உலகச் செய்திகள்


ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு

 எகிப்திய இடைக்கால அரசாங்கம் இராஜினாமா : பிரதமர் திடீர் அறிவிப்பு


====================================================================

ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு


28/02/2014  தாய்­லாந்து பிர­தமர் யின்லக் ஷின­வட்­ரா­வுக்கு அர­சாங்க அரிசி உதவி திட்டம் ஒன்று சம்­பந்­த­மாக அலட்­சி­யத்­துடன் செயற்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ர­ணையில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்க அந்­நாட்டு ஊழ­லுக்கு எதி­ரான அமைப்­பொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.
மேற்­படி அரிசி உதவி வழங்கல் திட்­டத்தில் கடும் ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தான யின்லக் ஷின­வட்­ராவின் எதி­ரா­ளிகள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.
அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டும்­பட்­சத்தில், அவர் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வ­துடன் அர­சி­யலில் பங்­கேற்ற 5 வருட கால தடை­யையும் எதிர்­கொள்ள நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
கடந்த புதன்­கி­ழமை தலை­ந­க­ரி­லி­ருந்து வட­ந­க­ரான சியாங் ராய்க்கு சென்­றுள்ள யின்லக் ஷின­வட்ரா, தேசிய ஊழ­லுக்கு எதி­ரான ஆணை­ய­கத்தில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் ஆஜ­ரா­க­மாட்டார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் அவ­ருக்கு பதி­லாக அவ­ரது சட்­டத்­த­ரணி விசா­ர­ணை­களில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்­கலாம் என தேசிய ஊழ­லுக்கு எதி­ரான ஆணை­யகம் குறிப்­பிட்­டுள்­ளது.
தனக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள பிர­தமர், எனினும் உண்­மையை வெளிக்­கொ­ணரும் முக­மாக மேற்­படி ஆணை­ய­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வுள்­ள­தாக கூறினார்.
யின்­லக்கின் அர­சாங்­கத்தின் முக்­கிய கொள்­கை­களில் ஒன்­றாக விளங்கும் அரிசி உதவி திட்டம் உலக விலை­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் 50 மடங்கு அதி­க­மான விலைக்கு விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து அரி­சியை அர­சாங்கம் கொள்­வ­னவு செய்ய வழி­வகை செய்­கி­றது.


விவ­சா­யிகள் மத்­தியில் ஆரம்­பத்தில் பிர­ப­லம்­பெற்ற இந்தத் திட்டம் தாய்­லாந்தின் அரிசி ஏற்­று­ம­தியை கடு­மை­யாக பாதித்து குறைந்­தது 4.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான இழப்­பீட்­டுக்கு வழி­வகை செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக விவ­சா­யிகள் பாதிப்பை எதிர்­கொள்ள நேர்ந்­தது.
இந்­நி­லையில் மேற்­படி கொள்கை உரு­வாக்கம் மட்­டுமே தனது எனக்­கூ­றிய யின்லக், அந்த திட்­டத்தின் நாளாந்த அமு­லாக்­கத்­திற்கு தான் பொறுப்­பாக இருக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்ளார்.
தாய்­லாந்தில் கடந்த சில வாரங்­க­ளாக அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலை­யி­லேயே யின்லக் மீதான புதிய குற்­றச்­சாட்டு விசா­ரணை தொடர்­பான உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்கொக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறை தாக்குதல்களில் 4 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
அங்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.
நன்றி வீரகேசரி 








 எகிப்திய இடைக்கால அரசாங்கம் இராஜினாமா : பிரதமர் திடீர் அறிவிப்பு

26/02/2014  எகிப்­திய இடைக்­கால பிர­தமர் ஹாஸெம் பெப்­லாவி தனது அர­சாங்கம் பதவி வில­கு­வ­தாக திடீர் அறி­விப்புச் செய்­துள்ளார். நாட்டின் தற்­போ­தைய நிலை­மையை கவ­னத்திற் கொண்டே இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­தாக அவர் கூறினார்.
அந்­நாட்டில் பொது பணி­யா­ளர்கள் குப்பை சேக­ரிப்­ப­வர்கள் உள்­ள­டங்­கலாக பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டங்கள் மற்றும் சமையல் எரி­வாயு பற்­றாக்­குறை தொடர்­பான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்தே பிர­த­மரின் மேற்­படி அறி­விப்பு இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
எகிப்தில் இடம்­பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனா­தி­பதி மொஹமட் முர்ஸி ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து பெப்லாவி அவ­ரது இடத்­திற்கு நிய­மிக்­கப்­பட்டார்.
முர்­ஸியின் வெளி­யேற்­றத்தை தொடர்ந்து அவ­ரது முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பை நசுக்க பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போது 1000 க்கும் அதி­க­மானோர் பலி­யா­ன­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டனர்.
அதே­ச­மயம் சினாய் தீப­கற்­பத்­தி­லுள்ள போரா­ளி­களும் அர­சாங்கம், பொலிஸ் மற்றும் இரா­ணுவ உத்­தி­யோ­கத்தர்களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்த ஆரம்­பித்­ததில் நூற்­றுக்­க­ணக்­கானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.
அர­சாங்­கத்தின் இரா­ஜி­னாமா குறித்து தொலைக்­காட்­சியில் உரை­யாற்­றிய பெப்­லாவி, இரா­ஜி­னாமா செய்­வ­தற்­கான காரணம் குறித்து கருத்து எத­னையும் வெளி­யி­ட­வில்லை.
அமைச்­ச­ர­வை­யா­னது கடந்த 6 அல்­லது 7 மாதங்­க­ளாக கடும் சிர­மத்தை எதிர்­கொள்ள நேர்ந்­த­தா­கவும் பல சந்­தர்ப்­பங்­களில் சிறப்­பான பெறு­பே­றுகள் கிடைத்­த­தா­கவும் கூறிய பெப்­லாவிஇ "நாடு பெரும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளது. இந்­நி­லையில் நாட்டை பாது­காக்க நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யுள்­ளது" என்று கூறினார்.
இந்­நி­லையில் புதிய பிர­தமர் ஒருவர் பெயர் குறிப்­பி­டப்­படும் வரை பெப்­லா­வியை அதி­கா­ரத்தில் தொடர்ந்து இருக்க கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் அல் அஹ்ரம் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
புதிய பிர­த­ம­ராக வீட­மைப்பு அமைச்சர் இப்­ராஹிம் மிஹ்லிப் நிய­மிக்­கப்­ப­டலாம் என
அந்தப் பத்­தி­ரிகை அர­சாங்க வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அமைச்சரவையானது தனது இராஜினாமா கடிதங்களை இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூரிடம் ஒப்படைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








No comments: