28. குறளில் குறும்பு - பசியும் அழிக்குமா?

.


வானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்


ஞானா அம்மா......அம்மா......இஞ்சை ஒருக்கால் வாருங்கோ அம்மா.......

சுந்தரி என்ன ஞானா?.... கையிலை அலுவலாய் இருக்கேக்கை ஏன்
                       கூப்பிட்டுக் குழப்புறாய்?

ஞானா உங்களுக்கு ஒரு பத்து லட்சம் டொலர் லொட்டேவிலை
                      விழுந்தால் என்ன செய்வியள் அம்மா?

சுந்தரி உந்த விண்ணாணம் கேக்கவே உவ்வளவு அவசரமாய்
                      கூப்பிட்டனி ஞானா?

ஞானா லொட்டோ விழாட்டிலும் காரியம் இல்லை அம்மா.......சும்மா ஒரு
                      பேச்சுக்குச் சொல்லுங்கோ,

சுந்தரி அப்பிடிப் பெரிய தொகை விழுந்தால், முதலிலை உன்ரை
                     கலியாணத்தை முடிச்சு வைப்பன்.

ஞானா என்ரை கலியாணத்தை முடிக்கிறதுக்கு அப்பிடிப் பெருந் தொகைப்
                     பணம் தேவையே அம்மா?

சுந்தரி எடி விசர்ப் பிள்ளை. உலகம் தெரியாத பெண்ணாய் இருக்கிறாய் நீ.
                  சிட்னியிலை இப்ப ஒரு கலியாண வீடு வைக்க ஆகக்குறைஞ்சது
                ஒரு லட்சம் டொலறாவது வேணுமாம். அது போகச் சீதணம் வீடு
                வாசல் கார் கண்ணி எண்டு பத்து லட்சம் டொலர் எந்த மூலைக்குக்
                காணும்.



ஞானா அம்மா.....அம்மா....உந்தச் சீதணம் குடுத்துக் கலியாணம் கட்டிற
                      சேட்டையை என்னோடை வைச்சுக் கொள்ளாதையுங்கோ. அது
                        ஊரிலை உள்ள வழக்கம். இஞ்சை I love you.......I  love you  
                         too.....ok. .......கலியாணம் எண்டு போறதுத கலியாணம்.

சுந்தரி ஓமடிபிள்ளை ஓம்......நானும் உப்பிடிக் கனபேரைக் கண்டனான்
                        கண்டியோ. Love எண்டு சொல்லிக்கொண்டு பெடி பெட்டை வரும்.
                        பிறகு கலியாணம் எண்ட பேச்சை எடுத்தவுடனை, தாய் ஒருபக்கம
                      தேப்பன் ஒரு பக்கம்........பத்தாக்குறைக்கு மாமன், மாமி மறுபக்கம்
                        எண்டு பேசத்துவங்கினாப் போலை எல்லோ ......உன்ரை
                        பத்துலட்சம் டொலர் எந்த மூலைக்கு என்டது தெரியவரும்.

ஞானா அம்மா நீங்கள் எப்பவும் எடக்கு முடக்காயப் பேசிறதுதான்
                      உங்கடை குணம்...இஞ்சை அப்பா வாறார் .......அவரைக்
                    கேட்டுப்பாப்பம்.......என்ன சொல்லிறார் எண்டு.

அப்பா ஞானா என்னை ஒண்டும் கேக்க வேண்டாம்......எல்லாம்
                        அறையிக்கை நிண்டு கேட்டுக் கொண்டுதான்
                       நிண்டனான்......உங்கடை உந்தப் புளிச்சல் ஏவறைக் கதைக்கு நான்
                       வரயில்லை.

ஞானா அப்பா! உங்களுக்குப் பதில் தெரியேல்லை. அதுதான் மழுப்புறியள்.

அப்பா என்ன ஞானா? எனக்கே....... பதில் தெரியேல்லை.......உந்தமாதிரிப்
                      பிறைஸ் எனக் விழுந்தால் நான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிற
                      வங்கியிலை பணத்தைப் போட்டு வைப்பன்.

சுந்தரி உதென்;னப்பா நீங்கள் சொல்லிற கதை. திருவள்ளுவர் காலத்திலை
                 வங்கியள் இருந்ததே அவர் வங்கியைப் பற்றி எங்கை
               சொல்லியிரக்கிறார்.

அப்பா சுந்தரி......உம்மடை மகள் ஞானாதானே திருக்குறளிலை பெரிய
                     ஆராய்ச்சி செய்யிறாள். அவளைத்தான் கேளும்.

ஞானா அப்பா எனக்கெண்;டால் திருவள்ளுவர் வங்கியைப் பற்றி எங்கை
                      சொல்லியிருக்கிறார் எண்டது தெரியேல்லை.

அப்பா பிள்ளை ஞானா வயிறுநிறையச் சாப்பிட்டிட்டு.......பத்துலட்சம்
                        டொலர்........, வீடுவாசல், கார் கண்ணி,........ கலியாணம் என்டு
                       தேடுற உங்கள் தரவளியளுக்கு, அற்றார் அழி
               பசி எங்கை தெரியப்போகுது. அதுபற்றித் திருவள்ளுவர்
                        சொல்லியிருக்கிறது எங்கை புரியப்போகுது.

-2-

சுந்தரி சும்மா புதிர் போடாமல் குறளைச் சொல்லுங்கோ அப்பா.

அப்பா சுந்தரி …….
   
                அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதெருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

                  எண்ட திருக்குறள் உமக்குத் தெரியாதே.

சுந்தரி தெரியும் அப்பா.. ஆனால் அதிலை எங்கை வங்கி வருகுது?

அப்பா தற்காலத்திலை எல்லாருக்கும் Bank Balance இலை தானே
                        கண்.

ஞானா அம்மா.....உந்தக் குறளிலை பொருள்வைப் புழி எண்டு
                      வருகுதெல்லே......அதுக்கு பொருளைச் சேமித்து வைக்கிற இடம்
                      எண்டு அர்த்தம்.......அதைத்தான் அப்பா திருவள்ளுவர் சொன்ன
                    வங்கி எண்டு சொல்லிறார்.

அப்பா விட்டிடாதை ஞானா........கையிலை பணம் வந்து சேந்தால்
                     முதலிலை அற்றார் அழி பசியைத் தீர்க்க வேணும்.

ஞானா அப்பா...அற்றார் என்டால் வறியவர்கள் என்டது தெரியும். ஆனால்
                     அழி பசி என்டது.....பசி எப்பிடி ஆக்களை அழிக்கும் அப்பா?

அப்பா நாலாய்க் கோட்டாய் பிள்ளை....உன்ரை சீவியத்திலை நீ ஒரு
                     நாளும் பசி கிடக்கேல்லை. உனக்குப் பசியைப்பற்றித்
                     தெரியாதுதான்........ஈத்தியோப்பியாவிலை
எத்தினையோ சனம் பசியாலை செத்ததை நீ கேள்விப்படேல்லையே
                ஏன் அங்கை இஞ்சை போவான். எங்கடை தமிழ் ஈழத்திலை இப்பவும்
                  பசிக்கொடுமையாலை சனம் வாடுறது தெரியாதே.

ஞானா கேள்விப்பட்டிருக்கிறன் அப்பா. என்ரை சிநேகிதி ஒருத்தி 48
                    மணத்தியாலம் பசி இருந்து காசு சேர்த்து றுழசடன எளைழைn க்குக்
                       காசு அனுப்பினவள்.

அப்பா உதுவந்து அழி பசி இல்லை ஞானா. நேடு நாள் பசி கிடக்கிறவை
                        சாகிறது மட்டும் இல்லை. அழி பசி எண்டு சொல்லிறது மனிதப்
                        பண்புகளை எல்லாம் அழித்தும் விடும்.

சுந்தரி அப்பிடி எண்டால் அப்பா.....வறியவர்களின்ரை பசியை ஒருவர்
                      தீத்துவைச்சால் அவருக்குப் புண்ணியம் கிடைக்கும். அந்தப்
                     புண்ணியம் தான் எங்கடை சேமிப்பு. அந்தச் சேமிப்பு எங்களளுக்கு
                      எப்போதும் உதவியாய் இருக்கும் எண்டு வள்ளுவர்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

எண்ட குறளிலை சொல்லியிருக்கிறார்.

அப்பா சரியாயச் சொன்னீர் சுந்தரி. தாயும் மேளுமாய் லொட்டோவிலை
                        ஆகாசக் கோட்டை கட்டாமல், எங்களுக்கு அழி பசி இல்லை, அது
                        நாங்கள் செய்த புண்ணியம். அந்தப் புண்ணியத்தை இன்னும்
                       கொஞ்சம் கூட்டிறதுக்கு அழி பசியிலை இருக்கிற ஆக்களுக்கு
                         உதவ  எங்களாலை இயன்றதைச் செய்ய முன்வரவேணும்.

சந்தரி நான் உதுக்கு மறுப்பான ஆளில்லை அப்பா. சும்மா இவள் பிள்ளை
                         கேக்கிறாள் என்டதுக்காகச் சொன்னனான். நீங்கள்தானே நெடுகச்
                        சொல்லுவியள் ஓறுத்தால்தான் சீவயம் எண்டு. எங்களை
                       ஒறுத்துத்தால்தான் நாங்கள் மற்றவைக்கு உதவ முடியும்.

ஞானா ஊழசசநஉவ அம்மா. இப்ப என்னைப் பாருங்கேவன். டான்ஸ்
                     படிச்சனான். அரங்கேற்றம் வேண்டாம் எண்டு விட்டிட்டன்.
                     இலங்கைக்குப் போய் ஊர் பாக்க வாறியோ எண்ட கேட்டியள். நான்
                    அங்கை வந்து ஊர்ச் சனத்துக்கு ளாழற காட்ட விரும்பேல்ல எண்டு
                   விட்டிட்ன்.

சுந்தரி இனிமேல் கலியாணமும் வேண்டாம் எண்டு நிப்பாய் போலை
                    கிடக்கு.

-3-
ஞானா அப்பிடி எண்டில்லை அம்மா.....எங்;கடை சமுதாயத்துக்கு ஏற்பட்டிருக்கிற விழுக்காட்டை மனதிலை வைச்சு, வசதியாய் வாழிற நாங்கள் படாடோபங்களைக் குறைச்சு, நீங்கள் சொன்ன மாதிரி, ஒறுத்துச் சீவியம் நடத்திப் பிறருக்கு உதவி செய்ய வேணும் எண்டதுதான் என்ரை நோக்கம். அதுக்காகச் சாதாரண வாழ்க்கை வாழாமல் உலகத்தை வெறுத்துச் சீவிக்க வேணும் என்டதில்லை.

அப்பா நல்ல நோக்கம்தான் ஞானா. ஆனால் வாயாலை சொல்லிறமாதிரி
                        லேசான காரியம் இல்லை. ஏதோ ஒவ்வொருவரும் சிறுகச்
                        சிறுகத் தனக்குத் தனக்குத் தெரிஞ்ச அற்றாருடைய
                        அழிபசியைத் தீர்க்க முயற்சி எடுக்கிறதுதான் இப்போதைக்கு
                       உள்ள நல்ல முறை எண்டு நான் நினைக்கிறன்.



(இசை)

No comments: