இலங்கைச் செய்திகள்


மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்

பால்மா வாங்கச் சென்ற தம்­மு­டைய தந்தை எங்கே? , 3 குழந்தைகளுக்கும் என்ன பதில் கூறுவேன்!

 மன்னார் மனித புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது: சில எலும்புத்துண்டுகள் மீட்பு

மூன்று மனித எலும்புக்கூடுகள் இன்று மீட்பு

===================================================================

மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்

22/01/2014     இலங்­கையில் வழி­பாட்டுத் தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றமை நிறுத்­தப்­பட வேண்­டு­மென கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் கோரி­யுள்­ளது. அமெ­ரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், நேற்று இலங்கைத் தேசிய இவஞ்­ச­லிக்கல் கூட்­ட­மைப்­பி­னரைச் (National Evangelical Alliance of Sri Lanka) சந்­தித்­துள்ளார். (மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இலங்­கையில் வழி­பாட்டுத் தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றமை நிறுத்­தப்­பட வேண்­டு­மென கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் கோரி­யுள்­ளது. அமெ­ரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், நேற்று இலங்கைத் தேசிய இவஞ்­ச­லிக்கல் கூட்­ட­மைப்­பி­னரைச் (National Evangelical Alliance of Sri Lanka) சந்­தித்­துள்ளார். இச்­சந்­திப்­பின்­போது காலி, ஹிக்­க­டுவைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள இரண்டு தேவா­ல­யங்கள் மீது பௌத்த பிக்­கு­களைக் கொண்ட குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­யமை குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.
கொழும்பில் இப்­பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­ற­தாக குறிப்­பிட்­டுள்ள தூத­ரகப் பேச்­சாளர் ஜூலி­யானா ஸ்பவென், மதத்­த­லங்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். நன்றி வீரகேசரி








 பால்மா வாங்கச் சென்ற தம்­மு­டைய தந்தை எங்கே? , 3 குழந்தைகளுக்கும் என்ன பதில் கூறுவேன்!


பால்மா வாங்கச் சென்ற தமது தந்தையை தேடுகின்ற, செல் தாக்குதலில் தாயை இழந்த 3 குழந்தைகளுக்கும் நான் என்ன பதில் கூறுவேன் என காணாமல்போன ஒருவரின் சகோதரி ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று கதறி அழுததில் கிளிநொச்சி மாவட்ட செயலகமே சோகமயமானது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல்போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று நான்காவது நாளாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசா­ர­ணை­களில் கலந்­து­கொண்ட கிளி­நொச்சி கோணாவில் பகு­தியில் தற்­பொ­ழுது வசித்து வரு­கின்ற செல்­வேஸ்­வரி என்ற பெண் தன்­னு­டைய சகோ­த­ர­ரான செல்­வக்­குமார் என்ற நபர் கடந்த 2009ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 15ஆம் திகதி முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மாத்­தளன் பகு­தியில் தன்­னு­டைய கைக்­கு­ழந்தை உட்­பட 3 குழந்­தை­க­ளையும் எனது பாது­காப்பில் விட்­டு­விட்டு பால்மா வாங்­கு­வ­தற்­காக சென்­றி­ருந்தார். 
அவர் தற்­பொ­ழுதும் வீடு திரும்பி வர­வில்லை. இக் குழந்­தை­களின் தாய் கடந்த 2009ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 10ஆம் திகதி செல் தாக்குல் ஒன்றில் உயி­ரி­ழந்­து­விட்டார். இதனால் இக் குழந்­தைகள் தற்­பொ­ழுது பெற்­றோரை இழந்த நிலையில் எனது பாது­காப்பில் வசித்து வரு­கின்­றார்கள்.
இக் குழந்­தைகள் தம்­மு­டைய தந்தை எங்கே? என தினமும் கேட்­கின்ற பொழு­திலும் என்னால் அவர்­க­ளுக்கு எந்தப் பதி­லையும் தெரி­விக்க முடி­ய­வில்லை. எனவே பால்மா வாங்கச் சென்ற தம்­மு­டைய தந்தை எங்கே? என்று கேட்­கின்ற குழந்­தை­க­ளுக்கு இந்த ஆணைக்­கு­ழு­வி­னரே பதில் கூற வேண்டும் என குறித்த பெண் கதறி அழு­தமையால் மாவட்ட செய­ல­கமே நேற்று சோகத்தில் மூழ்­கி­யது.
இனியும் பதி­வுகள் வேண்டாம்
இதே­வேளை இனியும் பதி­வுகள், விசா­ர­ணைகள் வேண்டாம் இதுவே இறு­தி­யா­ன­தாக இருக்­கட்டும். எங்­க­ளுக்­கான முடிவை கூறுங்கள் என நேற்­றைய விசா­ர­ணையில் கலந்­து­கொண்ட காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வு­களில் பலர் ஆணை­கு­ழு­வி­ன­ரிடம் உருக்­க­மான வேண்­டு­கோளை முன்­வைத்­தனர்.
தந்­தையை, தாயை, பிள்­ளை­களை, சகோ­த­ரர்­களை, கண­வனை இழந்­த­வர்கள் என ஒன்­று­கூ­டிய காண­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் தம்மை விசா­ர­ணைகள் என்ற போர்­வையில் தொடர்ந்தும் துன்­பு­றுத்த வேண்டாம் எனவும் தமக்கு தமது காணா­மல்­போன உற­வுகள் தொடர்­பான பதிலை கூற­வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் முன்­வைத்­தனர்.
154 பேரிடம் கிளி­நொச்­சியில் முதற்­கட்ட விசா­ரணை
இதே­வேளை கிளி­நொச்­சியில் கடந்த 18ஆம் திக­தி­யி­லி­ருந்து நான்கு நாட்கள் தொடர்ச்­சி­யாக குறித்த ஆணைக்­கு­ழு­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணையில் சுமார் 154 பேர் கலந்­து­கொண்டு தமது உற­வுகள் தொடர்­பாக கோரிக்­கை­களைப் பதிவு செய்­துள்­ளனர்.
இதற்­க­மைய கடந்த 18ஆம் திகதி ஸ்கந்­த­புரம் இல.1 அ.த.க.பாட­சா­லையில் நடை­பெற்ற விசா­ர­ணை­களின் போது அக்­க­ராயன் பகு­தியைச் சேர்ந்த 20 பேரும் ஸ்கந்­த­பு­ரத்தைச் சேர்ந்த 15 பேரும் கன­க­பு­ரத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக 36 பேர் காணா­மல்­போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர்.
இதேபோல் கடந்த 19ஆம் திகதி ஆனை­வி­ழுந்தான் ஐய­னார்­புரம் வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற விசா­ர­ணை­களின் போது ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் வன்­னே­ரிக்­கு­ளத்தைச் சேர்ந்த 37பேரும் ஆனை­வி­ழுந்­தானைச் சேர்ந்த 15 பேரு­மாக 52 பேர் காணா­மல்­போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி­யுள்­ளனர்.
கடந்த 20 ஆம் திகதி கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற ஆணைக்­கு­ழுவின் அமர்வில் பொன்­நகர் கிரா­மத்தைச் சேர்ந்த 6 பேரும் பார­தி­புரம் கிரா­மத்தைச் சேர்ந்த 7 பேரும் மலை­யா­ள­பு­ரத்தில் வசிக்­கின்ற 28பேரு­மாக 41 பேர் காணா­மல்­போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி­யுள்­ளனர்.
நேற்­றைய தினம் கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற குறித்த அமர்வில் கோணாவில் கிரா­மத்தைச் சேர்ந்த 25 பேர் சாட்­சி­யங்­களைப் பதிவு செய்­துள்­ளனர்.
ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களில் நம்­பிக்­கை­யில்லை
கிளி­நொச்­சியில் காணா­மல்­போனோர் தொடர்­பாக உற­வி­னர்­க­ளிடம் ஆணைக்­கு­ழு­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் தமக்குத் திருப்தி இல்லை எனவும் தமது உற­வுகள் காணா­மல்­போன நாளி­லி­ருந்து இது­போன்று பல விசா­ர­ணை­க­ளுக்கு தாங்கள் பதி­ல­ளித்­த­தா­கவும் பல­ரிடம் தாம் தமது உறவுகள் தொடர்பில் பதிவு செய்­துள்­ள­தா­கவும் உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.
இதனால் தமக்கு தற்­பொ­ழுது அவ­சரம் அவ­ச­ர­மாக நடை­பெ­று­கின்ற குறித்த விசா­ர­ணை­களில் நம்­பிக்­கை­யில்லை எனவும் தெரி­வித்­தனர்.
9 கிரா­ம­சே­வை­யாளர் பிரி­வு­களில் மட்­டுமே விசா­ரணை
கிளி­நொச்சி மாவட்­டத்தின் காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்ற ஆணைக்­கு­ழு­வினர் முதற்­கட்­ட­மாக கடந்த 4 நாட்­க­ளாக இம் மாவட்­டத்­திற்­குட்­பட்ட ஸ்கந்­த­புரம், அக்­க­ரா­யன்­குளம், கன­க­புரம், வன்­னே­ரிக்­குளம், ஆனை­வி­ழுந்தான், பொன்­நகர், பார­தி­புரம், மலை­யா­ள­புரம் ஆகிய 9 கிரா­ம­சே­வை­யாளர் பிரிவுகளில் அவ­சரம் அவ­ச­ர­மாக நடத்துகின்ற குறித்த விசா­ர­ணை­களில் நம்பிக்கையில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.நன்றி வீரகேசரி 







 மன்னார் மனித புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது: சில எலும்புத்துண்டுகள் மீட்பு

21/01/2014    மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி மீண்டும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை  மன்னார் நீதவான் முன்னிலையில் 10 ஆவது தடவையாக தோண்டப்பட்டது.
இது வரை 40 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்,துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை  குறித்த பகுதியில் உள்ள வீதி உடைக்கப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.
இதன் போது இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் சில கண்டு பிடிக்கப்பட்டன. எனினும் முழுமையான மனித எலும்புக்கூடுகள் எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை.
இதேவேளை நாளை மீண்டும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது.
மனித புதைகுழி தொடர்பாக அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் அதன் மரணம் சம்பவித்த விதத்தினை அறிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும்.
குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்சசியாக மனித எழும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன.
பாரியளவிலான தடையப்பொருட்கள் எவையும் இது வரை மீட்கப்படவில்லை.
குறித்த மனித புதைகுழியின் எல்லை எது வரை உள்ளது என்பதனை கண்டு பிடிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்றார்.
 நன்றி வீரகேசரி





மூன்று மனித எலும்புக்கூடுகள் இன்று மீட்பு
 22/01/20014
s.vinoth
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி இன்று 11 ஆவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
குறித்த மனித புதை குழியில் இதுவரை 43 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக 11 ஆவது தடவையாக மன்னார் நீதவான் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டப்பட்டது.
முதலில்  ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதோடு பரிசோதனைகளுக்காக குறித்த புதை குழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டின் பாகங்கள் எடுக்கப்பட்டு 4 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தோண்டப்பட்ட புதைகுழியின் ஒரு பகுதி மேலும் தோண்டப்பட்ட போது இன்று மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த மனித புதைகுழி 1/2 மீற்றருக்கு விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு நாளை மீண்டும்  மனித புதைகுழி நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி




No comments: