தமிழ் - தெலுங்கு மொழிபெயர்ப்பு வரலாற்றில் 5.2.14 அன்று ஒரு சிறப்பு நிகழ்வு‏

.வரலாற்றுப் பதிவு.திருப்பதியில் நடைபெற்ற நிகழ்வு.பன்னிரு திருமுறையில் 18268 பாடல்கள்.
அவற்றுள் 9343 பாடல்கள் தெலுங்குக்கு மொழிபெயர்ப்பாயின.
நேற்றுத் திருப்பதியில் அப் பாடல்களின் மொழிபெயர்ப்பு ஏற்றதா என ஆராயும் கூட்டம்.
சில மாதங்களுக்கு முன்னரே மொழிபெயர்த்த பகுதிகளை அறிஞருக்குக் கொடுத்தோம்.நேற்று அவர்கள் நேரில் தமது கருத்துரைகளைக் கூட்டத்தில் சொன்னார்கள்.
பாராட்டு ஒருபுறம்சிறுசிறு திருத்தங்கள் மறுபுறம் என அறிஞரின் கருத்துரைகள்மொழிபெயர்ப்பாளர் காதுகளில் தேனாக ஒலித்தன.
பல்லாயிரம் ஆண்டுகள் புகழுடன் நீடிக்கும் மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளீர்கள் எனமொழிபெயர்ப்பாளரைப் பாராட்டினார் திருப்பதி வேங்கடேசுவரா பல்கலைக் கழக மேனாள்பேராசிரியர் அரங்கராசன்இத்தனை பாரிய பணிக்கு மிகச் சிறிய தொகைதானே ஊதியமா?எனக் கேட்ட தருமப் பிரச்சாரச் செயலர் திருஇரகுநாதன்உடனே அவர்களுக்குரியதொகைகளைக் கொடுப்போம் எனக் கூறினார்
அருள்மிகு பத்மாவதித் தாயார் உடனாய வேங்கடேசப் பெருமாள் இந்த வரலாற்றுப்பணியைப் பொறுப்பெடுத்து நிறைவேற்றுமாறு என்னைப் பணித்ததால் பேறு பெற்றேன்.
திருமுறை 1 பாடல்கள் 1469 தெலுங்கில் திருமதி சசிகலா திவாகர் 1469 பாடல்கள்


திருமுறை 2 பாடல்கள் 1331 தெலுங்கில் திருமதி சசிகலா திவாகர் 1331 பாடல்கள்
திருமுறை 3 பாடல்கள் 1358 தெலுங்கில் திருமதி சசிகலா திவாகர் 1358 பாடல்கள்
திருமுறை 4 பாடல்கள் 1070 தெலுங்கில் பேராசத்தியவாணி 400 பாடல்கள்
திருமுறை 5 பாடல்கள் 1015 
திருமுறை 6 பாடல்கள் 981 
திருமுறை 7 பாடல்கள் 1026 தெலுங்கில் பேரா முனிரத்தினம் + பேரா மூர்த்தி 1026 பாடல்கள்
திருமுறை 8 பாடல்கள் 1058 தெலுங்கில் பேரா பரிமளம் + பேரா அரம்பை 1058 பாடல்கள்
திருமுறை 9 பாடல்கள் 301 தெலுங்கில் பேராசத்தியவாணி 301 பாடல்கள்
திருமுறை 10 பாடல்கள் 3000 தெலுங்கில் பேராமுனிரத்தினம் 400 பாடல்கள்
திருமுறை 11 பாடல்கள் 1385 தெலுங்கில் பேரா முனிரத்தினம் + பேரா மூர்த்தி 1000 பாடல்கள்
திருமுறை 12 பாடல்கள் 4274 தெலுங்கில் பேராசெயப்பிரகாசர் 1000 பாடல்கள்
மொத்தம் பன்னிரு திருமுறைப் பாடல்கள் 18268 
தெலுங்கில் மொழிபெயர்த்தவை 9343 பாடல்கள்
தெலுங்கில் மொழிபெயர்ப்பாகி வருபவை 8925. 
அவை விரைவில் மீளாய்வுக்கு வரும்.
வரலாறு படைத்த நிகழ்ச்சியைப் பதிவாக்கிய படங்கள் பார்க்க.
செய்தியைப் பகிர்கஇதழாழர் செய்தியாகப் படங்களுடன் வெளியிடுகமொழிபெயர்ப்புவரலாற்றில் ஒரு சிறப்பு நிகழ்வல்லவா? 
மறவன்புலவு சச்சிதானந்தன்

No comments: