தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்

.


கல்கி.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களைமுதியோரும்,மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம்அமெரிக்க வாழ் தமிழர்ஸ்ரீகாந்த்,ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன்அமெரிக்காவில்குடியேறினார்அங்குமென்பொருள் துறையில்திட்ட மேலாளராக வேலை பார்த்தபடிதமிழ்மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த்அதன் மூலம்தமிழ் தொடர்பானபணிகளில் ஈடுபட்டுவருகிறார்குறிப்பாககுழந்தைகளுக்கான இசைகவிதைபேச்சுநாடகங்கள்போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போதுசான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ்மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார்அங்கு உள்ளஸ்டான் போர்டு பல்கலைகழக வானொலியில்மூன்று மணி நேரம்தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறதுஅதில்,பாடல்நேர்காணல்நாடகம் எனபலவற்றை ஒலிபரப்பி வருகிறார்அவருடைய பணிகளில்முக்கியமானதுநாவல்களைஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின்




"பொன்னியின்செல்வன்சிவகாமியின் சபதம்பார்த்திபன் கனவுஆகிய நாவல்களைஆடியோ புத்தகமாகவெளியிட்டுள்ளார்மேலும்.வே.சா.,வின், "என் சரித்திரம்நூலைஆடியோ புத்தகமாகமாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்."ஆடியோ புத்தகம் எனில்செய்தி வாசிப்பது போல்இருக்கும்என்றபொதுவான விமர்சனங்களை தாண்டிதனித்துவத்துடன் உருவாக்கிஇருக்கிறார்.நாவலின் நடையில்காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும்கதாபாத்திரங்கள்பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார்கல்கியின், "பொன்னியின் செல்வன்'நூலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைதானே பேசி அசத்தியுள்ளார்இது, 75மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக உள்ளது.

இதுகுறித்துஸ்ரீகாந்த் கூறியதாவதுதுவக்கத்தில் துபாயில்மென்பொருள் துறையில்வேலை பார்த்த நான்அடுத்தமூன்று ஆண்டுகளில்அமெரிக்கா சென்றேன்அங்கு,ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தனஅவர்கள்பல்வேறு சிக்கல்களைஎதிர்கொள்ள வேண்டி இருந்ததுகுறிப்பாகமொழி பிரச்னை அதிகமாக இருந்ததுஅடுத்ததலைமுறையினர்ஆங்கிலத்திலேயே எழுதிபேசுவதால்தமிழ் மொழி மறந்தே போகும்அபாயம் இருந்தது.எனவேஇங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் இருக்கஎன்னால் இயன்றவகையில்பணியாற்றி வருகிறேன்.என் வேலைமிகவும் பரபரப்பானதுமனதளவில்அழுத்தம் கொடுக்க கூடியதுஇதில்போதுமான ஓய்வு கிடைப்பதுசாத்தியமில்லாதது.இருந்தாலும்எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில்அடுத்த தலைமுறையினருக்கு சென்றுசேரும் வகையில்தமிழ் சேவை செய்வதுசுகமானது.இவ்வாறுஅவர் கூறினார்.

இவருடைய ஆடியோவை கேட்டமாற்றுத் திறனாளிகளும்முதியோரும்இவருடையசேவையை பாராட்டிநேரிலும்மின்னஞ்சல் மூலமாகவும்பாராட்டி வருகின்றனர்.அவருடைய இணைய முகவரிwww.tamilaudiobooks.com

No comments: