சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானம் இராகசங்கமம் 2 - தேவி பாலகங்காதரன்

.


சனிக்கிழமை இனிமையான மாலைப்பொழுதில் சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானமும் சப்தஸ்வரா இசைக்குழுவும் நடாத்திய இராகசங்கமம் 2  நிகழ்ச்சியை பார்த்து ரசித்தேன். மண்டபம் நிறைந்த மக்கள், நிகழ்ச்சியை துர்க்கை அம்மன் கோயில் தலைவரும் அவரது பாரியாருமான திரு திருமதி மகேந்திரன் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.  சிட்னிக்கு நன்கு அறிமுகமான பாவலன் ஆயகலைகள் என்ற பாடலை மிக அழகாக பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். சப்தஸ்வரா இசைக்குழுவினர் அம்மன் துதிபாடி சபையோரைப் பக்திப்பரவசத்தில் ஆழ்த்தினர். மகேஸ்வரன் பிரபாகரன் அறிவிப்பாளராக அரங்கு வந்து போட்டியை நடாத்தினார். போட்டிக்கு முன்பாக முரளியும் மாதுமையாளும்  அற்புதமாக முதலில் பாடினார்கள்.

நடுவர்களாக அருணா பார்த்தீபன், செல்வகுமார் டேவிட், ஐஸ்வரியா மட்ராஸ் சுப்ரமணியம் செயற்பட்டனர். சுவேதா சுரேஸ்குமார் போட்டியை உடலையே இசையாக்கி கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலை பாடி அவையினரை மகிழ்வித்தார். இரண்டாவதாக காற்றோடு குழலின் நாதமே என்ற பாடலை கண்ணில் இசையபாயப் பாடி சபையோரை இசையில் ஆழ்த்திவிட்டார் விஜயாள் விஜய். மூன்றாவதாக ஜதுசன் ஜெயராசா இசையமைதியுடன் சாந்தரூபமாக இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்ற பாடலைப்பாடி சிட்னிக்கு இசையில் அருந்சாதனை செய்துவிட்டார்.










12 வயதுக்குட்பட்ட பிரிவினர் வாக்கெடுப்புக்கு சபையினருக்கு இலகுவாக்க, சுவேதா, விஜயாள், ஜதுசன் மூவரும் பாடலின் சிலவரிகளை மீண்டும் பாடினர். வாக்கெடுப்பு நடைபெறும்போது சண் குமாரலிங்கம் புல்லாங்குழல் கொடுத்த என்னும் பாடலை பாடி சபையை மகிழ்வித்தார். டாக்டர் கௌரிபாலனும், மாதுமையாள் திருக்குமரனும் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே  என்பதைப் பாடி எல்லோருக்கும் ஏற்பட்ட இசை ஆனந்தத்தைச் சுட்டிக் காட்டினர்.


21 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் திலக்ஷி சச்சிதானந்தன் அவர்கள் அம்மன் கோயிலில் வந்து அவர் மகன் முருகனை அழைத்து திருப்பரங்குன்றத்தில் நீசிரித்தால் முருகா என்ற பாடலைப் பக்திப் பரவசத்துடன் பாடி சபையோரைப் பக்தியில் மூழ்கவைத்தார். இரண்டாவதாக அபிநயா பிரபாகர் மன்னவன் வந்தானடி தோழி எனும் பாடலை அவையோரின் காதிலே தேன் இசையாக பாயவைத்தார். அவரது இசைப் புலமையால் அவையோரை இசையில் மூழ்கவைத்து விட்டார். மூன்றாவதாக பிருந்தன் வைத்தீஸ்வரன் அவர்கள் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை கணீர் என்ற குரலில் பாடி பாட்டாகமாறி மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டார். 21 வயதுக்குட்பட்டவர்களின் வாக்கெடுப்புக்காக மூவரும் சிலவரிகளை பக்கவாத்தியங்களற்ற நிலையில் சிலவரிகளைப் பாடிக்காட்டினர். வாக்கெடுப்பு நடைபெற்ற போது கண்மணி ஜெகேந்திரன் இனிய குரலில் அழகு மலராட அபிநயங்கள் எனும் பாடலால் இசைமழை பொழிந்தார்.  முரளி வேங்கட்ராமன் அவர்கள் சுப்பர்சிங்கர் அனந் வைத்தியநாதன் போல பாடகர்களை ஊக்குவித்தார். அடுத்த போட்டிக்கான இடைவேளையில் கௌரிபாலன் அவர்கள் சின்னக் கண்ணனை  அழைத்து இசையில் நனயைவைத்தார்.




பொதுப்பிரிவில் முதலில் கலந்து கொண்டவர் சபாரத்தினம் சிவநேசன் அவர்கள். இசையால் வசமாகா  இதயம் எது என்றார் இசையால் வசமாகி நின்ற அவையோரிடம் அடுத்து சத்யன் சிவநாதன் சங்கீதஜாதி முல்லை காணவில்லை என்ற பாடலை தானும் இசையில் மூழ்கிப் பாடி அவையினரையும இசையில் மூழ்கவைத்தார். பக்கவாத்திய இசையும் அவர் இசைக்கு மேலும் மெருகூட்டியது. அடுத்ததாக ஏ சிவதாஸ் அவர்கள் கொஞ்சநாள் பொறுதலைவா என்ற பாடலை பின்னணிப் பாடகர்களுடன் பாடி சபையோரை மகிழ்வித்தார். அடுத்ததாக சௌமியா கஸ்தூரி ரங்கன் கண்ணாளனே எனது கண்ணை  நேற்றோடு காணவில்லை என்ற பாடலை பின்னணிப் பாடகர்களுடன் பாடி மகிழ்வித்தார்.


வாக்கெடுப்பின் போது சப்தஸ்வரா இசைக்குழு உறுப்பினர் காவியா ஜெயசங்கர் அவர்கள் ஓம்நமசிவாயா தங்கநிலாவினை அனிந்தவா என்ற இசையை முழுமையாக அனுபவித்துப் பாடி அவையினரையும் இசையை முழுமையாக அனுபவிக்க வைத்தார்.

அடுத்ததாக முரளி சிவசங்கரி சிவானந்தலகரி சிவசங்கரி என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடலைப் பாடி இசைமழை பொழிந்தார். பக்கவாத்தியங்கள் அதற்குப் பெரிதும் துணைபுரிந்தன. மக்கள் கைகொட்டி ஆரவாரித்தனர்.


அடுத்து  இருவர் குரலிற்கான போட்டியில் நவரத்தினம் ரகுராம் அவர்களுடன் ஞானா அசோகன் இணைந்து விண்ணோடும் முகிலோடும் விளையாடும வெண்ணிலவே என்ற பாடலைப்பாடி இசையால் மக்களை மகிழ்வித்தனர்.


  அடுத்து ராஜேஸ்குமார் சுகந்தி ராஜேஸ் தம்பதியர் இருவரும் இணைந்து இசையில் கதை எழுதும் நேரம் இது இன்பங்கள் அழைக்குது எனும் பாடலை இனிமையுடன் வழங்கி இன்பத்தில் சபையோரை ஆழ்த்தினர். அடுத்ததாக வி விஜய்ரட்ணம் அல்பேர்ட் தொமஸ் இருவரும் இணைந்து பொன் ஓன்று கண்டேன் பெண் அங்கு இல்லை எனும் பாடலை இனிய குரலில் வழங்கி சபையோரை இசையின்பத்தை அனுபவிக்க வைத்தனர். வாக்கெடுப்பின்போது பவித்தா செல்வானந்தன் அவர்கள் ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய ஸ்வரங்களுக்குள் எத்தனை கேள்வி என்ற பாடலை இசையில் திளைத்துப் பாடினார். சபையோர் பலத்த கரகோசம் வழங்கினர். அடுத்து பாவலன் நீயே உனக்கு என்றும் நிதரானவன் என்ற பாடலுடன் ஒன்றி இசைமழை பொழிந்தார். அவை கரகோசத்துடன் நிறைந்து நின்றது.



பரிசைத் தட்டிச்சென்றவர்கள்:

 12 வயதுக்குட்பட்ட பிரிவு  - செல்வன் ஜதுசன் ஜெயராசா 
21 வயதுக்குட்பட்ட பிரிவு    - செல்வி அபிநயா பிரபாகர்
பொதுப்பிரிவு                            - செல்வன்  சத்யன் சிவநாதன்
இருவர் குரலிற்கான போட்டி நவரத்தினம் ரகுராம் - ஞானா அசோகன்

சப்தஸ்வரா இசைக்குழுத் தலைவர் பாலா பாலச்சந்திரன் உள்ளுர் கலைஞர்களை கௌரவித்தார்கள். இனிமையான ஒரு நிகழ்வு உள்ளூர் கலைஞர்களின் உழைப்பால் அரங்கேறி எம்மை மகிழ்வித்தது . ராகசங்கமம் 3 எப்போ வரும் என்ற ஆவலோடு அரங்கை விட்டு வெளியேறினோம்.
























4 comments:

Anonymous said...

கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லை, இருந்தாலும் நண்பர்கள் சிலருக்காக இந்த நிகழ்ச்சிக்கு சென்றேன்.

ஆஹா என்ன ஒரு அருமயான நிகழ்ச்சி. மிருதங்கம் தப்லா இன்னமும் என் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. எல்லா இசை கலைஞ்ர்களும் இனிமயாக வாசித்தாலும் , என்னை கவர்ந்தவர்கள் மிருதங்கம் தப்லா கலைஞ்ஞ்ர்கள் தான்.


தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு தொய்வில்லாது மிக அருமையாக இருந்தது.

ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கலைங்கர்களுக்கும் வாழ்த்துக்கள்.


இது எனது முதலாவது RAGA SANGAMAM நிகழ்ச்சி, இனி ஒரு போதும் தவர விட மாட்டேன்.


நன்றி


ரமேஷ் நடராஜா

Sydney

Anonymous said...

உண்மைதான் தபேலா, மிருதங்க கலைஞர்கள் அபாரம் அற்புத கலைஞர்கள்

Anonymous said...

நிகழ்ச்சிக்கு விமர்சனம் எழுதியவர் பக்கவாத்தியக் கலைஞர்களைக் குறிப்பிடாதது வருத்தத்துக்குரியது. இவர்கள் அனைவரும் படித்து நல்ல தொழில் புரிபவர்கள். பருதிநேரமாகவே இதைச் செய்கிறார்கள். ஆவர்களை ஊக்குவிக்க வேண்டியது சமூசத்தின் கடமை. மிருதங்கம் வாசித்த பல்லவனும் தபேலா வாசித்த ஐங்கரனும் சர்வதேச தரம் வாய்தவர்கள்.
ராகுலன் ஜெகி.

Unknown said...

Ramesh Nadaraj, Rahulan Jegi and 'Anonymous' (?)....
Thanks for taking timeout to comment...
Your feedback has been passed on to the percussin guys.. I thought Charu and Ratheepan were outstanding too... with the limited opportuniteis he got, Branavan (as the support mirudhangist) was outstanding too... The bottom line was, it was an out-and-out team effort....a genuine willingness to support each other... as these guys are my close friends as well, I wanted to deliver a good performance (to the best of my limited abilities) for them.
Pallavan and I will have a family catch-up with few other friends in a couple of weeks... and will share your feedback.

Thanks.
Pavalan