உலகச் செய்திகள்

இடைத் தேர்தலில் ஆங்சான் சூகி வெற்றி மக்களின் வெற்றி என புகழாரம்

சைபீரியாவில் ரஷ்ய விமான விபத்து 16 பேர் பலி; பலர் படுகாயம்

பனிச்சரிவில் சிக்கி 135 பாக். வீரர்கள் மரணம்

பிரிட்டனில் வரலாறு காணாத பனி பொழிவு: சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது

இடைத் தேர்தலில் ஆங்சான் சூகி வெற்றி மக்களின் வெற்றி என புகழாரம்

Tuesday, 03 April 2012

aung_san_suu_kyi_ரங்கூன் : மியன்மாரின் எதிரணித் தலைவியும் மனித உரிமை ஆர்வலருமான ஆங் சான் சூகி நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதாக அவரது தேசிய ஜனநாயக லீக் அறிவித்திருக்கும் நிலையில் இவ் வெற்றியானது மக்களின் வெற்றி என சூகி தெரிவித்துள்ளார். ஆனால் 45 ஆசனங்களுக்காக நடத்தப்பட்ட இந்த இடைத் தேர்தலின் உத்தியோக பூர்வ முடிவுகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் சூகியின் சொந்த தேர்தல் தொகுதியான கவ்ஹ்முவில் அவர் இலகுவாக வெற்றி பெற்றுள்ளதாக தேசிய ஜனநாயக லீக் உறுதிப்படுத்தியுள்ளது.


வெற்றிக் கொண்டாட்டங்களில் பொறுமை காக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு சூகி உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கான இத்தேர்தல் வெற்றியினை உன்னதமான வெற்றி என தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆதரவாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என சூகி கோரியுள்ளார்.

வார்த்தைகள், அணுகுமுறை மற்றும் செயற்பாடுகள் ஏனைய கட்சியினரையும் மக்களையும் காயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சூகி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரங்கூனிலுள்ள கட்சி தலைமை செயலகத்தின் முன்னால் ஒன்று கூடிய ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்.

664 ஆசனங்களையுடைய மியன்மார் பாராளுமன்றத்தில் இராணுவ அதிகாரிகளும் அவர்களின் நண்பர்களும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நாட்டில் அரசியல் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இத் தேர்தல் மிகவும் முக்கியமானது.

தனது ஆசனத்துக்கான வெற்றிக்கு மட்டுமல்லாது சக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் சூகி கடுமையாக உழைத்துள்ளாரென கூறப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றிப்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணைக் குழு எந்தவிதமான அறிவிப்பையும் விடுக்கவில்லை.

இத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி பல ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும் இராணுவமும் ஐக்கிய ஒன்றிய மற்றும் அபிவிருத்தி கட்சியே மொத்த ஆசனங்களில் 80 வீதமானவற்றை தம்வசம் வைத்துள்ளனர்.

நன்றி தினக்குரல்சைபீரியாவில் ரஷ்ய விமான விபத்து 16 பேர் பலி; பலர் படுகாயம் Tuesday, 03 April 2012

siberian_plane_crash_தியுமென்: சைபீரிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரஷ்யவிமானமொன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளதுடன், 12 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 பயணிகளுடன் வந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ரஷ்யாவின் அவசர சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு எண்ணெய் நகரான சூர்குட்டுக்க தியாமன் நகரிலிருந்து பயணித்த ஏரிஆர்72 ரூபோரோப் என்னும் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை உயிருக்கு போராடுகின்ற 5 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி தினக்குரல்பனிச்சரிவில் சிக்கி 135 பாக். வீரர்கள் மரணம்
pakistan_avalanche_பாகிஸ்தானில் சியாச்சின் மலைப்பகுதியில் காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 135 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் பனிச்சரிவில் சிக்குண்ட இராணுவத்தினரில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை எனவும் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் தெரிவித்தார்.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் உலகிலேயே அதி உயரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இராணுவ முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்
பிரிட்டனில் வரலாறு காணாத பனி பொழிவு: சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது


uk_snow_பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் வரலாறு காணாத அளவிற்கு மிக அதிக அளவில் பணி பொழிவு ஏற்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து 10inch உயரத்திற்கு பனி சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை தொடர்ந்து போக்குவரத்து அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.
சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவால் தொடர்ந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன. இந்தப் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பனியாளர்கள் தட்டுப்பாட்டால் 1.5மில்லியன் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். மேலும் ஈஸ்டர் பண்டிகை, மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு விமான நிலையத்தில் மக்கள் அதிக அளவில் காத்திருக்கின்றனர்.
uk_snow_2
இந்த மோசமான பனிப்பொழிவால் தண்ணீர், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன் சில இடங்களில் ஈரத்தால் சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன. வடக்கு வேல்ஸ் கடலில் பனிப்பொழிவால் சரக்கு கப்பல் ஒன்று நிலை தடுமாறி கடலில் கவிழ்ந்துள்ளது.
உச்சி பனிச்சறுக்கு விளையாடுவோற்கு மீண்டும் மலையுச்சியில் சுற்றுலா விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
uk_snow_3
uk_snow_4
நன்றி தினக்குரல்

No comments: