கணையாளி போடுவோம் கையின் விரலுக்கே. -வானொலி மாமா நா. மகேசன்-
திங்கள் விடியத் திறப்பேன் கணணியை
மங்களமாக விரியும் தமிழ்முரசு வலையில்
இணையத் தளத்தின் இனிய முரசு
கணைகள் பாயும் கலக்கும் செய்திகள்
படங்கள் பலநிறம் படிக்கச் சுருக்கம்
குடத்துள் விளக்கைக் கொணரும் வெளியில்
கிறுக்கன் கிறுக்குவான் கிறுக்கல் பலவிதம்
பொறுக்கலாம் பலபல புத்தி மதிகள்
நாலு ஆண்டு நம்ப முடியலை
காலச் சக்கரக் கண்ணாடி போன்று
இந்தக் காலத்து எழில் எழுத்தெல்லாம்
தந்து நிற்கும் தமிழ்முரசு அவஸ்திரேலியா
வாழ்க வாழ்க வளர்க பல்லாண்டு
சூழ்க சூழ்க சுடச்சுட எழுத்துகள்
இயக்குநர் குழுவுக்கு எங்கள் பாராட்டு
தயக்கம் இன்றித் தமிழை வளர்க்கும்
இணையத் தளத்தின் இனிய முரசுக்குக்
கணையாளி போடுவோம் கையின் விரலுக்கே.

No comments: