உலகச் செய்திகள்


நியூ­ஸி­லாந்தை உலுக்­கிய பூமி­ய­திர்ச்சி

 ஈராக்கில் பொலிஸாரை இலக்குவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்

சிரி­யாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை

மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவு

======================================================================

நியூ­ஸி­லாந்தை உலுக்­கிய பூமி­ய­திர்ச்சி


21/01/2014    நியூ­ஸி­லாந்தின் வட­தீவுப் பிராந்­தி­யத்தை 6.3 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது. இந்த பூமி­ய­திர்ச்­சியால் கட்­ட­டங்கள் நடுங்­கி­யதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.
மக்கள் வீடு­க­ளையும் கட்­ட­டங்­க­ளையும் விட்டு அல­றி­ய­டித்­துக்­கொண்டு வெளி­யேறி திறந்த வெளி­க­ளிலும் வீதியிலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.
மாஸ்­டரொன் நகரின் வடக்கே 38 கிலோ­மீற்றர் தூரத்தில் சுமார் 27 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யுள்­ளது.
மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் வெலிங்டன் விமான நிலையத்தியிலிருந்த இாட்சத கழுகு உருவ கட்டமைப்பு கூரையிலிருந்து சரிந்து தரையில் விழுந்­துள்­ளது.
ஆனால், அதனால் எவ­ருக்கும் காயம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை.
இந்த பூமியதிர்ச்சியையடுத்து பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.


நன்றி வீரகேசரி  ஈராக்கில் பொலிஸாரை இலக்குவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்

20/01/2014    ஈராக்கில் மேற்கு பக்தாத் நகரில் பொலிஸாரை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் பலியானதுடன் பிறிதொருவர் காயமடைந்துள்ளார்.
அன்பர் மாகாணத்தின் தலைநகர் ரமடியின் கிழக்கேயுள்ள கல்டியஹ் நகரில் பொலிஸ் நிலையமொன்றின் திறப்பு விழாவின் போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பலுஜாஹ் தொலைக்காட்சி சேவைக்காக பணியாற்றி வரும் சுதந்திர ஊடகவியலாளரான பைரஸ் மொஹமட் அதியஹ் என்ற 28 வயது ஊடகவியலாளரே இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அதேசமயம் மேற்படி தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஈராக்கில் அண்மைக்க காலமாக வன்முறைகள் இடம்பெறுவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரிசிரி­யாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை

22/01/2014 சிரியா தொடர்பில் இன்று புதன்­கி­ழமை சுவிட்­ஸர்­லாந்தில் ஆரம்­ப­மா­க­வுள்ள ஜெனீவா II சமா­தான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னிட்டு ஜெனீ­வா­வி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டத்தில் ஐரோப்­பிய ஒன்­றிய வெளி­நாட்டு கொள்கைத் தலைவர் கத்­தரீன் அஷ்­டனும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் கைகு­லுக்கிக் கொள்வதை படத்தில் காணலாம்.

சிரி­யாவில் மக்கள் எழுச்சி ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு தடுத்து வைக்­கப்­பட்ட சுமார் 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­மைக்­கான தெளி­வான சான்று உள்­ள­தாக முன்னாள் போர்க்­ குற்ற விசா­ர­ணை­யா­ளர்கள் மூவர் அறிக்­கை­யிட்­டுள்­ளனர்.
பிரித்­தா­னிய கார்­டியன் பத்­தி­ரி­கையும் அமெ­ரிக்க சி.என்.என். ஊட­கமும் இந்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளன.
சிரிய அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றிய ஒரு­வரால் கடத்தி வரப்­பட்ட இறந்த கைதி­க­ளது ஆயி­ரக்­க­ணக்­கான புகைப்­ப­டங்­களை பரி­சோ­தித்­ததைத் தொடர்ந்தே விசா­ர­ணை­யா­ளர்கள் மேற்­படி அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளனர்.
இந்தப் படு­கொ­லை­களில் சிரிய அர­சாங்கம் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தற்­கான சான்று உள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­களில் ஒருவர் தெரி­வித்தார்.
சிரியா தொடர்­பான சமா­தானப் பேச்­சு­வார்த்தை இன்று புதன்­கி­ழமை சுவிட்ஸர்­லாந்தில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில், அதற்கு ஒருநாள் முன்­பாக மேற்­படி அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
சிரி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றிய சீஸர் என அழைக்­கப்­படும் இராணுவப் புகைப்­படக் கலை­ஞரால் சிரி­யாவில் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்ட சுமார் 11,000 கைதிகள் தொடர்­பான 55,000க்கும் அதிகமான இலத்­தி­ர­னியல் புகைப்­ப­டங்கள் கடத்தி வரப்­பட்­டுள்­ளன.
தடுப்­புக்­கா­வலில் வைத்து சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் மர­ணத்தை உறு­திப்­ப­டுத்தி மரணச் சான்­றி­தழ்­களை வழங்கும் முக­மாக புகைப்­ப­ட­மெ­டுக்கும் பணியில் சீஸர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­வேளை எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளையே அவர் கடத்தி வந்­துள்ளார்.
ஆனால், அந்தக் கைதிகள் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தையோ, படு­கொலை செய்­யப்­பட்­ட­தையோ தான் பார்க்­க­வில்லை என அவர் தெரி­வித்தார்.
ஒரு நாளுக்கு 50 வரை­யான பெரு­ம­ளவு சட­லங்­களை புகைப்­படம் எடுக்க வேண்­டி­யி­ருந்­தது எனவும் ஒவ்­வொரு சட­லத்­துக்கும் 15 நிமி­டங்கள் முதல் 30 நிமி­டங்­களை செல­விட நேர்ந்­தது எனவும் அவர் கூறினார்.

அந்தப் புகைப்­ப­டங்கள் 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி ஆரம்­ப­மா­னது முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.
மேற்படி கைதி­களில் பெருந்­தொ­கை­யானோர் கடும் பட்­டி­னிக்­குள்­ளா­கி­யி­ருந்­த­மைக்கும் அடித்து உதைக்­கப்­பட்­ட­மைக்கும் சான்­றுள்­ள­தாக பிரேத பரி­சோ­தனை நிபு­ண­ரான ஸ்டுவர்ட் ஹமில்டன் தெரி­வித்­துள்ளார்.
அவர்­களில் சிலர் மூச்­சுத்­தி­ண­ற­டிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தாக அவர் கூறினார்.
இன்று சுவிட்ஸர்லாந்தின் மொன்டறியக்ஸ் நகரில் இடம்பெறும் சிரியா தொடர்பான ஜெனீவா -II பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கமும் நாடு கடந்து செயற்படும் எதிர்க்கட்சி கூட்டமைப்பும் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

நன்றி வீரகேசரி
மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவு

22/01/2014   மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக பான்­குயி நகர மேயர் கத்­தரீன் சம்பா பன்ஸா (59 வயது) தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். அந்­நாட்டில் மேற்­படி பத­விக்கு பெண் ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.
இடைக்­கால பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இரண்டாம் சுற்று வாக்­கெ­டுப்பில் பன்ஸா தனது போட்டி வேட்­பா­ள­ரான டிஸயர் கொலிங்­பாவை தோற்­க­டித்து வெற்­றியை தன­தாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசில் முஸ்­லிம்­க­ளுக்கும் கிறிஸ்­த­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வன்­மு­றைகள் இடம்­பெ­று­வது அதி­க­ரித்து வரு­கி­றது.
பான்­கு­யிலில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்ற வன்­மு­றை­களில் இரு முஸ்லிம் ஆண்கள் படு­கொலை செய்­யப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டனர்.
தனது வெற்­றி­யை­ய­டுத்து பன்ஸா உரை­யாற்­று­கையில், கிறிஸ்­தவ போரா­ளி­களும் முன்னாள் செலெகா கிளர்ச்சி இயக்­கத்தைச் சேர்ந்த முஸ்லிம் போரா­ளி­களும் மோதல்­களை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.
கிறிஸ்­த­வ­ரான பன்ஸா வெற்­றி­க­ர­மான வர்த்­தக பிர­மு­க­ரா­கவும் திகழ்ந்து வரு­கின்றார்.
மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ர­சுக்கு படைகளை அனுப்புவதற்கு ஜரோப்பிய ஒன்றிய வெளி நாட்டு அமைச்சர்கள் இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே அவரது தெரிவு இடம் பெற்றுள்ளது.

நன்றி வீரகேசரி

No comments: