புத்தாண்டுகள் பல விதம்

.
பாரதி காவலர் கே. ராமமூர்த்தி

ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் கொண்டதாக, கி.மு.4241லிருந்து, வழக்கமாக இருந்தது தெரியவருகிறது. முதலாவதான கலண்டர் ( அல்மனாக் ) அதாவது பஞ்சாங்கம், வைவஸ்வத மனு சக்கரவர்த்தியின் காலத்தில், ஸப்த ரிஷிகளினால் உருவாக்கப்பட்டது.


 இந்துக்களின் பஞ்சாங்கம் என்பது யுகங்களின் அடிப்படையிலானது. விண்மீன் ஆண்டுகள், கோள்களின் ஆண்டு, சூரியமான (சௌரமான) ஆண்டு, சந்திரமான ஆண்டு என்பனவாகவும் கணக்கிடப்பட்டுள்ளன.


ஸப்த ரிஷிகளின் காலத்திற்குப் பிறகு, இந்த ஆண்டுக் கணக்குகளில் சிறிது மாற்றங்கள் கண்டறியப்பட்டன. மகாபாரத காலத்தில் வேதவியாசர் இதில் கவனம் செலுத்தியுள்ளார். மகரிஷி விஸ்வாமித்திரர் ஆண்டுக் கணக்குகளை ஆய்ந்து தனி மகாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஆண்டின் தொடக்கம் தை மாதம் என்பதாக, முடிவெடுக்கப்பட்டது. சில காலம் சென்றது.


மகரிஷி பராசரர் ஆய்வு செய்து மார்கழியை ஆண்டின் முதல் மாதம் என்று அறிவித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று திருவாய் மலர்தருளினார். பின்னர் மகரிஷி கார்க என்பவர் கார்த்திகைதான் ஆண்டின் தொடக்க மாதம் என்பதாக ஆய்ந்து தெளிவுடன் கூறினார். இறுதியாக வராகமிஹிரர் மேலும் பலப்பல ஆய்வுகள் செய்து சித்திரை மாதமே புத்தாண்டு என்பதாக அறிவித்தார்.
ரிக்வேத காலத்து சூர்யமான, சந்திரமான ஆண்டுகள் 360 நாட்கள் கொண்டவையாக இருந்தன. பிறகு 365 நாட்கள் என்பது கோள்களின் சுழற்சி வேகத்தினால் கண்டறியப்பட்டது.


ரோமானிய கலண்டர்கள், சீன, எகிப்திய கலண்டர்கள் கூட வேதகால பஞ்சாங்கங்களின் அடிப்படையை பெரிதும் ஆதாரமாகக் கொண்டே அமைந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜூலியஸ் ஸீஸர் (கி.மு.10244) உருவாக்கிய கலண்டர் கி.மு.45இல் தயாரானது. 365 நாட்கள் கொண்ட அது ஜூலியன் கலண்டர் என்றழைக்கப்பட்டது.
பின்னர் கிரேகோரியன் கலண்டர் வழக்கிற்கு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லீப் இயர் என்பதாக அது அமைந்தது. கிரேகோரி தி கிரேட் காலம் கி.பி.540604.
காலப்போக்கில் பன்னிரண்டாவது கிரேகோரி காலத்தில்தான் (15021585) கிரேகோரியன் கலண்டர் உருவாயிற்று. 1582இல் கிரேகோரியன் கலண்டர் உருவானபிறகு 1752இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த கலண்டரை எங்கும் அதிகார பூர்வமாக அறிமுகப் படுத்தியது. இந்தியாவிலும் அது காலம் செல்லச்செல்ல, கலண்டர்கள், அல்மனாக்குகள், பஞ்சாங்கங்கள், நாள் குறிப்பு என்கிற டயரிகள் ஆகியவை உலகெங்கும் பரவின.


ரோமானியர்களும் கிரேக்கர்களும் பாரதநாட்டு வேதபஞ்சாங்கங்களின் அடிப்படையிலும், பிரெஞ்சு கலாசார, பிரிட்டிஷ், ரோமானியரைப் பின்பற்றியும் தொடங்கியவை.


காலப்போக்கில் பலவித மாறுதல்களும் பெற்று உலகநாடுகள் எங்கும் புத்தாண்டு கலண்டர், டயரி என்பது மிகமுக்கியமான ஒரு அம்சமாகத்திகழ ஆரம்பித்து விட்டது.
இன்று புத்தாண்டுகள் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன.


கல்பம் என்பது 432 கோடி ஆண்டுகள் (வேதபுராண கணக்குப்படி). கோலாண்டு என்பது 26,000 ஆண்டுகள் கொண்டது. யூதர்கள் தங்களின் புத்தாண்டை ஸபாட்டிகல் புத்தாண்டு என்கிறார்கள். இதுதவிர நாண்மீன் கணிப்பியல் ஆண்டு அஸ்வினி நட்சத்திர அடிப்படையில் ஒன்று உண்டு.


தமிழ்நாட்டில் கொல்லம் ஆண்டு என்கிற 60 ஆண்டுகளின் கணக்கு (பிரபவ ஆண்டு தொடங்கி) வழக்கில் உள்ளது. இது சித்திரையில் தொடங்குவது. பல்லாண்டு காலமாக இருந்ததை முந்தைய தமிழக அரசு மாற்றியது. இன்றைய தமிழக அரசு அதனை சித்திரையாக்கி மரபு காத்தது.


முஸ்லிம்களின் ஆண்டு ஹிஜ்ரி (622 கி.பி.) அக்பர் சக்கரவர்த்தி (15421605) பிஸலி ஆண்டு என்பதாக அறிமுகப்படுத்தினார். பங்களாதேஷில் ஸால் இயர் என்பது வழக்கு.
மேலும் லீப் இயர், கணக்காண்டு என்பவையும் நடப்பில் உள்ளன.


இன்று நாம் பெரும்பாலும் உலகெங்கும் கொண்டாடுகிற புத்தாண்டை இயர் ஒப் கிரேஸ் (அருளாண்டு) என்கிறார்கள். ஏசு கிறிஸ்து பிறப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது.
இதை ஆங்கிலப் புத்தாண்டு என்று நாம் அழைக்கிறோம்.


மகாகவி சுப்பிரமண்ய பாரதி  வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு'  என்ற அற்புதமான பாடலை எழுதியது ஒரு தமிழ்ப் புத்தாண்டில்தான்.


இந்த மண்ணும் விண்ணும்  கடலும் அலையும்  கோள்களும் விண்மீன்களும் கதிரும் மதியும் மானுடமும் ஜீவிதமும் இயற்கை இறைமை என இப்பிரபஞ்சம் உள்ள மட்டும், புத்தாண்டுகளின் முதல்நாளில் உலகம் மகிழ்ந்து நலமாக வாழும் என்பது திண்ணம்.

Nantri: http://www.thinakkural.lk/article.php?

No comments: