முருகன் ஆலய பூங்காவனதிருவிழா என்பார்வையில் -செ.பாஸ்கரன்.

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை பூங்காவனத்தோடு இனிமையாக நிறைவுற்றது. பூங்காவன திருவிழாவை சிட்னி இளைஞர் வட்டம் வருடம்தோறும் பொறுப்பெடுத்து செய்து வருகின்றது. அனைத்து திருவிழாக்களிலும் அதிகூடிய மக்கள் நிறைந்த திருவிழாவாக இந்த பூங்காவன திருவிழாவே அமைந்திருந்தது. ஏறக்குறைய ஜயாயிரம் பேர் வரை வந்திருந்தார்கள் அதிலும் அரைவாசிக்கு மேல்  இளைஞர்கள் யுவதிகள் போன்றவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்க்கின்றபோது உண்மையில் மனதிலே மிகவும் சந்தோசமாக இருந்தது. இளைஞர்கள் செய்ய மாட்டார்கள் செய்யமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு தாங்களே செய்யும் பெரியவர்களுக்கு சிட்னி முருகன் ஆலயத்தின் இந்த நிகழ்வு ஒரு பாடமாக அமையவேண்டும்.

வீதிஎங்கும் அழகிய பட்டு பாவாடை தாவணிகள் அணிந்த பெண்பிள்ளைகளும் வேட்டியும் குர்தாவும் அணிந்த இளைஞர்களும் உலாவந்தது முருகப்பெருமானுடை வீதி உலாவிற்கு அழகூட்டியிருந்தது என்றால் அது மிகையாகாது. சுவாமி தூக்கியது தேவாரம் பாடியது உணவு பரிமாறியது அலங்காரம் செய்தது மண்டபபடி அமைத்தது இப்படி எல்லாவற்றையும் அவர்களே செய்தார்கள் பாராட்டுக்கள் எதிர்கால சந்ததியினருக்கு. இந்த பூங்காவனதிருவிழாவை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தேரையும் தீர்த்ததிருவிழாவையும் நேரடி அஞ்சல் செய்ததுபோல் செய்தது திருவிழாவிற்கு வரமுடியாத பக்தர்களும் உலகெங்கும் வாழும் பக்தர்களும் பூங்காவனத்தை  கண்டு களித்ததுபோல் இருந்திருக்கும் இதை சிரமமெடுத்து ஒருங்கிணைத்த ஸ்ரீதரனுக்கும் பாராட்டுக்கள்.


அழகிய சோடனைகளில் எத்தனை தொண்டர்கள் பங்குபற்றியிருந்தார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி சோடனைகளில் பங்கு கொண்டு உதவும் நாகியிடம் கேட்டபோது இது ஒருவர் இருவர் செய்வதல்ல எத்தனையோ பேருடைய இரவுபகல் முயற்சி எத்தனையோ தொண்டர்கள் இதில் பங்குபற்றி செய்கின்றார்கள் இன்னும் தொண்டர்கள் நிறைய வரவேண்டும் உதவவேண்டும் என்றார். இதேபோல் இந்த ஆலயத்தில் தொண்டர்களுடைய தொண்டை பாராட்டவேண்டும் கார் நிறுத்துமிட தொண்டர்கள் இரவுபகலாக பணிபுரிவது கோவிலையும் சுற்றாடலையும் துப்பரவாக்கும் தொண்டர்கள் மலர்த்தோட்டத்தை பராமரிக்கும் தொண்டர்கள் உணவு தயாரிப்பு வழங்கலில் ஈடுபடும் தொண்டர்கள் இன்னும் எத்தனையோ வகையான தொண்டர்கள் இயங்குவதால் இந்த சிட்னி முருகன் ஆலயம் சிறப்பாக இயங்குகின்றது. மக்கள் ஒவ்வொருவரும் இது தங்கள் சொந்த ஆலயம் என்ற உரிமையோடு வருகின்றார்கள் என்பது மாபெரும் உண்மையாகும். இதை ஒழுங்கு படுத்துகின்ற நிர்லாகமும் பாராட்டப்பட வேண்டியதே.


இன்னுமொரு முக்கியமான நிகழ்வை குறிப்பிடாமல் இதை முடிக்கமுடியாது. அதுதான் தண்ணீர்ப்பந்தல். யுhழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத்தின்போது தெருவெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்ப்பந்தல் இன்றும் எம்மனதை விட்டு அகலாமல் இருக்கின்றது. அதேபோல் இந்த தண்ணீர்ப்பந்தலும் மிக நன்றாக தன்னுடைய பணியை செய்தது. குறிப்பாக மோர் கோப்பி இந்த இரண்டையும் சளைக்காமல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பெயரைக் குறிப்பிடுவதற்கு பெயர்தெரியாத காரணத்தால் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் சிரித்த முகத்துடன் என்நேரமும் நின்று அவர்கள் உபசரித்த விதத்தை பாராட்டத்தான் வேண்டும்.தொண்டர்கள் என்பதற்காக வேலைப்பழுவால் எரிந்து விழுகின்ற சில  தொண்டர்களையும் பார்த்திருக்கின்றோம் அவர்கள் வேலைப்பழுவால்தான் அப்படிச் செய்கின்றார்கள் இருந்தாலும் அப்படி நடந்து கொள்ளாது வேலைப்பழுவை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொண்டால் சிரித்த முகத்தோடும் விருப்போடும் அவற்றைச் செய்யலாம் அது பார்ப்பவர்களுக்கும் அவர்கள் மேல் ஒரு அன்பு கருணை என்பதை ஏற்படுத்தும். எல்லாத்தொண்டர்களும் நிர்வாக உறுப்பினர்களும் அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன். சிரிப்பதற்கு எந்தவிதமான செலவும் இல்லை ஆனால் மற்றவர்களுடைய அன்பைப் பெற்றுக்கொள்வீர்கள்.7 comments:

kirrukan said...

[quote]தொண்டர்கள் என்பதற்காக வேலைப்பழுவால் எரிந்து விழுகின்ற சில தொண்டர்களையும் பார்த்திருக்கின்றோம் அவர்கள் வேலைப்பழுவால்தான் அப்படிச் செய்கின்றார்கள் இருந்தாலும் அப்படி நடந்து கொள்ளாது வேலைப்பழுவை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொண்டால் சிரித்த முகத்தோடும் விருப்போடும் அவற்றைச் செய்யலாம் அது பார்ப்பவர்களுக்கும் அவர்கள் மேல் ஒரு அன்பு கருணை என்பதை ஏற்படுத்தும். எல்லாத்தொண்டர்களும் நிர்வாக உறுப்பினர்களும் அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன். சிரிப்பதற்கு எந்தவிதமான செலவும் இல்லை ஆனால் மற்றவர்களுடைய அன்பைப் பெற்றுக்கொள்வீர்கள்.[quote]
இது நடக்கிற காரியமா பாஸ்கரன் அதுவும் சிட்னி முருகன் கோவிலில்...சும்மா தாமாஸ் பண்ணுகிறீயள்...சிலர் கோவிலில் தொண்டனாக இருப்பதே எரிஞ்சு விழத்தான்
வேலை பழு காரணமாக இருக்காது என்பது என் கருத்து....ஊரில் இருக்கும் பொழுது இருந்த சண்டித்தனத்தை கோவிலிலும் காட்டுகிறார்கள்...எவ்வளவோ இளைஞர்கள் இருக்கின்றார்கள் ஏன் அவர்களிடம் இதை இந்த முதிய தொண்டர்கள் கொடுக்க முயற்ச்சிப்பதில்லை

kirukkan said...

[quote]அன்னதான வரிசையில் பலர் வெயிலில் நிற்க, சிலர் இடையில் புகுவது சரியா?[/quote]

அதற்க்கு பெயர் சி.மு.தொ(சிட்னி முருகன் தொண்டரிசம்)

Kanthan said...

இப்பொழுது எல்லாம் பெரியவர்களை விட இளைஞர்கள் தான் நன்றாக செய்கிறார்கள். இங்கு சிட்னியில் விடுதலைப்போராட்ட நிகழ்வு என்றால் என்ன சமய நிகழ்வு என்றால் என்ன இசை நிகழ்வு என்றால் என்ன இளையோர் தான் சிறப்பாக செய்கிறார்கள்.

திருவிழாவில் நடைபெற்ற களவுகள் பற்றி ஆசிரியர் குறிப்பிடவில்லை.

----இதில் பதிந்திருந்த வசனம் ஆசிரியரால் நீக்கப்பட்டுவிட்டது------

அன்னதான வரிசையில் பலர் வெயிலில் நிற்க, சிலர் இடையில் புகுவது சரியா?

nokar said...

அன்னதானத்துக்கு வந்து சாப்பிட்டு முடித்தவர்களில் யாரையாவது பரிமாற கூப்பிட்டால், நைசாக நழுவிவிடுகிரர்கள்.குறிபிட்ட ஒரு சிலரே திரும்திரும்ப செய்யவேண்டி இருக்குது என்று ஒருவர் புலம்பினார் . 5000 பேர் மட்டில் வரும்போது, மாறி மாறி பரிமாறலாம் தானே.

தண்ணி பந்தல், கார் பார்க் தொண்டர்கள், பின்னால் சமையல் செய்தவர்கள், மற்றும் கோயிலுக்குள் ஒரு சிலர் ஆகியோர் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். ஒரு நாளுமே கோயிலுக்கு வராமல் , ஒரு சிறு காசு உதவி செய்யாமல் திருவிழா சமயம் பார்த்து வந்து சும்மா பட்டு வேட்டியுடன் , வெறும் மேலுடன் சாமி தூக்கவும், வடம் பிடிக்கவும்தான் வருகினம்.

சிட்னி முருகன் யூத் circle (SMYC ) நன்றாக செய்கிறார்கள்.

ஐயரை கூபிட்டிருகத் தேவையில்லை , ஆனாலும் கூப்பிட்ட பிறகு அரைவாசியில் அனுபியிருக்க கூடாது. கொமிட்டி இரண்டு பட்டால் இதுதான் பிரச்சினை.

== நோக்கர் ஒருவர் ===

tamilmurasu said...

அன்புள்ள வாசகர்களே தமிழ்முரசு தற்போது வாரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்களால் பார்வையிடப்படுகின்றது.உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் பார்வையிடுகின்றார்கள். எனவே கருத்துக்களைப் பதிவு செய்யும்போது நன்மை பயக்கும் வகையிலும் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலும் பதிவுசெய்தால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து அதை மனதில் வைத்து செயற்படும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். நீங்கள் பதிவிடுவதை நாம் மதிக்கின்றோம் மகிழ்ச்சி கொள்கின்றோம் அது தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடன்
ஆசிரியர் குழு

kirrukan said...

[quote]ஐயரை கூபிட்டிருகத் தேவையில்லை , ஆனாலும் கூப்பிட்ட பிறகு அரைவாசியில் அனுபியிருக்க கூடாது. கொமிட்டி இரண்டு பட்டால் இதுதான் பிரச்சினை.[quote]

குருக்களை அழைத்து திருப்பி அனுப்பின செலவு எல்லாம் ....காந்தி கணக்கோ?10000 ஆயிரம் டொலர் செலவாகியிருக்கும் .....எல்லாம் சந்தனம் மிஞ்சி ஆடுறாங்கள்

Ramesh said...

இதையே பெரியவிடயமா எடுக்கிறீங்கள் கிறுக்கன் கொமிற்றி மயில்வாகனம் வாங்கும் கதையைக் கேட்டிங்கள்எண்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். கொழும்பில ஒரு பிளற் வாங்கிற விலையாம் புரிஞ்சுகொள்ளுங்கள் எவ்வளவென்று. வாங்கப்போனவர் யார் தெரியுமா? எல்லாவற்றையும் நான் சொல்லிவிட்டால் உங்களுக்கு சிந்திக்க இடமிருக்காது சிந்திச்சுப்பாருங்கள் புரியும். இங்க உள்ளவர்கள் இளிச்சவாயர்கள் எண்டு கன சங்கங்களுக்கு தெரிஞ்சு போய்விட்டது. ஈஈஈஈஈஈ....