நாலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்கள் முரசு


.
4வது ஆண்டில் காலடி வைக்கும் அவுஸ்ரேலிய மக்களின் வார இதழ் தமிழ்முரசுஒஸ்ரேலியா . com

இன்று நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும்
தமிழ்முரசு ஒஸ்ரேலியா முடிந்த வாரமான மூன்றாம் ஆண்டின் இறுதிவாரத்தில் நான்காயிரம் வாசகர்களின் பார்வையில் பட்டிருக்கின்றது என்பதை பார்த்தபோது பெருமகிழ்வாக இருந்தது. இந்த மகிழ்வின் காரணம் நாம் ஆரம்பித்த நோக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது
அதனால்தான் ஒரு வாரத்தில் நான்காயிரம் வாசகர்களை பெற்றிருக்கிறது.
என்பதுதான்.
நாம் இதை ஆரம்பிக்கும்போது தமிழும் கலாசாரமும் அரசியலும் இலங்கையோடு நின்றுவிடவில்லை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கும் இருக்கின்றது அது பற்றியும் பேசப்படவேண்டும் அது பற்றியும் பகிரப்படவேண்டும். அவைபற்றி அறிய இங்குள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கான ஒரு பத்திரிகையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தபோது பலர் ஊக்குவித்தார்கள். நண்பர் கருணாசலதேவா, திருமதி மதுரா மகோதேவ், திரு சிவராசா போன்றோர் ஆவலோடு இணைந்துகொண்டார்கள் அத்தோடு இது எந்தப்பக்கமும் சாராத ஒரு பத்திரிகையாக இருக்கவேண்டும் பத்திரிகா தர்மத்திற்கு உட்பட்டு எழுதப்படும் எந்தவிடயமும் தடையின்றி பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற முடிவு முன்வைக்கப்பட்டு இன்றுவரை அது கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டும் வருகின்றது. இருந்தாலும் சிலர் அழைத்து இந்தவிடயம் போடவில்லை உங்களுக்கு பிடிக்காது என்பதாலா என்று கேட்டும் இருந்தார்கள் அதற்கான எமது மறுமொழி எழுதி அனுப்புங்கள் போடுவோம் அது தகவலாகவோ கட்டுரையாகவோ விமர்சனமாகவோ இருக்கலாம் எல்லாவற்றையும் நாங்களே எழுதவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் எங்களுக்கு கிடைக்கும் நேரத்துக்குள் எம்மால் முடிந்தவற்றை தருவோம் ஒவ்வொருவரும் பங்களியுங்கள்அது ஆரோக்கியமாக இருக்கும்.
ஆசிரியர்குழுவில் உள்ளவர்களைவிட எமது புகைப்பட கலைஞர்களாக பங்காற்றி வருபவர்கள் திரு ஞானி; திரு ராஜன் , திரு சோதிராஜா இவர்களோடு ஞானம் ஆட்ஸ் ஞானம் ஜயா அவரகள். இன்னுமொருவரை நான் குறிப்பிட வேண்டும் ஆனால் அவர் தன்னடக்கம் காரணமாக தனது பெயரை போடவேண்டாம் என்ற அன்புக் கட்டளைபோட்ட காரணத்தால் அவரது பெயரை போடவில்லை தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை பிழைகளை சுட்டிக்காட்டி அதற்கான திருத்தங்களை போடும்படி சொல்வதும் தனக்கு தெரிந்த அனைத்து நல்ல எழுத்தாளர்களின் படைப்புங்களை வாசித்து அவற்றை பிரசுரிக்கும் உரிமையை பெற்றுத்தந்து நல்ல விடயங்கள் தரமான இலக்கியங்கள் தமிழ்முரசில் வருவதற்கு காரணமாக இருந்துகொண்டிருப்பவர் பெயர்போடுப்படாத ஒரு ஆசிரியராக இருப்பவர் அவருக்கு எமது நன்றி.

தமிழ் முரசிற்கு பல உள்ளுர் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் பலர் தொடர்சிசியாக எழுதுகின்றார்கள். பல புதியவர்களுக்கு தமிழ்முரசு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. இவர்கள் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட முடியாது இருக்கிறது. அவர்கள் அனைவரையும் வாசகர்கள் அறிவார்கள்.

சில இணையத்தளங்களில் வெளிவந்த தொடர் கட்டுரைகள், கதைகள் கவிதைகள் அவர்களின் அனுமதியோடு மீள் பதிவுசெய்யப்பட்டது. அவர்களும் பூரண ஆதரவு கொடுத்தார்கள். மற்றவர்களின் எழுத்துக்களை சிலர் தாங்கள் எழுதியதாக புனையும் கதைகள் கேள்விப்படுகின்ற காலத்தில் தமிழ்முரசில் வெளிவந்த சில கட்டுரைகள் ஒஸ்ரேலியாவிலும் உலகநாடுகள் சிவற்றில் வெளியாகும் சஞ்சிகைகளிலும் மீள் பிரசுரம் செய்யும்போது பத்திரிகா தர்மத்தை கடைப்பிடித்து "நன்றி தமிழ்முரசு"  எனப்பதிப்பித்திருந்தார்கள் அந்த இதழாசிரியர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். குறிப்பாக உள்ளுரின் மாதாந்த பத்திரிகையான தமிழோசை ஆசிரியர் நண்பர் மாத்தளை சோமு அவர்கள். திரு முருகபூபதி அவர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவை எல்லாவற்றையும் விட வாசகஅன்பர்கள்.  ஒரு திங்கள் முரசு வெளிவரப் பிந்தினால் எத்தனை தொலைநகல்கள் வந்து விடுகின்றது. பலர் நேரில் கானும்போது கூறுவார்கள் வேலைக்கு திங்கள் போனால் முதலில் தமிழ்முரசைப் பார்த்து விட்டுத்தான் வேலை ஆரம்பிப்போம் என்று.

வாகசர்களே தமிழ்முரசு உங்கள் பத்திரிகை உங்கள் நிகழ்ச்சிகள், செய்திகள் விழாக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் ,கவிதைகள் கட்டுரைகள் ,சமூகஅக்கறையுள்ள விடயங்கள் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் பிரசுரிக்க காத்திருக்கின்றோம். எந்த கட்டணமும் இல்லாமல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மரணஅறிவித்தல்கள் பிரசுரிக்கப்படும். புடங்களையும் தகவல்களையும் e-mail  மூலம் அனுப்பிவிட்டால் பிரசுரிக்கப்படும்  ( tamilmurasu1@gmail.com ) இது உங்கள் பத்திரிகை எந்த நேரத்திலும் எந்தத் தேவைக்கும் நீங்கள் பாவிக்கலாம் என்பதை மீண்டும் அறியத் தருகின்றோம்.

புரிய வருடத்தில் சில புதிய விடயங்களையும் சேர்த்துக்கொள்ள இருக்கின்றோம். அதை அடுத்த சில வாரங்களில் நீங்கள் பார்க்ககூடியதாக இருக்கும். எம்மோடு ஆசிரியர் குழுவில் இணைந்து கொண்டு சேவைசெய்ய விரும்புபவர்கள் e-mail மூலம் தொடர்புகொள்கள். மானிலங்கள் மாவட்டங்கள் ரீதியாக செய்தியாளர்கள் தேவையாக உள்ளது சேவையாற்ற முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ் முரசின் வாசகர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒஸ்ரேலிய வாசகர்கள் முதலிடத்திலும்,  இரண்டாவது இடத்தில் இந்திய வாசகர்களும் மூன்றாவது இடத்தில் அமரிக்கவாசகர்களும்,  நான்காவது இடத்தில் இலங்கை வாசகர்களும். தற்போது இடம் பித்துள்ளார்கள் என்பதும் மகிழ்வான விடயம்.

எழுத்தார்களே வாசகர்களே கடந்த மூன்று வருடங்கள் நீங்கள் தந்த ஆதரவையும் அதற்கு மேலாகவும் தொடர்ந்து தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு நாலாவது ஆண்டில் காலடி வைக்கின்றோம்.

அன்புடன்
செ.பாஸ்கரன்
ஆசிரியர்குழு சார்பாக
24.03.20134 comments:

திருநந்தகுமார் said...

உயர்வகுப்பில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் முரசு பெரிதும் பயன்படுகின்றது என்பதனை இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும். அவர்களின் வகுப்பறைக் கற்பித்தலுக்கும், மதிப்பீடுகளுக்கும் தெரிந்தெடுக்கப்பட்ட தமிழ் முரசு ஆக்கங்கள் கைகொடுக்கின்றன.
தமிழ் மாணவர்கள் சார்பில் நன்றிகள்.
ஆசிரியர் குழுவிற்குப் பாராட்டுகள்

paskaran said...

.
நன்றி திருநந்தகுமார் .உயர் வகுப்பு மாணவர்களையும் எழுதுவதற்கு ஊக்குவியுங்கள் .

Ramesh said...

4ம் ஆண்டில் காலடிவைக்கும் முரசிற்கு எனது வாழ்த்துக்கள். களைப்படையாமல் தொடர்ந்து செய்யும் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள். தற்போது அதிகமான நிகழ்வுகள் சிட்னியில் இடம் பெறுகின்றது ஆகவே ஆசிரியர்களை கூட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். மெல்பேணில் கட்டாயம் ஆசிரியர்கள் போட்டால் நல்லது. புது வருடத்தில் யோசியுங்கள்.


இலவச ஆலோசனை எண்டு நினைக்கிறீங்களாக்கும் ஜி ஜி ஜி ஜி .......

Anonymous said...

காலத்தின் தேவை உணர்ந்து அவுஸ்ரேலிய மண்ணில் உதித்த இலத்திரனியல் ஊடகம் தமிழ் முரசு அவுஸ்ரேலியா.நான்கு ஆண்டுகளாக அவுஸ்ரேலிய,இலங்கை,உலகச் செய்திகள்,விழாக்களின் விமர்சனங்கள்,விளம்பரங்கள்,வாழ்த்துக்கள் என பல விடயங்களைத் உலகத் தமிழர்களுக்கு சிறப்புற வழங்கிச் சேவையாற்றிய தமிழ் முரசு அவுஸ்ரேலியா பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள்.

செ பாஸ்கரனிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

தர்மா