இலங்கைச் செய்திகள்


இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்

வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது: அரசாங்கம்

பேரினவாத செயற்பாடுகளால் மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் களைகட்டின

=======================================================================
இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்

10/04/2013 இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாகவே இந்தத்தொகை வழங்கப்பட்டது என அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்ஸித் தெரிவித்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நட்டஈட்டுத் தொகை புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தப் பணக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கு மாகாணசபையில் கூடுதல் ஆசனங்களை வழங்குதல், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒரு பில்லியன் ரூபா பண உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த இரகசிய இணக்கப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது: அரசாங்கம்


10/04/2013  வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்கொரியாவில் உள்ள வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேறுமாறு அண்மையில் வடகொரியா கோரியிருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் ஏற்படக் கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில் சுமார் 20000த்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் துரித கதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென் கொரியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், நிiமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் எந்தவொரு தூதரகமும் வடகொரியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லைஎன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி வீரகேசரி

பேரினவாத செயற்பாடுகளால் மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் களைகட்டின11/04/2013 பேரினவாத செயற்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் கடந்த இரண்டு தினங்களாகக் களை கட்ட ஆரம்பித்துள்ளன.


பொதுவாக முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மிக மந்த நிலையிலே இருந்தன. நேற்றும் இன்றும் மடவளை,அக்குறணை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் சிங்கள் மக்கள் தமது புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகப் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்வதையும் நகரில் கூடுதலாக சன நடமாட்டத்தையும் காண முடிந்தது.

கடந்த வாரங்களில் கூடுதலான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்து ஹலால் பிரச்சினை காரணமாக மந்த கதியில் இடம்பெற்ற விற்பனையால் உற்சாகமிழந்து காணப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

நன்றி வீரகேசரி 
Share

-
இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ், சிங்கள் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பு 02 மலே மைதானத்தில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

-
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
-
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
-

-
(ப
-
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
-
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
-
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)


நன்றி வீரகேசரி


லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

பி.பி.சி
loginiவிடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு என் எச் சி ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங்கள் மீண்டும் விண்ணபிக்கப் போவதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் அதிகாரி தமது பதிலில் தெவித்துள்ளதாகவும் கீதார்த்தனன் கூறினார். அந்த 19 பேருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வேறு எதாவது அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரா என்பதை தமது அமைப்பு பிரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த 19 பேரில் ஒன்பது பேர் திருப்பி அனுப்பவே முடியாத நிலையில் இருப்பதாகக் கூறும் கீதார்த்தனன், அப்படி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்றும் கூறுகிறார். அந்த ஒன்பது பேரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் நோக்கில் இலங்கையிலிருந்து வெளியிருந்தார்கள் என்று அவர்களது வழக்கறிஞர் கூறுகிறார், ஆனால் தாங்கள் 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டதாக லோஹினி ரதிமோகன் கடந்த வாரம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது துபாயில் தமது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ள நிலையில் இருக்கும் இவர்களில் சிலர் இறுதி யுத்த நேரத்தில் இலங்கை அரசிடம் சரணடைந்து, பின்னர் முகாம்களிலிருந்து தப்பித்து இந்தியா சென்று தஞ்சம் புகுந்திருந்தார்கள் எனவும் கீதார்த்தனன் கூறுகிறார். நன்றி தேனீ 

தனது 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்தின் பின் அடித்துக் கொன்ற தந்தை: யாழில் சம்பவம்

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில், தனது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த தனது 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர் குறித்த சிறுமியை அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. குறித்த சிறுமியின் பெண்குறி சிதைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தலை, கை கால் மற்றும் உடம்பின் பல பகுதிகளில் சீறல் காயங்களும் கண்டல் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே ரூபன் நிலாஞ்சினி (வயது 9) சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தந்தை தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் சடலம் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நன்றி தேனீ 
tamilfilm banதமிழ்நாட்டு திரைப்படங்களை திரையிட வேண்டாம் : ராவணா சக்தி

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் தடைசெய்ய வேண்டுமெனக்கோரி ராவணா சக்தி என்ற அமைப்பினால் மகஜரொன்று இலங்கை திரைப்படப் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் இலங்கைக்கு எதிராக தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் தமிழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனை கண்டிக்கும் வண்ணம் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த அமைப்பினால் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் இலங்கையில் திரையிட வேண்டாமெனக் கோரி மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது     நன்றி தேனீ 
____________________________________________________________________________________________________________

யாழில் உதயன் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல்: அச்சு இயந்திரங்களும் எரிப்பு13/04/2013 யாழ்ப்பாணத்தின் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை 4.45மணியளவில் அலுவலகத்தினுள் நுழைந்த கும்பலொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

அங்குள்ள அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டவர்கள் அவற்றின் மீது பெற்றோலை ஊற்றி அச்சு இயந்திரங்களையும் , அச்சுத்தாள்களையும் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.


முன்னதாக அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அங்கிருந்த பணியாளர்களை விரட்டிவிட்டே அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாளைய தினம் வெளிவரவுள்ள வார இதழுக்காக அச்சிடப்பட்ட நிலையிலிருந்த கட்டுரைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நன்றி வீரகேசரி


No comments: