கடந்த 30 வருடங்களாக தாயகத்தில் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் அவுஸ்திரேலிய திராவிட கலாச்சார கழகத்தின்
மெல்பேண் மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சி, மீண்டும்
ஓஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்காகவும், தமிழர்களிற்கு தோளோடு தோள் நின்று உதவும் இரண்டு ஒஸ்ரேலிய தர்ம ஸ்தாபனங்களின் திட்டங்களிற்கும் உதவும்
முகமாக, எதிர்வரும் மேமாதம்
4ம் திகதி ”இன்னிசை மாலை 2013” நிகழ்ச்சி றிங்வுட் கலிண்டா வீதியில்
அமைந்த ஜோர்ஜ்வுட் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. வழமைபோல் மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம்பெற்று, இந்நிகழ்வை
தற்போது முன்னின்று நடாத்தும் தமிழ் இளையோரையும், இசைக் கலைஞர்களையும் ஊக்குவித்து
அவர்கள் முன்னெடுத்திருக்கும் நல்ல செயற்பாடுகளுக்கும், நீங்கள் வருகைதந்து நிகழ்ச்சியை கண்டுகளித்து உதவுமாறு தயவுசெய்து மெல்பேண்
வாழ் தமிழ்மக்களிடம் கேட்டுக்கோள்ளுகின்றோம்.
நுழைவுச் சீட்டுகள்: குடும்பம்- $50, தனிநபர் - $25, குழந்தைகள் - $10 வெள்ளிகள் மட்டுமே.