இலங்கைச் செய்திகள்

இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம்-வியட்நாமில் அமைச்சர் ஹக்கீம்

பர்மாவில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் கொலைக் குற்றவாளிகள் இருவர் விடுதலை

வடக்கு மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க. போட்டியிடும்: யாழில். ரணில்

மீனவர்கள் எந்த வகையான பதிவுகள் இன்றி மீன் பிடிக்கலாம்: மாதகல் கடற்படைத் தளபதி

செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம்=====================================================================

இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம்-வியட்நாமில் அமைச்சர் ஹக்கீம்
23/04/2013 அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள், சட்டத்துறை சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளும் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அங்கு இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வியட்நாமுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் ஹக்கீம் அங்கு பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் இலங்கை நீதியமைச்சர், வியட்நாம் நீதியமைச்சர் ஹா ஹ_ங் ஷொங் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை நீதியமைச்சர் ஹக்கீமுக்கு கடந்தவாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிருந்தது. பிரஸ்தாப உடன்படிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிவகைகளை அமைச்சர்கள் இருவரும், இரு நாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகளும் பரிசீலித்தனர்.

தற்பொழுது இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையிலான ராஜதந்திர ரீதியான உறவுகள் மிகவும் சுமூகமாகவும், சிறப்பாகவும் இருந்து வருவதாக குறிப்பிட்ட நீதியமைச்சர் ஹக்கீம் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதுக்குழுக்கள் அடிக்கடி சந்தித்து, கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும், அண்மையில் இலங்கை அமைச்சர்கள் ஏழு பேர் வியட்நாமுக்கு விஜயம் செய்திருப்பதாகவும், இரண்டு வர்த்தக தூதுக்குழுக்களும் அண்மையில் அங்கு சென்று வந்ததாகவும் கூறினார்.

முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் பல்வேறு துறைகளில் இலங்கை துரித கதியில் அபிவிருத்தியடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிராந்தியத்திற்குள்ளும், அதற்கு அப்பாலும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் பற்றி தமது அரசாங்கம் கூடுதல் கரிசனை செலுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய வியட்நாமிய நீதியமைச்சர் ஹா ஹ_ங் ஷொங், அரசில் பரந்த அளவிலான மக்கள் பங்குபற்றுதலையும், சமூக, பொருளாதார அபிவிருத்தியையும் குறிக்கோள்களாகக் கொண்டும், பூகோள ரீதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அனுசரித்தும் வியட்நாம் தனது அரசியல் அமைப்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த நோக்கத்திற்காக தேசிய தேர்தல் மன்றமொன்று இவ்வாண்டின் இறுதிப் பகுதியில்  அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இவ்வாண்டு இறுதிக்குள்  கொழும்பில் செயற்படவுள்ள  சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வெவ்வேறு நாடுகளில் ஏற்படக் கூடிய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சம்பந்தப்பட்ட பிணக்குகளுக்கு உரிய தீர்வுகளை காண்பது மிகவும் இலகுவாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என்பதை வியம்நாமிய அமைச்சர்களுக்கும், பிரதானிகளுக்கும் எடுத்துக் கூறிய அமைச்சர் ஹக்கீம் அதில் ஈடுபாடு காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வியட்நாமின் சட்டதிட்டங்களின் படி உள்நாட்டுத் தரப்புகளே நடுத்தீர்ப்பு விஷயத்தில் ஈடுபடலாம் என்ற நியதி தொடர்ந்தும் பின்பற்றப்படுவதாகவும், வெளிநாட்டு வர்த்தக மற்றும் தொழில் விவகாரங்கள் தொடர்பான சர்ச்சைகள் தலைதூக்கும் போது அவற்றிற்கு நீதிமன்றங்களின் ஊடாக தீர்வு காணப்படுவதாகவும் கூறிய வியட்நாமிய அமைச்சர், இலங்கையின் நீதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்த பிரகாரம் கொழும்பில் அமையவுள்ள உத்தேச நடுத்தீர்ப்பு மையம் வெற்றிகரமாக செயல்படுமானால், வியட்நாமில் ஏற்படக் கூடிய அவ்வாறான பிணக்குகளுக்கு கொழும்பில் அமையவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் உதவியை நாடக்கூடிய தேவைகுறித்து சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய வாய்ப்பு உண்டு என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக வியட்நாமின் வின்புச் பிராந்தியத்தின்  தேசிய பேரவையின் பிரதி நிரந்தரச் செயலாளரின் தலைமையிலான  தூதுக்குழுவினருக்கும்,  அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

இலங்கை நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் குமார் ஏகரத்ன, அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் இவான் அமரசிங்க, ஆகியோரும் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.  நன்றி வீரகேசரி 

பர்மாவில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்
பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது,

குறித்த முஸ்லிம்கள் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை இலங்கை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த முஸ்லிம்களுக்கு இலங்கை கடற்படையினர் அடைக்கலம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

2012 ஜூன் மாதம் முதல் பர்மா அதிகாரிகள் குறித்த முஸ்லிம்களுக்கு எதிராக இன ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.

நன்றி வீரகேசரி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் கொலைக் குற்றவாளிகள் இருவர் விடுதலை
25/04/2013 கொலைக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவர் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் பேரில் விடுதலை பெற்றிருப்பதாக புனர்வாழ்வளிப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நேற்று சபைக்கு அறிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போதான வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கேள்வியெழுப்பிய ஐ.தே.க. எம்.பி. அஜித் பெரேரா, 2005 முதல் 2012.06.01 வரையான காலப்பகுதியில் விடுதலை பெற்ற மரண தண்டனைக் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அமைச்சினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி மூன்று வருடங்களும் 6 நாட்களும் சிறையில் இருந்துவந்த பெண் கைதி 2008.03.08ஆம் திகதியும் மூன்று வருடங்களும் 23 நாட்களும் சிறையில் இருந்த ஆண் கைதி 2010.08.26ஆம் திகதியும் பொது மன்னிப்பின் பேரின் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருமே தனிப்பட்ட கொலைக் குற்றவாளிகளாவர்.

நன்றி வீரகேசரி

 

வடக்கு மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க. போட்டியிடும்: யாழில். ரணில்25/04/2013 எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் ஜக்கிய தேசியக்கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று யாழ். சென்றிருந்த அவர் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தார்.

வடக்குத் தேர்தலில் தமது கட்சி சார்ந்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் வியூகங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்த ரணில் விக்கிரிமசிங்க சிவில் சமூகப் பிரதிநிதிகளையும், மதப் பொரியார்கள் ஆகியோரையும் சந்திப்பதுடன் சர்சைக்குரிய வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தினையும் பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.

வடக்குத் தேர்தலை நடத்துவதாக ஜெனிவாவில் உறுதியளித்திருந்த இலங்கை அரசு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயம் என தெரிவித்த அவர், நேர்மையான தேர்தல் ஒன்று இடம்பெறுவதை உறுதிப்படுத்த பொதுநலவாய நாடுகளினது பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச கண்காணிப்பு தேவை எனவும் குறிப்பிட்டார்.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி சுவீகரிப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கோள்விகளுக்குப் பதிலளித்த அவர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பார்வையிடவுள்தாகவும், வடக்கை விட்டு அகல முன்னர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே செல்வேன் என தெரிவித்தார்.

முன்னதாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள மொழியில் அவர் உரையாற்ற முற்படுகையில் அங்கு பிரசண்னமாகியிருந்த சில ஊடகவியலாளர்கள் அதன் தொடர்பிலும் உடன்பாடுகளை; தெரிவிக்கவில்லை. இதன் பின்னர் அவர் ஆங்கில மொழியிலும், மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அவருடன் ஜக்கியதேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தனாயக்க, ரவிகருணாநாயக்க, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய விஜயத்தின் போது அண்மையில் தீக்கிரையாக்கப்பட்ட உதயன் நாளிதலுக்கு விஜயம் செய்த அவர் அங்கு சேதங்களைப் பார்வையிட்ட அவர் பருத்தித்துறையில் மக்களை சந்திப்பு ஒன்றியையும் மேற்கொண்டார். இதனையடுத்து உயர்பாதுகாப்பு வலய பகுதிகளையும் பார்வையிச் சென்ற போது படையினரால் ஐக்கிதேசியக் கட்சி தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி 

 

 

 

 

 

 

மீனவர்கள் எந்த வகையான பதிவுகள் இன்றி மீன் பிடிக்கலாம்: மாதகல் கடற்படைத் தளபதி25/04/2013 மாதகல் கடற்பரப்பில் கடற் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் எந்த வகையான பதிவுகள் இன்றி கடலில் எந்;த நேரமும் தொழில் செய்ய முடியும் என மாதகல் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

மாதகல் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதி நிதிகளுக்கும் மாதகல் கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மாதகல் கடற்தொழிலாளர் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

இந்த சந்திப்பில் மாதகல் கடற்படைகளின் கட்டளை அதிகாரி லெப்ரினன் கொமாண்டர் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் மாதகல் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதி நிதிகள் சுமார் எழுபத்தைந்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

கடந்த மாதம் பொன்னாலையில் இடம் பெற்ற கூட்டத்தில் கடற் தொழிலாளர்களினால் கடற்படையினரின் பஸ் நடைமுறை நீக்கப்பட்ட போதிலும் கடற்படை காவல் நிலையங்களில் உள்ளவாகள் அதிகாலையில் பதிவுகளை மேற் கொண்டு செல்லும் படி வலியுறுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள்.

அதன் அடிப்படையில் எதிர் காலத்தில் எந்த வகையான பதிவுகளும் இன்றி கடல் தொழிலை மேற்க்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவிப்பினால் கடற் தொழிலாளாகள் எந்த வகையான தாமதங்களும் இன்றி அதிகாலையில் தமது தொழிலுக்க செல்லக் கூடியதாக ஈருக்கும் என தெரிவித்துள்ளார்.

நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

 

செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம்
19/04/2013 மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.

அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது சுய முயற்சியினால் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்து வந்த 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது அன்பு மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.செங்கலடி நகரைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் பொலிஸாரின் ரோந்து கண்காணிப்புக்குரிய நகர் என்று கூறமுடியும். அப்படியிருந்தும் இந்த படுகொலைச் சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்குப் புலப்படாமல் இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செங்கலடியைச் சேர்ந்த விப்ராவை விரும்பி திருமணம் செய்தவர். இவர்களுக்கு வைஷ்னவி (வயது 21) தலக்ஷனா (வயது 16) என இரு புதல்விகள் உள்ளனர். இந்த இரு பெண்மக்களையும் மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்கள்.


ஆரம்பத்தில் சிறியளவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அவர் தனது மனைவியின் பக்கபலத்துடன் பொருளாதரத்தை வளப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலைக் கொண்டது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் விதியின் விளையாட்டு சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வர்த்தகரும் மனைவியும் படுக்கையறையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். பொலிஸார் சற்று நேரத்திலேயே இவ்விடத்திற்கு விரைந்த போதிலும் கொலையாளிகள் தொடர்பான எந்தவொறு தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இக்கொலைகள் முன்மாதிரியைப் பின்பற்றி நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.


எனினும் குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துப்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்தனர். அதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை. நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை.

எவ்வாறிருப்பினும் பொலிஸார் முதலில் குடும்ப உறுப்பினரர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் அதன் மூலமேனும் பொலிஸாருக்கு துப்புத் துலங்கவில்லை. பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் சிஐடி யினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புலனாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டார்கள். ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஞ்சன கொடகொம்பர தலைமையில் பொலிஸ் பரிசோதகர் கிரான் செனவிரெடன, சார்ஜனட்களான நஜிமுடீன், சறுக், ரபிக் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான தாஹிர், அனுராத, புருசோத்மன், நலிம், வன்னிநாயக, கிஸ்ஸானாயக்க மற்றும் விதான ஆகியோரைக் கொண்ட விஷேட பொலிஸ் குழுவொன்றும் விசாரணையில் ஈடுபட்டது அதனையடுத்து ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் இளய மகளின் காதல் விவகாரம் கசியத் தொடங்கியது.

இதையடுத்து சந்தேகப்பட்ட காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்கணிக்கப்பட்டன. அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

கொல்லப்பட்டவர்களது இளய மகள் ரகு தலக்ஷனா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரே சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர்.

பொலிஸ் விசாரணையையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதி மன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் (பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால்) தனியான அறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். பாடசாலையிலும் ரியுசன் வகுப்பறையிலும் பழிதீர்க்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

கடந்த சித்திரை மாதம் 7 ஆந் திகதி மாலை ரகு தனது மனைவி மக்களுடன் புத்தாண்டு உடு துணிகள் வாங்குவதற்காக மட்டக்களப்பு நகருக்குச் சென்றார். அந்த நேரம் தொடக்கம் இளைய மகள் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக எஸ்.எம்.எஸ். மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

காதலனும் நண்பர்களும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளைப் பெற்று இடித்துத் தூளாக்கி கைவசம் வைத்திருந்தனர்.

ரகு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டுக்குத் தேவையான உடு துணிகள் வாங்குவதற்குச் சென்ற பின்னர் மகள் தலக்ஷனா காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்திருக்கிறார்.

வீட்டின் திறப்பு சமையலறை யன்னல் ஓரத்தில் உள்ளது நீங்கள் வீட்டிற்குச் சென்று குசினியில் மீன்கறி சட்டியில் தூக்க மாத்திரைத் தூளைக் கலந்துவிடுமாறு கூறியிருக்கிறாள். காரியம் கச்சிதமாக மூடிந்திருக்கிறது.


அன்றிரவு 7 மணிக்குப் பின்னர்  ரகுவின் குடும்பத்தினர் வீடு திரும்பியிருக்கிறார்கள். வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சியினை அறிந்திருக்கவில்லை.

சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல அம்மம்மாவின் வீட்டிற்குச் தூங்கியிருக்கிறாள் தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார்;. மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு“கசக்கிறது அம்மா” என்று உணவைத் துப்பியுள்;ளார். தாயார் “உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்ர”என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.

அன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அத்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக அளைய மகள் தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை அழைத்து வீட்டின் முன் கதவை திறந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறாள் கொலையாளிகளி உள்ளே நுழைந்து படுக்கையறைக்குள் சென்று கைத்தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த விப்ராவை அடையாளங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலாருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள். அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார்.

அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது நபரொருவர் ஒடுவதை அவதானித்திருக்கிறார். அப்போது மகளின் வீட்டுக்கதவின் குறுக்குப் பொல்லு விழுந்த சத்தமும் கேட்டது. அவ்வேளை வீட்டில் படுத்திருந்த தலக்ஷனா “அம்மா அம்மா” என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும் சுந்தரமூர்த்தி “சத்தம் போட வேண்டாம் மகள் வந்து குசினி பக்க கதவ திற” என்றார் உள்ளே வந்து பார்த்தபோது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ணுற்றார்.

அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்திய சாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.;

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடுத்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலரும் அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர்.

இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தலக்ஷனா (தற்போது சந்தேக நபர்களில் ஒருவர்) சாட்சியமளிக்கையில்,

“ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க மட்டக்களப்பிற்குச் சென்று அன்றிரவு 7 மணிக்கு பின்பு வீட்டிற்கு வந்தோம்.

அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா “உனக்கு இதுதான் கத” என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு “ஓம் கசக்கிறதுதான்” என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.

அத்தினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது நுளம்பு வலைக்குளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிடடேன் அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார் திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்” என்றார்.

இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்

“சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யுன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மின்விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.

நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன. திறந்து “ என்ன அம்மப்பா” என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவிலலை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். ஆங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்களள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும்”என்றார்

மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கiயின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸார் உறவினர்கள், அயலவர்கள் பாடசாலை சமூகம் மற்றும் சக மாணவர்கள் என பலரையும் விசாரணைக்குட்படுத்தியதாகவும் இருவர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இந்த விசாரணைகளின் படி பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலின் பிரகாரம் புத்தாண்டிற்கு முதல் நாள்; 13 ஆந் திகதி குமாரசிங்கம் நிலக்சன் என்பவர் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கித்துள் பிரதேசத்தில் அவரது வீட்டிலிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் இளைய மகள் அவரது காதலன் மற்றும் நண்பர் என சந்தேக நபர்கள் புதுவருட தினமன்று கைது செய்யப்பட்hர்கள். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாக பொலிஸார் கூறினர்.

இக்கொலை தொடர்பாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வருவதாவது:

கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

“பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்” என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார்.

கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.

இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வௌ;வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.

தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்

நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.

ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டமொன்று இருந்தது. அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை இக்காலகட்டத்தில் அனைவரது உள்ளங்களையும் உலுப்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

-பேரின்பராஜா சபேஷ்

நன்றி வீரகேசரி