'இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது"
மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க முயற்சி
சர்வதேச விசாரணை இல்லாத பிரேரணையே ஜெனிவாவில்
=======================================================================
'இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது"
01/03/2014 இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று தான் இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது.
இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
எனினும் அவர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட நலன்சார் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அந்தவகையில் மரணமான கோபிதாஸ் சிறையில் இருக்கும் காலத்தில் அவருக்கு வேண்டிய உதவிகளை மேற்கொண்டு வந்தோம்.
அத்துடன் அவரது நிலை குறித்தும் அவருடைய உறவினர்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளையே எம்மால் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
;நன்றி வீரகேசரி
மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க முயற்சி
01/03/2014 மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத்திட்ட பகுதியில் போது தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 1 ஏக்கர் காணியை அரசியல் செல்வாக்கில் சிலர் அபகரிக்க முற்பட்ட போது மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக குறித்த காணி அபகரிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
சர்வதேச விசாரணை இல்லாத பிரேரணையே ஜெனிவாவில்
01/03/2014 ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் உள்ளடங்காது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயம் மட்டுமே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை கோருவோம் என்று பிரிட்டன் அமைச்சர் பரனேஸ் வர்சி தெரிவித்திருந்த கருத்தும் சர்வதேச விசாரணை கோரப்படமாட்டாது என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
அத்துடன் சர்வதேச அரங்கில் முக்கிய நாடுகளாக கருதப்படும் சீனாவும் ரஷ்யாவும் இலங்கைககு எதிரான தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்திருந்ததுடன் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தன.
அதன்படி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற விடயம் இடம்பெறாது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயமே உள்ளடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை அரசாங்கமும் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்திவருவதாகவும் மேலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசம் தேவை என்றும் இலங்கை அரசாங்க தரப்பில் கோரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த இந்தக் கூட்டத் தொடரில் ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. அத்துடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. ஆரம்ப அமர்வில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
அந்தவகையில் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரையாற்றவுள்ளதுடன் விசேட அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
அந்தவகையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று எதிர்பார்கக்ப்படுகின்றது.
அமெரிக்கா, பிரிட்டன் , கனடா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி. லவ்ரவ், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டோரன்ட் பேபியஸ், அமெரிக்காவின் அமைச்சரவை உறுப்பினர் சமந்தா பவர், பிரிட்டனின் இராஜாங்க மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், கனடாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் லின்னி யெலிச் உள்ளிட்டோர் முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
அமைப்புக்களை பொறுத்தவரையில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் அன்டர்ஸ் ஜோன்ஸனும் முதல் மூன்று நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உரையாற்றவுள்ளார்.
இம்முறை கூட்டத் தொடரில் இலங் கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு பிரிட்டனும் அனுசரணை வழங்கவுள்ளது. பிரேரணைக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் பிரிட்டனும் அமெரிக்காவும் பாரிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அதேவேளை மறுபுறம் இலங்கையும் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கோரி படையெடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்ததுடன் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தார்.
எனினும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்தியா எவ்விதமான உத்தரவாதத்தையும் வழங்காத நிலையில் சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அண்மையில் இலங்கைககு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்தியாவானது கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் மனித உரிமைப் பேரவையின் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் விஜயம் செய்ததுடன் ஆதரவு கோரும் படலத்தையும் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் பாரிய இராஜத்தந்திர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பிரிடடனின் இராஜாங்கஇ சமூக திணைக்களம், உள்ளூராட்சி மற்றும் வெளிவிவகாரஇ பொதுநலவாய அலுவலகம் ஆகியவற்றுக்கான சிரேஷ்ட அமைச்சர் பரனெஸ் வர்சி பிரேரணைக்கு ஆதரவு வெளியிட்டுள்ள உறுப்பு நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பில் மிகவும் கடின உழைப்புடன் செயற்பட்டுவருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சார்பில் இம்முறை ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.
மேலும் தூதுக்குழுவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கஇ சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் இலங்கை தூதுக்குழுவில் இடம்பெறவுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கை தூதுக்குழுவுக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவே தலைமைதாங்கியிருந்தார். எனினும் இம்முறை அமைச்சர் சமரசிங்கவுக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ்.எல். பீரிஸ் தூதுக்குழுவுக்கு தலைமைதாங்கவுள்ளார். அந்தவகையில் நாளைய தினம் தூதுக்குழுவின் சில உறுப்பினர்கள் ஜெனிவா பயணமாகவுள்ளனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் ஒன்பதாம் திகதியே ஜெனிவா செல்லவுள்ளார்.
இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை இவ்வாரம் வெளியிட்டிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியம் என்று கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன் அவரின் அறிக்கைக்கு கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தது.
இம்முறை என்றுமில்லாதவாறு ஜெனிவாவுக்கு ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க விஜயம் மேற்கொண்டு இலங்கையின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னர் ஜெனிவா சென்ற ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஜெனிவாவில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். அந்தக் கூட்டத்துக்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 42 உறுப்பு நாடுகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தின் பின்னரான நாட்டின் முன்னேற்ற நிலைமைகள் குறித்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார். இதேவேளைஇ கற்றறிந்த பாடங்களும் நலலிணக்கமும் தொடல்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் தலைவராகவும் லலித் வீரதுங்க இருப்பதால் இந்த கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் செயற்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தார்.
ஐ.நா. மனித உரி மை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டி ருந்தார். அதன்போது நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை அவர் மேற்கொண்டி ருந்தார். மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிக ளுக்கான விசேட அறிக்கையாளர் டாக்டர் சலோகா பெயானி இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடி யேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 13 நாடுகள் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள் வில்லை.
அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடு களும் எதிராக 15 நாடுகளும் வாக்க ளித்திருந்தன.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment