அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத படகுப்பயணம் - துஸ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை


முன்னர் மோதல் வலயங்களாக உள்ள இடங்களில் ,வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து மற்றும் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதன் மூலமாகவே இந்தப்போக்கின் கடுமையை குறைக்க முடியும். தரப்பட்டுள்ள உள்ளுர் நிலமைகளின்படி, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும். யுத்தத்தின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் புகலிடம் அல்லது குடியேற்றம் தேடும் போக்கினை தடுத்து நிறுத்தவும் நீடீத்த ஒரு முயற்சி அவசியம்”

australia tripமே 2009 ல் யுத்தம் நிறைவடைந்து விட்டாலும் ஒன்றில் புகலிட அந்தஸ்து தேடுவதற்கோ அல்லது பொய்யான அறிவிப்புகளை மேற்கொண்டு அவுஸ்திரேலிய மண்ணில் கால் வைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத பயணங்களை மேற்கொள்வது இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. உண்மையில் அதிகாரிகளின் கூற்றுப்படி அது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நெருக்கடி.

உள்ளுர் மக்கள் தெரிவிப்பதன்படி, கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வேலை செய்தவர்களில் பெரும்பாலானோர், பெரும் குழுக்களாகச் சேர்ந்து காலநிலைகளைப்பற்றி அறிந்து கொள்ளாமல், தேவையான உடைகளை எடுத்துக்கொள்ளாமல், மற்றும் பயணத்துக்கு எடுக்கும் கால அளவைக்கூட அறியாமல் அவுஸ்திரேலியாவுக்கான ஆபத்தான படகுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்களாம். விரக்தியுடன் நாட்டைவிட்டு வெளியேறிய முதல்தொகுதி ஆட்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் நான் அச்சுறுத்தலுக்கு ஆளானேன், எனது மனைவியின் தாலிக்கொடி உட்பட அனைத்து தங்க நகைகளையும் அடகுவைத்து அவுஸ்திரேலியாவுக்கான பாதுகாப்பான பயணத்துக்கு வேண்டி பயண முகவரிடம் 13 லட்சம் ரூபாவை செலுத்தினேன். நவம்பர் 2012ல் முதலாவதாகத் திருப்பியனுப்பப் பட்டவர்களில் நானும் ஒருவன்.


சட்டவிரோதமான முறையில் வெளியேற வழிதேடினார்கள் என்கிற குற்றச்சாட்டின் கீழ் எங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மற்றும் மூன்றாவது விசாரணை டிசம்பர் 2013ல் நடைபெற உள்ளது. ஒரு நீதிமன்ற வழக்குக்கு எவ்வளவு காலம் எடுக்கும் அல்லது அதற்கான தண்டனை என்னவாக இருக்கும் என்பது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தற்சமயம் நான் வேலையற்றவனாக இருப்பதால் எனது மனைவியின் நகைகளை மீட்பதற்குரிய வட்டியைக்கூடக் கட்ட முடியாதவனாக உள்ளேன். எனது பிள்ளைகளின் சக மாணவர்கள் நீங்கள் எப்போது அவஸ்திரேலியாவுக்கு போகப் போகிறீர்கள், உங்கள் அப்பா அவுஸ்திரேலியாவிலிருந்து என்ன கொண்டு வந்தார், அவர் ஏன் திருப்பியனுப்பப்பட்டார்ஷஷ எனக்கேட்டு அவர்களைக் கேலி செய்கிறார்கள். அதன் விளைவாக எனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லக்கூட மறுக்கிறார்கள் என்று சுற்றுப்புறத்தை அவதானமாக நோட்டமிட்டவாறே, கண்ணீருடன் சொன்னார் கரண், அவர் ஸ்ரீலங்காவின் கிழக்கு கரையோரப்பகுதியில் வாழ்கிறார்.

மனிதாபிமானமுள்ள தேசம்

திருப்பியனுப்பப் பட்டதின் பின்னர் தனது கதியைப்பற்றி அறிந்துகொண்டுள்ள ஒருவர் கரண். அவரைப்போன்ற இன்னும் பலர் உள்ளனர்.நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம், மனிதக் கடத்தல்காரர்களிடம் அல்லது பணத்துக்காக சட்டவிரோத பயணத்தை ஏற்பாடு செய்பவர்களிடம் அகப்பட்டுவிட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் தமிழ் மொழியில் விளம்பரப் பதாகைகளை அமைத்துள்ளது. அடிக்கடி வானொலி மூலமும் விளம்பர ஒலிபரப்புகள் தமிழ்மொழியில் மேற்கொள்ளவும் படுகிறது. மனிதக் கடத்தல்காரர்களைப்பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி சிறிய விளம்பர சுவரொட்டிகளும் வடக்கு மற்றும் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் யுத்த வலயத்தில் உள்ள ஆண்கள் திருத்தியமைக்கப்பட்டு கடுமையாகியுள்ள குடிவரவுச் சட்டங்களைப்பற்றி அதிகம் அறியாதவர்களாக உள்ளார்கள். அவுஸ்திரேலியா ஒரு மனிதாபிமானமுள்ள ஒரு நாடு அது எவரையும் வரவேற்று வாரியணைத்துக் கொள்ளும் என்கிற நோக்கிலேயே அதனைக் காண்கிறார்கள்.Australia ride

எனது குடும்பத்தில் நான்தான் இளையவன் மற்றும் எனக்கு மூன்று மூத்த சகோதரிகள் உள்ளனர். எனது தந்தை போரில் கொல்லப்பட்டார் மற்றும் எங்களது குடும்பத்துக்கு உதவ வேறு யாரும் இல்லை. எப்படியாவது நான் ஒரு வாழ்வாதரத்தை அமைத்து எனது மூன்று சகோதரிகளையும் மணமுடித்து கொடுக்கவேண்டியுள்ளது, எனவே  நான் எனது படிப்பை கைவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்று விரைவாக பணம் தேடுவது என்று முடிவெடுத்தேன். அதற்காக எனது தாய் மற்றும் சிற்றன்னை ஆகியோரின் நகைகளை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாவினை பலராலும் விசுவசிக்கப்படும் ஒரு முகவரிடம் செலுத்தினேன். நாங்கள் வன்னியை விட்டு வெளியேறுவதற்கு இந்த முகவர் உதவி புரிந்தார். புறப்படுவதற்கு தயாராக இருந்த சமயம் நீர்கொழும்பு கடற்கரையில் வைத்து மற்றும் பலருடன் சேர்த்து என்னையும் கடற்படை அதிகாரிகள் கைது செய்துவிட்டார்கள் என்று முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடுவை சேர்ந்த பதின்ம வயதுக்காரனான ராஜ் சொல்கிறான். பேசும்போது எழுந்த தேம்பலை அவனால் அடக்க முடியவில்லை.

மக்கள் இப்போது வானொலி ஒலிபரப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள், அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வது போன்ற முட்டாள்தனமான முடிவுகளை மேற்கொள்ளாமல் இருக்கும்படி அது அவர்களை எச்சரிக்கை செய்கிறது. தமிழில் வெளியாகும் வானொலி விளம்பரம் ஒரு வலிமையான செய்தியை வெளிப்படுத்துகிறது, அவுஸ்திரேலியா தனது குடிவரவுச் சட்டங்களை கடுமையாக்கியுள்ளது. சட்டவிரோதமாக உள்நுழைபவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் படகுகள் பப்புவா நியு கினியாவுக்கு திருப்பப்படும்,மற்றும் இந்த நபர்கள் கடத்தல்காரர்களுக்கு செலுத்தும் பணம் விசாவுக்கான அனுமதிக்கட்டணமாக கருதப்பட மாட்டாது.

விரக்தியான பயணங்கள்

சமீபத்தைய ஆய்வு ஒன்றின்படி, பெண்களைக் காட்டிலும் இளம் வயதுடைய ஆண்களே இந்த ஆபத்தான படகுப் பயணத்தை அதிகம் மேற்கொள்ளும் சாத்தியம் உள்ளதாகக் கண்டறிப் பட்டுள்ளது. மேலும் குடிபெயருவதற்கான ஆவல் வயது செல்ல செல்ல மறைந்து விடுகிறது. ஒப்பீட்டளவில் வயதானவர்களைக் காட்டிலும் இளவயதினரே குடியேறுவதற்கு அளவு கடந்த ஆவல் உடையவர்களாக உள்ளனர். மேலும் ஒப்பீட்டளவில் குறைவான கல்வியறிவு உள்ளவர்கள் சாத்தியமான எந்த வழிகளைக் கையாண்டாவது வேறிடங்களுக்கு குடியேறுவதற்கு முயற்சி செய்வதில் அதிக நாட்டம் செலுத்துவதாகத் தோன்றுகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி வெளிச்சத்துக்கு வரும் உண்மை என்னவென்றால், திருமணமாகாத இளைஞர்கள், குடும்பத்துடன் வாழும் ஆண்களைக் காட்டிலும் குடியேற்ற முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது. குடியேற்றம் மற்றும் புகலிடம் தேடுதல் என்பனவற்றில் அளவுக்குமீறி ஆர்வத்தை தூண்டுவதற்கான காரணிகள் மோசமான வாழ்க்கை நிலை (74 விகிதம்) மற்றும் வாய்ப்புக்குறைவு (41 விகிதம்) என்பனவே. இதன்படி  முன்னாள் போராளிகள் மத்தியிலிருந்தும் கூட வெளிநாடுகளுக்கு குடிபெயர முயற்சிப்பதற்கான அடிப்படைக் காரணம் பொருளாதார வெறுமையே. பாதுகாப்பின்மை,  வெளிநாடுகளுக்கு குடியேற்றத்தை தூண்டும் சிறிய காரணியாகவே உள்ளது (18 விகிதம் மட்டுமே).; பெரிய விகிதாச்சாரத்திலான, வடமராட்சி வடக்கு (91விகிதம்), தென்மராட்சி (87விகிதம்),யாழ்ப்பாணம் (70 விகிதம்), நல்லூர் (70விகிதம்), காரைநகர் (67 விகிதம்), வலிகாமம் தெற்கு (60 விகிதம்) போன்ற இடங்களில் வாழும் அதிகமான இளைஞர்கள் இந்தக் கரையை விட்டு வெளியேறும் தங்கள் ஆவலை தெரிவித்தார்கள். அதேவேளை வலிகாமம் கிழக்கில் வாழும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுவதில் மிகவும் குறைந்தளவு (9 விகிதம்) நாட்டத்தையே காண்பித்தார்கள். அபிவிருத்தி பொருளியிலாளரும் மற்றும் பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதம ஆய்வாளருமான கலாநிதி.முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் அவர்களின் குறிப்பிலaustralia-11ிருந்து இது பெறப்பட்டது.

கடந்த வருடத்தில் மட்டும் ஸ்ரீலங்காவிலிருந்து கிட்டத்தட்ட 6,400 பேர்கள் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளார்கள். சமீபத்தில் அவுஸ்திரேலியா கடுமையான குடிவரவு சட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2012 இலிருந்து 1,000 ஸ்ரீலங்காவாசிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். இரண்டு காரணங்களுக்காக நான் நாட்டை விட்டு வெளியேறினேன் - கிழக்கு மாகாணசபை தேர்தல்களின்போது நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு உதவி செய்தேன் மற்றும் அதற்காக அந்தப் பிரதேசத்திலிருந்த அறிமுகமற்ற சிலரால் நான் சில தடவைகள் அச்சுறுத்தப்பட்டேன். எனக்கு மாற்றுத் திறனாளியான ஒரு தங்கை உள்ளார், அவரது மருத்துவ வசதிகளுக்கும் அவரைக் காப்பாற்றுவதற்கும் ஏராளமான பணம் அவருக்கு தேவையாக உள்ளது. எனது குடும்பச் சுமைகளை நானே சுமக்கவேண்டி உள்ளது .நான் ஒரு கலைப் பட்டதாரியாக இருந்தபோதும் ,எனது குடும்பத்தை போற்றுவதற்கு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு வேலையை என்னால் தேடிக் கொள்ள முடியவில்லை என்கிறார் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மென்மையாகப் பேசும் பாலு என்பவர்.

ஆபத்தான படகுப் பயணத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த மனிதர்கள், அவுஸ்திரேலிய மண்ணில் தங்களுக்கு நல் வரவேற்பு கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் கருதி; நிதானமாக சிந்திக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பயணத்தில் உள்ள ஆபத்துக்களைப் பற்றியும் அக்கறை காட்டவில்லை,எப்படியாவது இங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்கிற அவாவினால் மட்டும் தூண்டப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பெரும்பாலும் ஒருசோடி இறப்பர் செருப்புகள் மற்றும் தங்கள் பின்புறப் பையில் பொதுவாக ஒரு சாறம் மற்றும் ஒரு துவாய் என்பனவற்றுடனேயே புறப்பட்டார்கள். சிலர் தங்கள் முகவர்கள் சிலரால் வழங்கப்பட்ட ரசீதுகளை கொண்டு சென்ற, அதேவேளை மற்றும் சிலர் புகலிடம் தேடுவதற்காக பெறுமதியான பயணப்பத்திரங்களை கொண்டு சென்றார்கள். அவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் சில ஸ்ரீலங்கா ரூபா நோட்டுகள் மற்றும் லமினேட் செய்யப்பட்ட தாங்கள் விசுவசிக்கும் தெய்வங்களின் படங்களை, குறிப்பாக இந்துக்கள் மற்றும் கத்தோலிக்கர்;கள், தங்கள் பணப்பைகளில் வைத்திருந்தார்கள்.

திரளான நாடுகடத்தல்

நவம்பர் 2012ல் நாடு கடத்தப்பட்ட இந்த மனிதர்கள் கூறுவது, அதிகாரிகள் தங்களது ஆவணங்களை முறையாகப் பரிசீலிக்கவில்லை மற்றும் நேர்முகப் பரீட்சைகளை அவசரகதியில் நடத்திவிட்டு, அந்த அதிகாரிகள் அவர்களை வேறு ஒரு முகாமுக்கு மாற்றப்போவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் திருப்பியனுப்ப பட்டார்கள்.

கரண் மற்றும் பாலு ஆகியோர் ஒக்டோபர் 2012ல் ஸ்ரீலங்காவிலிருந்து மொத்தமாக 110 பேர்கள் - பெரும்பாலும் தமிழர்கள் - அடைக்கப்பட்ட ஒடுக்கமான ஒரு மீன்பிடி படகில் புறப்பட்டு, 19 நாட்கள் கடலில் கழித்து, சில நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு இறுதியாக கொக்கோ தீவுகளை அடைந்தார்கள். அதன் பின்னர் கிறிஸ்மஸ் தீவுகளுக்கும் மற்றும் நாடுகடத்தப்படுவதற்கு முன்னதாக டார்வினுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

நவம்பர் 2012ல் மற்றும் 50 பேருடன் முதன்முதலாக நாடுகடத்தப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவார்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் முதலாவது விசாரணை அமர்வு 2013 மார்ச்சிலும், இரண்டாவது அமர்வு ஆகஸ்ட் 2013லும், நடத்தப்பட்ட அதேவேளை மூன்றாவது விசாரணை டிசம்பர் 2013 க்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் மே 2009ல் ஒரு முடிவுக்கு வந்ததுடன் வெளிநாட்டுக்கு வெளியேறும் அகதிகளின் தொகை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. போரின் முடிவினை அடுத்து சட்டபூர்வ குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், சட்டபூர்வமற்ற குடியேற்றம் குறைவடையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சில ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்காவாசிகள், இந்தியா, இந்தோனசியா, மலேசியா ,மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் பிரதானமாக அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் நியுசிலாந்து போன்ற இடங்களுக்குச் செல்வதற்காக இடைத் தங்கல் நிலைகளில் உள்ளார்கள் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

முன்னர் மோதல் வலயங்களாக உள்ள இடங்களில் ,வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து மற்றும் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதன் மூலமாகவே இந்தப்போக்கின் கடுமையை குறைக்க முடியும். தரப்பட்டுள்ள உள்ளுர் நிலமைகளின்படி, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும். யுத்தத்தின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் புகலிடம் அல்லது குடியேற்றம் தேடும் போக்கினை தடுத்து நிறுத்தவும் நீடீத்த ஒரு முயற்சி அவசியம்” என்பது சர்வானந்தனின் கருத்து.

இந்த நாடு கடத்தப்பட்டவர்களும்கூட மன அதிர்ச்சி மற்றும் அடையாளப் படுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள். அவர்கள் இன்னமும் பலவகையான அச்சுறுத்தல்களுக்கு பெரும்பாலும் அரசியல் சம்பந்தமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதுடன் தங்கள் உயிர் ஆபத்தில் உள்ளதாக் கூறுகிறார்கள்.

தங்களையொத்த நாடு கடத்தப்பட்டவர்களுடன் பழகுவதை தவிர, அவர்கள் வெளியே செல்வதோ மற்றவர்களுடன் பழகுவதோ வெகு குறைவாக இருப்பதுடன், ஒரு ஒழுங்கான வாழ்வை இனிமேலும் அனுபவிக்க முடியாதவர்களாக உள்ளார்கள். அவர்கள் தங்கள் சொந்த சமூகத்திலிருந்தே வெகு திறமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், கடன் தொல்லை, சட்டபூர்வமற்ற அவர்களின் செயற்பாடு, சொத்துக்கள் மற்றும் செல்வத்தை இழந்தமை மற்றும் மிகவும் முக்கியமாக கண்ணியத்தை இழந்தமை என்பன asylum-seeker-alexகாரணமாக அவர்களில் பலரும் சமூகத்தை சந்நதிக்க இயலாதவர்களாக உள்ளார்கள்.

கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே கடத்தல் காரர்களுக்கு செலுத்துவதற்காக உடனடி பணத்தை பெறுவதற்காக தங்கள் வீட்டு பெண்களின் பாரம்பரிய தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார்கள், நாடுகடத்தப்பட்டதின் பின்னர் அடமானம் பெற்றுக்கொண்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்துள்ள வட்டியினை செலுத்தாவிடில் அவர்களது தங்க நகைகள் யாவும் விரைவில் ஏலத்தில் விடப்படும் என இந்த மனிதர்களுக்கு எச்சரிக்கை விட ஆரம்பித்துள்ளார்கள். இந்த நாடுகடத்தப் பட்டவர்கள் வெட்கம் அடைந்துள்ளதுடன் சிலர் தற்கொலை செய்யும் போக்கிலும் உள்ளார்கள்.

அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இது தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்சினை. அதனால்தான் கவர்ச்சிகரமான இந்த விளம்பரப் பதாகைகள்.

(அனைத்து நாடு கடத்தப்பட்டவர்கள் மற்றும் தஞ்சம் கோரும் சாத்தியமுள்ளவர்களின் பெயர்கள் அவர்களது அடையாளங்களை பாதுகாப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி புகைப்படம் எடுப்பதும் தவிர்க்கப்பட்டுள்ளது)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்  நன்றி தேனீ
 

No comments: