மரண அறிவித்தல்


சங்கீதபூசணம் - இசைமணி திருமதி பூமணி ராஜரட்ணம் (முன்னாள் சங்கீத ஆசிரியை,  சாவகச்சேரி மகளீர் கலலூரி,  றிபேரக் கல்லூரி)



சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அகில இலங்கை புகழ் பெற்ற சங்கீதபூசணம் இசைமணி திருமதி பூமணி ராஜரட்ணம் (சங்கீத ஆசிரியை) அவர்கள் ஏப்ரல் மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசம்மா நாகம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை சின்னம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற தம்பாபிள்ளை ராஜரட்ணம் அவர்களது மனைவியும், அம்சத்வனி(சங்கீத ஆசிரியர் சாவகச்சேரி), ராமகிருஷ்ணன் (கனடா), ஸ்கந்தராஜன் (USA) ஆகியோரது தாயாரும், மோகனராஜலிங்கம், அனுலா, செல்வி ஆகியோரது மாமியாரும் காலஞ்சென்றவர்களான நவநீதம், கருநேஸ்வரி மற்றும் நவரட்ணராஜா (கொழும்பு), நாகராஜா(சிட்னி) ஆகியோரது சகோதரியும் அபிராமி, கீர்த்தனா, நீருஷா, மீனாக்ஷி, ஆத்மிகா ஆகியோரது பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஏப்ரல் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமையும் மறுநாள் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமையும் மாலை 5மணி முதல் 9மணி வரை இல 420 Dundas street East, Mississauga அமைந்துள்ள  Scott Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று அதன் பின்னர் இல 737 Dundas street Eastல் அமைந்துள்ள St Johns Dixie Cemetry, Mississauga வில் தகனம் செய்யப்படும். 
தகவல் : நாகராஜா
தொடர்புகளுக்கு கிருஷ்ணா 1 905 858 1435

No comments: