வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 60 “காலைக் கழுவுங்கள்”ஞானா:  
      அப்பா…. திருவள்ளுவர் கோயிலுக்குப் போகேக்கை கால்களைக் கழுவிப் போட்டுத்தான்            உள்ளே போக வேணும்; எண்டு குறளிலை சொல்லியிருக்கிறாரே?. உங்களுக்குத் தொரியுமே?

அப்பா:     
   திருவள்ளுவர் கோயிலைப் பற்றியே சொல்லேல்லை. பிறகு எப்பிடிக் கால்கழுவிறதைப் பற்றிச்        சொல்லுவார் ஞானா? 
        
ஞானா:        இஞ்சை அம்மா வாறா. ஆவவைக் கேட்பம். ……அம்மா திருவள்ளுவர் கோயிலுக்குள்ளை         போக முந்திக் கால் கழுவிப்போட்டுத்தான் போக வேணும் எண்டு சொல்லியிருக்கிறாரே?.            நீங்கள் பாத்திருக்கிறியளே?

சுந்தரி:        திருக்குறளிலை நான் பாக்கேல்லை. ஆனால் கோயில்களிலை பாத்திருக்கிறன்; ஆக்கள்            கால் கழுவிப்போட்டுத்தான் கேயிலுக்குள்ளை போறதை. அதுக்கு இப்ப என்ன ஞானா?

அப்பா:        அது வந்து சுந்தரி….உந்தக் கால்கழுவிற சங்கதி திருக்குறளிலை இருக்கு எண்டு இவள்            பிள்ளை ஞானா சொல்லிறாள்.

ஞானா:        இருக்கெண்டு நான் சொல்லேல்லை அப்பா. இருக்கோ எண்டு கேக்கிறன் அப்பா.


அப்பா:        ஆமோ? உனக்கு ஞானா கேள்வி கேக்க மட்டுந்தானே தெரியும். நீ வந்து திருவள்ளுவர்            ஆஸ்திகனோ அல்லாட்டில் நாஸ்திகனோ எண்டு பாக்கிறதுக்குக் குறும்பு விடுகிறாய் போலை        கிடக்கு. திருக்குறளிலை பேதைமை எண்டொரு அத்தியாயம் இருக்கு. பேதைமை எண்டால்        என்ன கருத்துத் தெரியுமோ? நல்ல காரியங்களை விடத் தீயகாரியங்களை விரும்பும் கெட்ட        குணம்தான் பேதைமை. ஆந்தக் குணமுள்ள ஆக்களை விலக்க வேணும் எண்டு வள்ளுவர்         சொல்லியிருக்கிறார். ஆனபடியாலை…..

சுந்தரி:        ஆனபடியாலை இவள் பிள்ளை ஞானாவை விலக்கி வையாதையுங்கோ அப்பா.       

அப்பா:        நான் ஞானாவை பேதை எண்டு சொல்லேல்லை சுந்தரி. பேதைமை எண்ட திருக்குறளின் 84         வது அதிகாரத்திலை இவள் பிள்ளை ஞானா கேக்கதிற கால் கழுவிற விளையாட்டு இருக்கு        எண்டு சொல்ல வாறன் சுந்தரி.

ஞானா:        எந்தக் குறளிலை அப்பா. தயவுசெய்து சொல்லுங்கோ பப்பம்.

அப்பா:   
    840 வது குறள் எண்டு நினைக்கிறன் ஞானா. உன்ரை புத்தகத்தை எடுத்துப் பாரன்.

ஞானா:        புத்தகம் கையோடைதான் வைச்சிருக்கிறன் அப்பா. 840 வது குறள் வந்து……வந்து….
குழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்                                    
குழாஅத்துப்  பேதை புகல்.
        அப்பா ஒண்டும் விளங்கேல்லையே அப்பா.       

அப்பா:        எப்பிடி விளங்கும் எண்டு கோக்கிறன். நீவந்து ஞானா கோயில் எண்ட சொல்லு எங்கை            எண்டு தடவிறாய். பிறகு குறள் எப்பிடி விளங்கும்?

சுந்தரி:        பள்ளி எண்டால் இஸ்லாம் ஆக்களின்ரை பள்ளிவாசலுக்கும் பொருந்துந்தானே அப்பா.            அவையளும் பள்ளிவாசலிலை கால்முகம் கழுவிப்போட்டுத்தானே தொழுகைக்குப் போறவை.

அப்பா:        சுந்தரி நீர் சொல்லிறதும் ஒரளவுக்குச் சரிதான். உதுதான் திருக்குறளின்ரை மகிமை.             எவருக்கும் பொருள் வீஞ்சு குடுக்கும்.

ஞானா:        பள்ளி எண்டால் பள்ளிக்கூடம் எண்டும் கருத்தெடுக்கலாந்தானே அப்பா. ஆக்கள் பள்ளிக்            கூடத்துக்குக் கால் கழுவிப்போட்டே போகினம்.

அப்பா:        பிள்ளை ஞானா…உன்னோடை ஏன் வாக்குவாதப் படுவான். புத்தகம் கையிலை வைச்சிருக்        கிறாய் தானே. கருத்தைப் படியன் கேட்பம்.

ஞானா:        படிக்கிறன் அப்பா. கேளங்கோ….சான்றோர் குழாத்து பேதை புகல், கழா அக்கால் பள்ளியுள்        வைத்தற்று…..அறிவாளிகளின் சபைக்குள், முட்டாள் புகுவது…கழுவாத அசுத்தமுள்ள காலை        சுத்தமான இடத்தில் வைப்பது போன்றது.

அப்பா:        இப்ப பாத்தியே ஞானா……உன்ரை கோயில் எங்கை போட்டுது எண்டு. பள்ளி எண்ட             சொல்லுக்கு, படுக்கை அறை, மடைப்பள்ளி, அதாவது சமையல் அறை, பள்ளிக்கூடம்,             தேவாலயம், கோயில், பள்ளிவாசல் எண்டு பொருள் சொல்லலாம். இந்த இடங்கள் எல்;லாம்        பரிசுத்தமான இடங்கள். அதுபோலை சான்றோர் கூடியிருக்கிற சபையும் பரிசுத்தமான இடம்        அங்கை நீதி, நியாயம், நேர்மை பேசப்பட வேண்டிய இடம்.

ஞானா:        விளங்குதப்பா…. அப்பிடிப்பட்ட பரிசுத்தமான சபைக்குள்ளை ஒரு முட்டாள், ஒரு அதகடிக்            காறன் போறது கழுவாத காலோடை சுத்தமான இடத்திலை போய் நிண்டது மாதிரி இருக்கும்        எண்டு வள்ளுவப் பெருந்தகை சொல்லியி;ருக்கிறார்.

சுந்தரி:        அப்பா….இந்தக் காலத்திலை அறிவாளியள் கூடிய சபை, அல்லது சான்றோர் சபை எங்கை        இருக்கப்பா? எல்லாச் சபையளும், குழுக்களும் அதகடியிலும், அடக்கு முறையிலுந்தானே            நடைபெறுகுது. பரிசுத்தமான இடங்களாயே இருக்கு. பிறகு என்னப்பா காலைக்                 கழுவிறதும்….கையைக் கழுவிறதும்?

அப்பா: 
       சுந்தரி! நீர் காலைக் கழுவா விட்டாலும் பாதகமில்லை. ஆனால் கையைக் கழுவி விட்டிடும்.
சுந்தரி        நீங்கள் என்னப்பா சொல்லிறியள்?

அப்பா:        அதாவது வந்து சுந்தரி நீர் சொன்னீரே அதகடிக் குழாங்கள், அடக்குமுறைக் குழுக்கள்            அதுகளுக்கை போகாமல் கையைக் கழுவி விடச் சொன்னான்.

ஞானா:        அப்பா அருமையான குறள்தான்

அப்பா:கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்                                குழாஅத்துப் பேதை புகல்.
        சமுதாயத்துக்கு நன்மை செய்கின்ற சான்றோர் பரிசுத்தமாக நடந்துகொள்ள வேணும்.             அவர்களுடைய குழுவிலே சேருகிறவர்கள் நீதி, நேர்மை, ஒழுக்கம் உள்ளவர்களாக            இருக்க வேணும். தன்நலம் இல்லாமல் நடக்க வேணும். அப்படி இல்லாதவர்கள் இந்தக்            குழுக்களிலே சேரக்கூடாது. அழுக்கு உள்ள கால்களோடை பரிசுத்தமான இடத்துக்குப்            போகக் கூடாதோ அதேபோல நீதி நேர்மையாக நடக்கும் இடங்களுக்கு அழுக்கு மனம்            உடையோர் செல்லக் கூட்hது. இல்லையா அப்பா?

அப்பா:        காலைக் கழுவிப்போட்டுப் போறது போலை மனத்தையும் கழுவிப்போட்டுப் போக                 வேணும் எண்டு சொல்லிறாய் ஞானா.

சுந்தரி:        மனத்தை ஆர் கழுவுகினம். எல்லாரும் வயித்தைக் கழுவத்தானே வழி பாக்கினம்.
(இசை)