பெறிமாவில் தபசு கால யாத்திரை - சோனா பிறின்ஸ்




வழமை போன்று இவ்வருடமும் பெறிமாவில் உள்ள மரியன்னையின் தேவாலயத்தில் சிட்னித் தமிழ்க் கத்தோலிக்க ஒன்றியத்தினர் 17-3-2013 அன்று தபசு கால யாத்திரையை மேற்கொண்டனர் . காலை 10;30ற்கு வழிபாடுகள் ஆரம்பமாகின . முதலில் திருச்சிலுவைப் பாதையும் இதொடர்ந்து திருப்பலிப் பூசையும் இஅதனைத் தொடர்ந்து திருச்செபமாலைப் பவனியும் இநிறைவாக திவ்விய நற்கருணை ஆசீர்வாதமும் இடம் பெற்றன .தேவதையின் பரிந்துரையால் தேவமைந்தனின் அருளாசியைப் பெற ஆலயம் நிரம்ப திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் .

சிலுவைப் பாதையில் இயேசுவின் பாடுகளை மிகவும் உணர்வு பூர்வமாக நடித்துக் காட்டியிருந்தார்கள் .பெருமளவிலான இளைஞர்கள் அதில் ஆர்வத்தோடு நடித்து பக்தர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தார்கள் . யேசுவிற்கு மரணத் தீர்ப்பு வழங்கிவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு இநழுவும் பாத்திரமான பிலாத்து அரசனின் பாத்திரத்தில் அந்தனி சாந்தகுமார் சேவியர் திறம்பட நடித்தார்

 .








கொடூர சித்திரவதை செய்வதற்கும் இகொலை செய்வதற்கும் துடித்துக் கொண்டிருக்கும் படைவீரர்களாக -மரியசீலன் அருள்தாஸ் இரோஷாந்த ரூபன் அருளப்பு இரூபன் குமார் இநிரஞ்சன் குமார் அந்தனி இசுதாகர் ராஜகுரு இஆகியோரும் இபடைவீரர் தலைவனாக யோவான் ரைற்றஸ் முதலானோர் திறம்பட நடித்தார்கள் .தேவதாயாக ஜனற் சகாயநாதன் நடித்து அனைவரதும் கண்களிலும் இருந்து கண்ணீரை ஆறாக வரவழைத்தார் .
பாதிவழியிலே இயேசுவின் உயிர் பிரிந்து இமலை உச்சிக்கு போகாமல் நின்று விடுவாரோ எனப் பயந்த படைவீரர்கள் இழுத்து வந்து இ சில வினாடிகள் சிலுவையைத் தாங்கிப் பிடிக்க வைத்த இ சீரேநூர் சீமோனாக மீண்டும் அந்தனி சாந்தகுமார் சேவியர் நடித்து ,பக்தர்களின் இதயங்களில் பரிவிரக்கத்தை ஏற்படுத்தினார் .


இயேசுவின் பாடுகளைப் பார்த்தழும் ஜெருசலேம் பெண்களாக இஜாஸ்மின் சகாய நாதன் இட்ரேசி ரைற்றஸ்இ ஜூடி கென்னடி முதலானோர் நடித்து அனைவரையும் அழவைத்தார்கள் .கொடிய படைவீரர்களில் சித்திரவதைப்படும் இயேசுவின் திரு முகத்தில் வழியும் திரு இரத்தத்தை துடைக்கும் வீரப் பெண்ணான வெரோணிக்காவாக தேனாபிறின்ஸ்சிறப்பாக நடித்தார் .
பிறப்பதற்கும் இறந்த பின் தலைசாய்ப்பதற்கும் பூமியில் இடம் இல்லாத தேவகுமாரனை இஅடக்கம் செய்ய இடம் கொடுத்த அரிமத்தேய சூசையாக மரியசீலன் அருள்தாஸ் திறம்பட நடித்தார் .யேசுவோடு அருகருகே அறையப்பட்ட இரு கள்வர்களாக அந்தனி ஷங்கர் இப்ரக்ஸ்டன் ஜேகப் இருவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள் .


இயேசுவின் பாடுகளிலே பிரதானமான பாத்திரமாகிய கருணைமிகு இயேசுவின்பாத்திரத்தில் ஜோசப் அருள்நாயகம் ஜஉதயன் ஸ நடித்திருந்தார் .அவரது ஒவ்வொரு அசைவும் யேசுவைக் கண்முன்னே கொண்டுவந்தது .வேதனை மிகுந்த முகம் இ தள்ளாடும் நடை இகண்களில்உறுதிஇ தந்தையின் ஆணையை வெல்ல யாரால் முடியும் என்று சட்டத்தின் முன் திருச்சபை நிறுத்தப்படும் போது ஏளனப் பார்வை இ பரம தந்தையின் விருப்பத்திற்கு தம்மை அர்ப்பணித்த தேவமைந்தன் பெற்றெடுத்த அன்னையை சந்திக்கும் பொது இ விண்ணின் பாசத்திற்கும் இமண்ணின் பாசத்திற்கும் இடையில் நின்ற கோலம் இஉடல் காயங்களோடு ஒட்டிய ஆடை உரிக்கப்படும் போதும் இ சிலுவையில் அறையப்படும் போதும் வலியின் துடிப்பு இ நிறைவாக உயிர் பிரியும் பொது நடிப்பின் உச்சக் கட்டம் என அவரது நடிப்பால் பெருமையை பெற்றுக் கொடுத்தார் .


ஆலயத்தில் சிட்னித் தமிழ்க் கத்தோலிக்க ஒன்றியத்தின் தற்போதைய தலைவராக செயலாற்றும் திரு. அம்புரோஸ் நெல்சன் அவர்களின் வரவேற்புரையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது .
நாம் வணங்கும் இயேசு ஆண்டவருக்காக இபெரிமா புனித யாத்திரைக்கான அனைத்து தேவைகளிலும் உதவி புரிந்த நல்மனத்தோருக்கும் இநிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்தோருக்கும் இசிரமம் பாராது நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகை தந்த பக்தர்களுக்கும் இதிருப்பலி ஒப்புக்கொடுத்த சிட்னித் தமிழ்க் கத்தோலிக்க ஒன்றியத்தின் ஆன்மீக அருட்தந்தை றொபேட் வில்லியம் அடிகளார்க்கும் இ சிட்னித் தமிழ்க் கத்தோலிக்க ஒன்றியத்தினருக்கும் ,எல்லாவற்றிற்கும் மேலாக நம்மோடு கூடவே இருந்து அருள் பொழியும் ஆண்டவருக்கும் ,தேவ அன்னைக்கும் நன்றி .

சோனா பிறின்ஸ்









No comments: