சுவாமி விபுலானந்த அடிகளாரின் 121வது ஜனன தினம்




முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 121வது ஜனன தினம்  27.03.2013 புதன்கிழமை

அதனையொட்டி இவ்வாய்வுக் கட்டுரை பிரசுரமாகிறது.
சுவாமி விபுலானந்தர் எப்போது பிறந்தார்?
ஆய்வுக்கட்டுரை

அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் காரைதீவு மண்ணில் பிறந்து 121 வருடங்களாகின்றன. கிட்டத்தட்ட நூற்றுஇருபது வருடங்களைக் கடந்த ஒரு பெருமகனின் பிறந்த நாளை துல்லியமாக அறியமுடியாத எமது வரலாற்று ஆய்வாள்hகள் எப்படி பல நூறு அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுகளை அறிவார்கள்?;. இது உண்மையுள்ள ஆய்வாள்hகளின் வினாவாகும். இதற்கு விடையளிப்பதே இதன் நோக்கமாகும்.

சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி இதுவரை வந்த நூற்றுக்கணக்கான நூல்களில் அவரது பிறப்பு பற்றி தமிழ் திகதி தொடர்பில் எந்தவொரு மாறுபாடான தகவலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அதாவது சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் ப+ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை
இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை பெறுவதில் பலர் தவறுவிட்டிருக்கின்றார்கள். இம்மண்ணிலிருந்து வெளிவந்த அடிகளார் படிவமலர் கூட தவறு விட்டிருக்கிறது. அதில் அடிகளார் 26,27,28,29ஆந் திகதிகளில் பிறந்ததாக வௌ;வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் நான்கு தினங்களில் பிறக்க முடியுமா? இல்லை.
சுவாமிகளின் நூற்றாண்டை ஒட்டி என்னால் தொகுக்கப்பட்ட அடிகளார் நினைவாலய மலரில் சரியான திகதி தொடர்ந்து பேணப்பட்டு வந்தமை இவ்வண் சுட்டிக்காட்டப்படுதல் 
பொருத்தமாகும்.
இலங்கையில் முதன்முதல் வாக்கிய பஞ்சாங்கம் வெளிவந்த ஆண்டு 1892 ஆகும். யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த சந். இரகுநாதையவர்களால் கணிக்கப்பட்டது. அதே ஆண்டிலேதான் சுவாமி விபுலானந்தரும் பிறந்தார்.


எனவே அந்த 1892 கர வருட பஞ்சாங்கத்தை பார்த்தால் பிறந்த நாள் (ஆங்கிலத்தில்) தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை பெறுவதென்பது முயற்கொம்பாக இருந்தது.
ஆதலால் எனது இலக்கிய நண்பர் களுதாவளையைச்சேர்ந்த பிரபல வரலாற்றாய்வாளர் ஒய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கலாபூசணம் திரு. ஆ.அரசரெத்தினம் அவர்களை தொடர்பு கொண்டு அப்பஞ்சாங்கத்தை பெறமுயற்சித்தேன்.அவரும் சுவாமி விபுலானந்தரின் நேரடி அபிமானி. வரலாற்றாய்வாளர் எவ்.எக்ஸ்.சி.நடராஜா அவர்களின் நேரடி சீடர். அவர் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் அப்பஞ்சாங்கத்தை யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய இலக்கிய ஆய்வாளர்களிடம் இருந்து பெற்றெடுத்து எனக்கும் பிரதியை அனுப்பி இ
ருந்தார்.
அப் பஞ்சாங்கத்தில் தமிழ் திகதியாம் கர வருடம் 1892 பங்குனித்திங்கள் 16ஆந் திகதிக்குநேர்ஒத்த ஆங்கிலத்திகதியை பார்த்தோம்.
அஃது 27.3.1893 என இருந்தது.
அரபுத்திகதி ஷஃபான் 27 . ஆங்கிலத்திகதி; மார்ச் 27 . தமிழ்திகதி பங்குனி 16
ஞாயிறு, திதி- சதுர்த்தி, நட்சத்திரம் – பூரட்டாதி, யோகம் – சுப்ரம், கரணம் – விட் எனக்குறிப்பட்டுள்ளது.
இப்படியாக சுவாமியின் பிறந்த தினம் 1892.03.27 என வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த சர்ச்சையும் ஏற்பட நியாயம் இல்லை.
சுவாமிகள் பிறந்த திகதியைக் குறிக்கும் தனித்தமிழ் எழுத்துக்களாலான பஞ்சாங்கத்தின் பிரதியையும் இங்கு தருகின்றேன். இலக்கங்களை தமிழ் எழுத்துக்களில் வாசிக்கத் தெரிந்த சான்றோருக்கு இது நன்கு புலப்படும் எனக் கருதுகிறேன்.

பிறப்பு அத்தாட்சி பத்திரம்
அந்த காலத்தில் பிறப்பு சான்றிதழுக்கு பதிவது என்பது காலம் தாழ்த்தியே என்பது அனைவரும் அறிந்ததாகும்.
இதற்கு சுவாமியும் விதி விலக்கல்ல.
காரணம் சுவாமி பிறந்து ஒரு சில தினத்தில் ஜனன ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் சென்ற போது தற்போது ஜாதகம் கணிக்க முடியாது என சூசகமாகக் கூறிவிட்டார் ஜோதிடர்.
விதானையாரான சாமித்தம்பி அவர்கள் பிள்ளைக்கு தத்து (கண்டம்) இருப்பதனை ஊகித்தவராக பிள்ளைக்கு பெயரும் வைக்கவில்லை. இந் நாளில் பிள்ளைக்கு ஒருவித நோய் தொற்றிக்கொண்டது. ஜோதிடர் கூறிய விடயமும் நோயும் தந்தை சாமித்தம்பி விதானையாருக்கு மேலும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. உடனே பிள்ளையை தூக்கிக் கொண்டு கதிர்காமத்திற்குச் சென்று அங்கு பிள்ளையை முருகனிடம் ஒப்படைத்து பிள்ளையைக் காப்பாற்று என அங்கேயே பெற்றோர் மண்டாடி விரதமிருந்தனர்.
சில நாளில் பிள்ளையின் நோய் தீர்ந்தது. அந்த இடத்திலேயே பிள்ளைக்கு முருகனின் நாமமான ‘மயில்வாகனன்’ எனப் பெயரிட்டனர். இந்தத் தருணத்தில்தான் பெயரிடப்பட்தென்பதை கவனத்தில் கொள்ளவும். முருகப் பெருமானின் வாகனமான மயில்வாகனம் என்று சிலர் இளமைப்பெயரைக்; குறிப்பிடுவது பொருத்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.
பின்பு பிள்ளையை ஊருக்குக் கொண்டுவந்தார்கள். ஜனன ஜோதிடம் பார்த்தார்கள். இவைகள் எல்லாம் இடம் பெற்று ஓரிரு மாதங்களின் பின்னர் தான் தந்தையார் பிறப்புக்காகப் பதிவு வைத்துள்ளார்.
swami1
இவையனைத்தும் இன்றும் காரைதீவில் வாழும் உதிர உறவுகளால் கூறப்பட்டவை. அந்த பிறப்பத்தாட்சிப்பத்திரமே இன்று ஒரு சாராரின் பிறந்த நாள் விழாவிற்குக் காரணமாயிற்று.
தர்க்கநியாயம்
அப்படி பிறப்புப் பத்திரத்தில் குறிக்கப்பட்டவாறு 1892.05.03 என எடுத்துக் கொண்டால் கர வருடம் பங்குனித் திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையில் சுவாமி பிறக்கவில்லை என்று அர்த்தப்படுமே? அது சரியா?
அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு தமிழ் வருடம் ஏப்ரல் மாதம் 13ஃ14 தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 13ஃ14இல் முடிவடைவது தெரிந்ததே.
எனின் தமிழுக்கு கர வருசத்தில் வரும் பங்குனித் திங்கள் 16ஆந் திகதி என்பது கர வருசத்திற்குரியது. பிறப்புப் பத்திரத்தின்படிவரும் ஆங்கிலத் திகதியான 1892.05.03 ஜப் பார்த்தால் அவரது பிறந்த தமிழ் திகதி அடுத்த வருடமான ‘நந்தன’ வருடமாக கொள்ளப்பட வேண்டுமே!. ஏனெனில் ஆங்கிலத்தில் 5ம் மாதம் என்பது தமிழுக்கு அடுத்த வருடமாகக் (நந்தன)கொள்ளப்படவேண்டும் என்பதனை யாரும் அறிவார்கள்.
60 ஆண்டு கால வருடச்சுழற்சியில் 25ஆவது வருடமான கர வருடம் (1891 – 1892) 1892 ஏப்ரல் 17ஆந் திகதியுடன் முடிவடைய, அதற்கடுத்த 26ஆவது வருடமான நந்தன வருடம் (1892 – 1893) 1893 ஏப்ரல் 14ஆந் திகதியுடன் முடிவடையும்.
பிறப்புப்பத்திர 1892.05.03 ஆங்கிலத் திகதியின்படி பார்த்தால் சுவாமிகள் தமிழுக்கு நந்தன வருடம் சித்திரை மாதம் 22ஆந் திகதி பிறந்ததாக கருதப்படும். அது செவ்வாய்க்கிழமையில் ஏகாதசி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்ததாக கொள்ளப்படும். இது சாத்தியமா? அப்படியெனின் இதற்கு முன்பு எழுதப்பட்ட சுவாமிகள் பற்றிய நூற்றுக்;கணக்கான நூல்களில் இடப்பட்ட தமிழ்தேதி பிழையென கொள்ளப்படவேண்டும்.
swami2
எந்தவொரு நூலிலும் சுவாமிகள் கர வருடத்தில் பிறந்ததாகவே சொல்லப்படுகின்றது. இன்னும் இன்றும் காரைதீவில் வாழும் உதிர உறவுகள சுவாமி கரவருடத்தில் பிறந்ததாகவே கூறுகின்றனர். இந்நிலையில் காலந்தாழ்த்தி வைக்கப்பட்ட பதிவின் அடிப்படையில் பெறப்பட்ட பிறந்த ஆங்கிலத் திகதியான 1892.05.03 சுவாமிகள் பிறந்த திகதியாக கொள்ளமுடியுமா? அத்தினத்தில் பிறந்த தின விழாவை நடாத்துவது பொருத்தமா? இல்லைவே இல்லை.
swami3
முடிவுரை
சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் ப+ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை
இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை உரிய பஞ்சாங்கத்தில் பார்க்குமிடத்து அது 27.03.1892 என வருகின்றது.
எனவே. இனிமேலாவது சுவாமிகளது பிறந்த தினத்தில் தேவையற்ற விவாதங்களை விடுத்து தமிழ் கூறுநல்லுலகம் சுவாமிகள் பற்றிய மேலும் பல ஆராய்ச்சிகளை செய்தல் பொருத்தமாகும்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

Nantri:www.tamilcnn

No comments: