நான் உன்னைக் காதலிக்கிறேன்..

.வானில் நஷ்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும் காதலைச்
சொல்ல ஏற்றுக் கொல்லாத
பௌர்ணமி நிலவு ....
சூரியன் காதலைச் சொல்ல
வருவதைக் கண்டதும்
ஓடி ஒளிவதேன்....
இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?   

 உன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....
ஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...
எப்படி சொல்லுகிறாய்  என்று  கேட்டாய்....

காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம்  .....
நிழல் பொய் தானே என்றேன் .....

 நீ மல்லிகை  பூக்களை
தொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும் 
 "நான் உன்னைக் காதலிக்கிறேன் "
என்று சொல்லத் துடிக்கிறது ....
நீயோ அதன் உயிரைக்  கிள்ளி
சரமாக்கி கூந்தலில்  சூடிக் கொள்கிறாய் ....
நீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்
நினைத்து இருந்தேன்...
இப்படிக்  கல்நெஞ்சக்காரியாய்
இருக்கிறாயே  ?!

வெறுமையை சுவாசித்தேன் ..
வெறுமை எனது உணர்வாயிற்று  ..
உன் கண்களை கண்டேன் ..
நீயோ உன்  சந்திர காந்தப்  பார்வையால் ...
என் வெறுமையை  காதலால் நிரப்பினாய் ...!!

நான் பெண்ணாய் பிறந்திருந்தால்
நீ யாக இருந்திருப்பேன்...
நான் ஆணாக பிறந்ததால் ...
காதல்  அடையாளம் காட்டியது ...
உன்னை நானாக ......

நன்றி thanikaatturaja.blogspot.

No comments: