உலகச் செய்திகள்

துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள

முஷாரப்பிற்கு இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட அனுமதி!

கோவை தீ விபத்தில் 4 பேர் பலி: தாஜ் மஹால் அருகே வெடிப்பில் 2 பேர் பலி

பங்களாதேஷ் கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

 

 

===================================================================

துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்!


23/04/2013 அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2313023-196E5722000005DC-764_634x435.jpg


இவற்றை டேர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியே குறித்த இணையத்தளத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அக்கட்சியே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து போராடும் பொருட்டு போராளிகளுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/article-2313023-196E5726000005DC-175_634x436.jpg
படங்களில் சிறுவர்கள் AK 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போல காட்டப்படுகின்றது.
இச் சிறுவர்கள் உயிரிழந்த போராளிகளின் பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/image_article/article-2313023-196E573A000005DC-394_634x414.jpg
http://www.virakesari.lk/image_article/article-2313023-196E576E000005DC-735_634x418.jpg
http://www.virakesari.lk/image_article/article-2313023-196E5767000005DC-303_634x412.jpg

நன்றி வீரகேசரி






முஷாரப்பிற்கு இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட அனுமதி!


22/04/2013 பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள பாக். முன்னாள் ஜனாதிபதி முஷாரப் இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் இராணுவ தளபதியாக இருந்த முஷாரப் 1999ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றினார்.
கடந்த  2008ல் நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால் பதவியிலிருந்து விலகினார்.போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால் பெனசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாது 2007ல் தலைமை நீதிபதி உட்பட, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து அவசர நிலையை பிறப்பித்தார்.
இவரது இந்த செயல் தேச துரோக செயலாக குற்றம் சாட்டப்பட்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
http://www.virakesari.lk/image_article/pervez_musharraf_01_a.jpg
பல்வேறு நகரங்களில் இவர் மீது வழக்குகள் இருந்ததால், துபாய் மற்றும் லண்டனில் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.
அடுத்த மாதம் 11ம் திகதி பாராளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து பாக். முஸ்லிம் லீக்' கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக கடந்த மாதம் நாடு திரும்பினார்.
நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்."அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது" என வழக்கறிஞர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து தேர்தல்ஆணையகம் முஷாரப்பின் நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்துவிட்டது. இதனால் இவர் பாக். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் பிணையை நீடிக்க கோருவதற்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
பிணையை நீட்டிக்க மறுத்த நீதிமன்றம் முஷாரப்பை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கேட்டதும் முஷாரப் தன் பாதுகாவலர்களுடன் அங்கிருந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் முஷாரப்பை கொல்ல திட்டமிட்டு உள்ளன.
எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால் இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே பாதுகாப்பு கருதி அவரை சிறை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக பண்ணை வீடு கிளை சிறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது முஷாரப் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நீதிமன்ற காவலில் இருந்தாலும், அவர் தற்போது பண்ணை வீட்டில் தான் சிறை வைக்கப்பட்டு உள்ளார்.
முஷாரப் தலைமையிலான அனைத்து பாக். முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான முகமது அம்ஜத் குறிப்பிடுகையில், ""ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு அறைகளில் மட்டுமே அவர் நடமாட அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உறவினர்களோ, வழக்கறிஞர்களோ அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








கோவை தீ விபத்தில் 4 பேர் பலி: தாஜ் மஹால் அருகே வெடிப்பில் 2 பேர் பலி




25/04/2013 இந்தியாவின், கோவையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது.
இதன் கீழ் தளத்தில் ஆக்சிஸ் வங்கியும் 2வது, 3-வது தளத்தில் சில தனியார் நிறுவனங்களும் 4வது தளத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட் காப்புறுதி  நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன.

இந்த வணிக வளாகத்தில் உள்ள வங்கி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
இன்று காலை 10.15 மணி அளவில் 3வது தளத்தில் உள்ள ஷேர் கான் என்ற பங்கு விற்பனை நிறுவனத்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது.
பின்னர் மளமளவென தீப்பிடித்து எரிந்ததது. இந்தத் தீ 2-வது மற்றும் 3-வது தளத்தில் நிறுவனங்களுக்கும் 4-வது தளத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கும் பரவியது. கீழ் தளத்தில் உள்ள வங்கியிலும் தீ பரவ தொடங்கியது.
இதையடுத்து அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தப்பித்து வெளியேற முயன்றனர். வணிக வளாகம் முழுவதும் தீப்பிடித்து பெரும் புகைமூட்டமாக இருந்ததால் அவர்களால் எளிதில் வெளியேற முடியவில்லை.
 சிலர் தப்பித்து வெளியேறினர். ஆனால் பலர் வெளியேற முடியாமல் மயங்கி விழுந்தனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இராணுவ தீயணைப்பு வண்டிகளும் விரைந்து வந்தன.
கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் தீயணைப்பு வீரர்களும் பொது மக்களும் இறங்கினர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்த வீரர்களும் வணிக வளாகத்தை சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.
இராணுவ ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது.
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 2 பேர் வணிக வளாகத்தில் இருந்து எழுந்த தீயின் அகோரம் தாங்காமல் தீயணைப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் காயமடைந்தனர்.
தீ கட்டுக்குள் வந்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு தளமாக சென்று யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களை மீட்டனர்.
அப்போது இரு பெண்கள் உள்பட 4 பேர் உடல்கள் கருகி பிணமாக கிடந்தனர். இந்தப் பெண்கள் ஷேர் கான் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவர்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுகன்யா (25), ஜீவிதா (26) ஆகிய 2 பெண் ஊழியர்களும் 2-வது தளத்தில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை கீழே குதித்து தப்பிக்குமாறு சிலர் கூறவே, இருவரும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் தவிர சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே காலை 10.15 மணிக்கு வணிக வளாகத்தில் பிடித்த தீ 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மதியம் 12.15 மணிக்கு அணைக்கப்பட்டது. எனினும் புகை மூட்டம் அடங்கவில்லை. தீவிபத்து காரணமாக கோவை-அவினாசி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேவேளை ஆக்ராவில் தாஜ்மஹால் அருகே இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நன்றி வீரகேசரி

 

 

 

 

 

பங்களாதேஷ் கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு



24/04/2013 பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/201342473429381580_20.jpg
சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி