பத்ம விருதுகள் – நடிகர் கமலஹாசன் - கவிஞர் வைரமுத்துவுக்கு

.
வெங்கடபதி என்ற விவசாயி பத்மசிறீ விருதைப் பெற்றார்.
இந்தியாவின் பத்ம விருதுகள் – நடிகர் கமலஹாசன் - கவிஞர் வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருதுகள்
இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை (25.01.14) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.வெங்கடபதி என்ற விவசாயி பத்மசிறீ விருதைப் பெற்றார். இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், இதனைப் பெரும் பேறாக கருதுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் மசேல்கர் மற்றும் யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோ ருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.


நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட 25 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய் குமார் பரிடா, ஸ்குவாஸ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ்ஜேக்கப், யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் , கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: