சிட்னி துர்க்கை அம்மன் கோவில் இராப்போசன விருந்து 28 - 04 - 2012


படப்பிடிப்பு கு கருணாசலதேவா 
கணேஷ் 

சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தின் கட்டிட நிதிக்கான இராப்போசன விருந்து சனிக்கிழமை 28.04.2012 இரவு இடம்பெற்றது. ஆலயத்தில் அமைந்திருக்கும் மண்டபம் நிறைந்த மக்களாக இந்நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வந்தவர்களை ஆசனங்களில் அமரவைப்பதில் சற்று தாமதம் இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 6.30 மணிக்கு   திரு செ.பாஸ்கரனின் அறிவிப்போடு திருமதி லஷ்மி பாஸ்கரன் திருமதி செல்வராணி லிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து பகீசா பூபாலசிங்கம் அபிசா பூபாலசிங்கம் சகோதரிகள் இனிமையாக தமிழ்மொழி வாழ்த்து பாடினார்கள். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ செந்தில்நாதகுருக்கள் இறைவணக்கத்தையும் ஆசிச் செய்தியையும் வழங்கினார்கள். சுருக்கமாகவும் ஆழமாகவும் அவருடைய உரை அமைந்திருந்தது.

அடுத்த நிகழ்வாக பேர்த் நகரில் இருந்து வருகை தந்தவரும் ஜெயலஷ்மி ராமன் மற்றும் இந்தியாவில் சிறந்த நடன ஆசிரியரான தனஞ்சயனின் மாணவியுமாகிய செல்வி மயூரி நடேசன் அவர்களின் மீனாட்சி கல்யாணம் என்ற நடனம் இடம்பெற்றது. ஆசிரியர்களின் பெயர்களைக்கேட்டவுடன் ஏற்ப்பட்ட எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போல் பார்வையாளர்களை கவரும்படியாக அவரது நடனம் அமைந்திருந்தது. இசைத்தட்டில் ஒலித்த பாடலின் ஒலியின்தரத்தைக் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இதனைத்தொடர்ந்து அகலிகா மகேந்திரன் அம்மன் ஆலயமும் மண்டபமும் நூல்நிலையமும் எப்படி அமைய இருக்கின்றது. எதிர்காலத்தில் என்னசெய்யப்போகின்றார்கள் என்பன பற்றிய விபரத்தை காட்சியோடு விளக்கம் கொடுத்தார். மிக ஆழுமையுடன் அதை அவர் செய்திருந்தார்.


இதனைத்தொடர்ந்து பாடல்குழுவினர் கரியோக்கியில் பாடல்களை தரவருகின்றார்கள் என்று அறிவித்த செ.பாஸ்கரன் ஆறு வருடங்கள் வெளியே சென்றிருந்த பாவலன் அவர்கள் மீண்டும் சிட்னி வந்துள்ளார் என்றுகூறி திரு.பாவலனை அறிமுகம் செய்த போதே அரங்கில் கரவோசை எழுந்தது. அதேபோல் பாவலன் மிக அருமையாக பாடினார் பின் மாதுமையும் அவரைத்தொடர்ந்து இன்னும் சிலரும் பாடினார்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு மிக நன்றாக பாடி சபையினரின் கரகோசத்தைப் பெற்றுக்கொண்டார்கள். குறிப்பாக அதிகம் மேடைக்குவராதவரும் சப்தஸ்வரா இசைக்குழுவை இயக்கிக் கொண்டிருப்பவருமான திரு.பாலா அவர்கள் வந்து பாடியது மிக மிக நன்றாக இருந்தது. அதேபோல் மேடைகளில் காணாத ( முன்பு பாடியிருந்தாரோ எனக்கு தெரியாது) சண் குமாரலிங்கம் அவர்கள் அதோ அந்த பறவைபோல என்ற பாடலை நன்றாகவே பாடிச்சென்றார்.பாடல் நிகழ்ச்சியின் இடையிலே திரு.பாஸ்கரன் ஒரு நல்லசெய்தியை சொல்லவருகின்றேன் என்று கூறி சப்தஸ்வரா இசைக்குழுவினர் பாவலன் சண் குமாரலிங்கம் ஆகியோர் துர்க்கை அம்மன் ஆலயநிர்வாகத்துடன் இணைந்து கர்நாடக சங்கீதங்கள் கலந்து வரும் பாடல்கள் பக்திப்பாடல்கள் போன்றவற்றில் பின்னணி இசையோடு பாடல் போட்டியை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்து அதுபற்றி விளக்குவதற்கு திரு பாவலனையும் திரு பாலாவையும் அழைத்து உரையாடி அந்த நிகழ்வு பற்றிய விளக்கத்தை கொடுத்து இதில் எவரும் பங்குபற்றலாம் என்பதையும் அறியத்தந்தார்.
இறுதிப்பாடலுக்கு பாவலைனை அழைத்து பாவாடைதாவணியில் அவர்பார்த்த உருவத்தை விபரிக்கமுடிமா என்று நகைச்சுவையாக கேட்க பாவலனும் நிட்சயதாம்பூலம் படப்பாடலான அந்தப்பாடலை மிகஅருமையாக பாடி பாடல்நிகழ்வை நிறைவுசெய்தார்கள்.
அதனைத்தொடர்ந்து வழமைபோல் துர்க்கை அம்மன் ஆலய தொண்டர்களின் சுவை நிறைந்த உணவு பரிமாற்ப்பட்டது.


பசியாறிய பின்பு இலங்கையில் இருந்து வருகைதந்திருக்கும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் உரையாற்றினார்கள். உணவு ஒன்றுகூடல் என்பதாலோ என்னவோ தமிழர்களின் விருந்தோம்பலையும் சமுதாயத்தில் பெண்களின் உயர்ந்த தன்மையையும் சக்தியினுடைய மகிமையையும் ஒன்று சேர்த்து மகாகவியினுடைய பார்வையோடு அந்த உரையை ஆற்றியவர் யாழ்ப்பாணம் வாருங்கள் யாரும் இல்லையென எண்ணாதீர்கள் நான் இருக்கிறேன் உங்கள் உறவாக இருக்கிறேன் இன்னும் உங்களை எதிர்பார்த்து பல உறவுகள் காத்திருக்கிறார்கள் வாருங்கள் என்ற அழைப்போடு நிறைவு செய்தார்.

பத்தரை மணிஆகியும் பலர் இருந்து சொற்பொழிவையும் கேட்டு சென்றார்கள். தொண்டர்களின் பங்களிப்போடு நிகழ்வு நன்றாகவே நிறைவுற்றது. அதிர்ஸ்டலாப சீட்டிழுப்பில் சில தவறுகள் வந்தபோதும் அறிவிப்பாளர் அதை நன்றாக கையாண்டு எல்லோரும் திருப்திப்படும்படி நாடாத்தியது பாராட்டுக்குரியது. கட்டட நிதிக்காக நடாத்தப்பட்ட நல்லதோர் உணவுடன் கூடிய நிகழ்ச்சியை பார்த்த நிறைவுடன் அன்றைய இரவு அமைந்தது.
4 comments:

Anonymous said...

நானும் அங்கு சென்று இருந்தேன். நல்ல நிகழ்சி. ஆனாலும் ஆளுக்கு ஒரு புட்டு என்று அளவு உணவு கொடுத்து பட்டினி போட்டு விட்டது நிர்வாகம் . வீட்டுக்கு சென்று மீண்டும் சாப்பிட
வேண்டி இருந்தது.

kirrukan said...

[quote]நானும் அங்கு சென்று இருந்தேன். நல்ல நிகழ்சி. ஆனாலும் ஆளுக்கு ஒரு புட்டு என்று அளவு உணவு கொடுத்து பட்டினி போட்டு விட்டது நிர்வாகம் . வீட்டுக்கு சென்று மீண்டும் சாப்பிட
வேண்டி இருந்தது[quote]


நானும் சென்றிருந்தேன்...நீங்கள் சொல்வது போல அளவுச்சாப்பாடுதான்....சிட்னி ட‌மிழ்ஸ்க்கு கொலஸ்ரோல்,சுகர் பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கையாக நிர்வாகம் இதை செய்து இருக்கலாம் என்பது என் கருத்து.காசு கொடுத்து அளவுச்சாப்பாடு சாப்பிட வேண்டிய நிலை சிட்னி ட‌மிழ்ஸ்க்கு ...அன்னதானம் என்றால் அவர்கள் அப்படி செய்வது சரி ஆனால் காசு கொடுத்து சாப்பிடும் பொழுது நிர்வாகம் இப்படி செய்வது....this is too much

Rajan said...

மேலே சொன்னவர்களின் கருத்து எனக்கும் இருந்தது. முதலில் ஒரு புட்டும் ஒரு இட்டலியும் ஒரு சிறங்கை சோறும் கொடுத்தார்கள் கடைசியில் சாப்பாடு மிஞ்சிப்போய் கிடந்தது. நிகழ்ச்சி நன்றாக இருந்தது. வழமையாக துர்க்கை அம்மன் உணவு நன்றாகத்தான் கொடுப்பார்கள் அன்று இப்படிச் செய்தது.கவலையாக இருந்தது. நிர்வாகம் கவனிக்க வேண்டும்

Ramesh said...

பாவலன் பாடிய பாட்டும் பாஸ்கரன் பேசிய பேச்சும் நன்றாகவே இருந்தது. சும்மா கவிதையில சொல்லி தூள் கிளப்பிட்டன்இல்ல
பாடல் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. பாவலன் பாலா ஆகியோரை பாராட்டுகின்றேன். உங்கள் இந்த நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். சாப்பாடு அருமை அளவில் கொஞ்சம் சிறுமை. ஈஈஈஈஈஈ