.
சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்!
ஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் ஸ்னைபர் தாக்குதல்!
சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்!
சிரியாவில் அந்நாட்டு அரச படைகளால் இரசாயன ஆயுதத் தாக்குதல்
நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரதேசத்திற்கு ஐ.நா. கண்காணிப்பாளர்கள்
விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவுப் படையினர் மோதல்
நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தமையை அடுத்தே ஐ.நா. கண்காணிப்பாளர்கள்
அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும் சிரிய அரசாங்கத்தின் மேற்படி முடிவுக்கு சர்வதேசம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு சிரிய கிளர்ச்சியாளர்கள் தங்களது வரவேற்பைப் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் டமஸ்கஸ் நகரின் புறநகர் பகுதியில் அந்நாட்டுப்
படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமை
நடத்திய தாக்குதலில் 1700 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக
அந்நாட்டு அரசாங்க செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயுடா பிராந்தியத்தில் புறநகர் பகுதியில் இரசாயன
வெடிகுண்டுகளை கொண்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக
கூறப்படுகிறது.
தாம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை
நடத்தியதாக கூறுவது எதுவித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டு என
சிரிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.
மேற்படி தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டம் வெளியிட்டுள்ளன.நன்றி வீரகேசரி
ஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் ஸ்னைபர் தாக்குதல்!
No comments:
Post a Comment