பாட்டன் காலத்து பழைய மரம்

.

பாட்டன் காலத்து
பழைய மரம் அது !

குருவிகள் ஆயிரம்
கூடுகட்டி வாழ்ந்திட்ட
குடியிருப்பு அது!

ஆடுகள்,மாடுகள்
இளைப்பாற கிடைத்திட்ட
இலவச விடுதி அது !

ஓணான்களும், அணில்களும்
ஓடிப்பழகும்
மைதானம் அது!

உடும்புகளும் , ஆந்தைகளும்
ஒய்யாரம் காணும்
உயர்ந்த மாடி அது!


பாம்பும்,பச்சோந்தியும்
பச்சை பூசி படுத்திருக்கும்
கலைக்கூடம் அது!

கிளிகள் கிறீச்சிட, ஆந்தைகள்அலறிட
குதூகலப்படும்
கச்சேரி மேடை அது!

காக்கை கூட்டில்
குயில் குஞ்சு பொறிக்கும்
நாடகமேடை அது!

இப்போ
பாட்டன் காலத்து
பளையமரம் களையப்பட்டு
பங்களா ஆகி இருக்கிறது
அங்கே
ஒற்றை மனிதக் குடும்பம் மட்டும்
உயிர் வாழ்ந்திருக்கிறது !

No comments: