இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி மார்கிரட் தட்சர் காலமானார்!
மும்பை தானே கட்டிட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு
வடகொரிய ஏவுகணைகள் தயார் நிலையில்!
=======================================================================
08/04/2013 இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மார்கிரட் தட்சர் தனது 87 வயதில் இன்று காலமானதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் 1979 முதல் 1990 வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்தார்.
மேலும் 20 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் 3 வருடங்களுக்கு தொடர்ச்சியாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமரான இவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு 2002 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார் நன்றி வீரகேசரி
.
மும்பை தானே கட்டிட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு
06/04/2013 மும்பையின் தானேயில் புதிதாக கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த கட்டிடத்திலன் 4 மாடிகளில் 35 குடும்பங்கள் வசித்து வந்தன. மேலும் 3 மாடிகளைக் கட்டும்பணியில் கட்டிடத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென 7 மாடிக் கட்டிடமும் அப்படியே நொறுங்கி விழுந்தது போல சரிந்தது.
இதில் 35 குடும்பத்தினரும் கட்டிடத் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மீட்பு பணி இன்றும் நீடித்து தற்போது நிறைவடைந்துள்ளது.
முழு 7 மாடி கட்டிடமும் அப்படியே நொறுங்கி, கொன்கிரீட் தூண்கள் ஒன்றின் மீது ஒன்று விழுந்து கிடந்ததால் அவற்றை அகற்ற மீட்புக்குழுவினர் கடுமையாக போராடியுள்ளனர்.
ஒவ்வொரு பகுதியும் அகற்றப்பட்ட போது குவியல், குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்து கொண்டிருந்தவர் களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் தானே கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 72 ஆகியுள்ளது. நன்றி வீரகேசரி
வடகொரிய ஏவுகணைகள் தயார் நிலையில்!
By
Kavinthan Shanmugarajah
2013-04-10 15:58:11
10/04/2013 வடகொரியாவானது தமது ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாகவும் எந்த
நேரத்திலும் ஏவுகணைகள் மூலம் தம்மீது தாக்குதல் தொடுக்கலாம் எனவும்
தென்கொரியா அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் தற்போது அவதானிப்பு நிலை (வொட்ச்கொன் 2) ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது போர் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உயர்வாக
இருப்பதாகும்.
கடந்த சில வாரங்களாக கொரிய தீபகற்பத்தை போர் மேகம் சூழ்ந்துள்ளது.
வடகொரியா, அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளான தென்கொரியா மற்றும்
ஜப்பானின் மீது எந்நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் விதத்திலான
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அண்மைக்காலமாக இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
கண்டம் விட்டு கண்டம் தாவும் சுமார் 3,000 கிலோ மீற்றர்கள் வரை
செல்லக்கூடிய முசுடன் ஏவுகணைகளை வடகொரியா கிழக்குக் கரையோரப் பகுதியை
நோக்கி நகர்த்தியிருந்தது.
நீண்டநாட்களாக இயங்காமல் இருக்கும் அணு உலையொன்றினை மீண்டும் இயக்கப் போவதாக அறிவித்தது.
மேலும் தனது நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை வெளியேறும் படி
அறிவித்திருந்ததுடன், தென்கொரியாவில் உள்ள வெளிநாட்டவர்களையும் வெளியேறும்
படி வேண்டுகோள் விடுத்திருந்தது.
வடகொரியாவின் மேற்படி நடவடிக்கைகள் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் அபாயகரமான சூழலை தடுக்கும்
பொருட்டு வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் படி தென்கொரிய அரசு சீனா
மற்றும் ரஸ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் வடகொரியா தனது நிலையில் உறுதியாக உள்ளமையை புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தென்கொரியா மட்டுமன்றி ஜப்பானும் வடகொரியாவின் நடவடிக்கைகளை தொடர்ச்சியா அவதானித்து வருகின்றது.
டோக்கியோவின் முக்கிய பகுதிகளின் ஏவுகணை எதிர்ப்பு தாங்கிகளை நிறுத்தியுள்ளது ஜப்பான்.
இதேவேளை அமெரிக்க புலானாய்வுத் தகவல்கள் வடகொரியாவின் ரகசிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது.
வடகொரியானது அதிக எண்ணிக்கையிலான மத்திய தர ஏவு முசுடன் ஏவுகணைகளை
தனது எல்லைப் பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா புலானாய்வு
அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ் ஏவுகணைகள் தென்கொரியா, ஜப்பான், குஹாமிலுள்ள் அமெரிக்கத் தளம்
உள்ளிட்ட இலக்குகளை தாக்கக்கூடியதுவை என்பதுடன் அவற்றுக்கு பெரும்
அச்சுறுத்தலாக திகழ்கின்றன.
இவை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை
பரிசோதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை இவ் ஏவுகணையானது
ஈரானில் பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி குறுந்தூர ஸ்கட் ஏவுகணைகளையும் வடகொரியா தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் ஒரே நேரத்தில் குறுந்தூர மற்றும் மத்திய தர ஏவுகணைகள் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்தலாம் என நம்பப்படுகின்றது.
போர்மேகம் சூழ்துள்ள இந்நிலையில் வடகொரியா தனது முன்னாள் தலைவர்களான
கிம் Il சங் மற்றும் கிம் ஜொங் இல் ஆகியோரின் நினைவு தினங்களை கொண்டாடும்
ஆயத்தங்களிலும் ஈடுபட்டு வருகின்றது.
கொரிய தீபகற்ப செய்திகள்
நன்றி வீரகேசரி
இதில் 35 குடும்பத்தினரும் கட்டிடத் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மீட்பு பணி இன்றும் நீடித்து தற்போது நிறைவடைந்துள்ளது.
வடகொரிய ஏவுகணைகள் தயார் நிலையில்!
By
Kavinthan Shanmugarajah 2013-04-10 15:58:11 |

No comments:
Post a Comment