.  நடேசன்   தலைமையில்    நடந்த   இந்நிகழ்வில்   எழுத்தாளர்    திரு. லெ.முருகபூபதி    தொடக்கவுரை   நிகழ்த்தினார்.
  கவிஞர்  பாடும்மீன்  சு. ஸ்ரீகந்தராசா  இந்நிகழ்வை   நான்கு  அரங்குகளாக    ஒருங்கிணைத்திருந்தார்.
சங்க காலம்   முதல்    இன்றுவரை    கவிதை    இலக்கியத்தில்    ஏற்பட்டுள்ள  மாறுதல்கள்  -  (பாடு பொருளில் - உள்ளீட்டில் - வடிவத்தில்)
திரு.சு.ஸ்ரீகந்தராசாவின்   ஆரம்பவுரையுடன்  நிகழ்ச்சிகள்  தொடர்ந்தன.
கருத்துரைகள்   அரங்கில்  மனதில்   மிகவும்   பாதிப்பை  ஏற்படுத்திய   கவிதை  என்ற     தலைப்பில்   கவிதையைப்    படித்து    அதற்கான    காரணத்தை  சிலர்  பகிர்ந்து  கொண்டனர்.
திருவாளர்கள்  பொன்னரசு  சிங்காரம் - நோயல் நடேசன் -  அரவிந்தன் க.சிவசம்பு - சு.ஸ்ரீகந்தராசா  - திருமதி. சாந்தினி  புவனேந்திரரசா   ஆகியோர்     இந்நிகழ்வில்   பங்கேற்றனர்.




 மூன்றாவது   அரங்கில்   திருவாளர்கள்   ஜெயராம   சர்மா  -  அரவிந்தன் ஆகியோர்    தத்தமது    கவிதைகளை     சமர்ப்பித்து   அவற்றின் நயவுரையையும்    தெரிவித்தனர்.
திரு. நிர்மலன் சிவா   எழுதி  அனுப்பியிருந்த  தைப்பொங்கல்  என்ற கவிதையை  திரு. நவரத்தினம்  அல்லமதேவன்    சமர்ப்பித்தார்.
தமிழ்நாட்டிலிருந்து  வருகைதந்திருந்த    நூல்   பதிப்பாளர்    திரு. ஒளிவண்ணன்    சென்னையில்   வருடாந்தம்    நடைபெறும் புத்தகச்சந்தை    தொடர்பாக    உரையாற்றியதுடன்    படைப்பாளிகள் தமது   நூல்களை   வெளியிடுவது   தொடர்பான   சில ஆலோசனைகளையும்    வழங்கினார்.
கவிதை   அனுபவப்பகிர்வு   நிகழ்வின்    இறுதியில்    சங்கத்தின்    செயலாளர்   திரு. ஸ்ரீநந்தகுமார்    நன்றி     நவின்றார்.
                             ---0----



No comments: