நாட்டுப்பற்றாளர் நாள் – 2013 விக்ரோறியா, அவுஸ்திரேலியா


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,
விக்ரோறியா,
அவுஸ்திரேலியா.
30.03.2013

நாட்டுப்பற்றாளர் நாள் – 2013 ஐ முன்னிட்டு நடாத்தப்படும் அன்னை பூபதி பொது அறிவுப் போட்டி தொடர்பான அறிவித்தல்.
அன்புடையீர்,
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆண்டுதோறும் வழமையாக நடாத்தப்பட்டுவரும் அன்னை பூபதி பொது அறிவுப்போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள்ளதால் அப்போட்டியில் பங்குபற்றும் அணிகள் தங்களை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
காலம்: 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி
இடம்: Preston Shire Hall (next to town hall) 286 Gower St, VIC. 3072


போட்டியாளருக்கான வரையறைகள்
1.    போட்டியாளர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் நாளில் பதினைந்து வயது நிறைவடைபவராகவோ அதற்குக் குறைவான வயதுடையவராகவோ இருக்க வேண்டும்.
2.    போட்டியாளர்களே நான்குபேர் கொண்ட அணியை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.
3.    போட்டிக்கான பதிவை அணியின் சார்பில் ஒருவர் மேற்கொள்ள வேண்டும்.
4.    பதிவுக்கான இறுதி நாள் 12/04/2013 மாலை ஐந்து மணி.
5.    அணிக்கான பெயரைப் போட்டியாளர்களே தெரிவுசெய்து கொள்ளலாம். அணிப்பெயர் கட்டாயம் தமிழ்ப்பெயராக அமைய வேண்டும்.
போட்டிக்கான பதிவுக்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0433002619.

இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா

No comments: