உலகச் செய்திகள்

.
தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல்

லண்டன் பௌத்த நிலையம் மீது குண்டுத் தாக்குதல்


ஆசியா மீதான புலனாய்விற்காக அமெரிக்கா வகுத்துள்ள புதிய திட்டம்

பிரிட்டனில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி

கிலானிக்கு 30 வினாடிகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல்

Tuesday, 24 April 2012

தென் கொரியத் தலைநகர் சியோலை மூன்று நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று வட கொரியா இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த 1950ம் ஆண்டு உள்நாட்டு கலவரத்திற்கு பின் ஒருங்கிணைந்த கொரியா வட கொரியா, தென் கொரியா என இரு நாடுகளாக பிரிந்தன.

தென் கொரியா ஜனநாயக ரீதியிலும், வட கொரியா கம்யூனிச கொள்கையிலும் செயல்பட தொடங்கின. அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது.


இந்நிலையில் வட கொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தாலும், ஏவுகணை சோதனை நடத்துகிறது என்று தென் கொரியா புகார் தெரிவித்தது. மேலும் வட கொரிய தலைவர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வட கொரியா இராணுவம், வட கொரியாவின் புகழை கெடுக்கும் வகையில் தென் கொரியா ஜனாதிபதி லீ மியுங்பக் பல மாதங்களாக பேசி வருகிறார்.

தொடர்ந்து அவமானப்படுத்தினால் சியோலை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இரு நாட்டுக்கும் இடையில் மீண்டும் போர் மூளும் அபாயம் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினக்குரல்
லண்டன் பௌத்த நிலையம் மீது குண்டுத் தாக்குதல்
Thursday, 26 April 2012 

லண்டனிலுள்ள கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ சர்வதேச பௌத்த நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத.

இந்தப் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் எவருக்கும் உயிரர்ச் சேதமோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி தினக்குரல்

ஆசியா மீதான புலனாய்விற்காக அமெரிக்கா வகுத்துள்ள புதிய திட்டம்

Thursday, 26 April 2012

 வாஷிங்டன்: சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மீது கவனஞ் செலுத்துவதற்காக புதிய புலனாய்வு பிரிவினை நியமிப்பதற்கு அமெரிக்காவின் பென்டகன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதன் மூலம் அமெரிக்கா தனது புலனாய்வு நடவடிக்கைகளை உலகளவில் விஸ்தரிக்கும் தன்னிச்சையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

பென்டகனின் இப் புதிய திட்டத்துக்கு பாதுகாப்பு செயலர் லியோன் பனிற்றா அனுமதி அளித்துள்ளார். அமெரிக்க புலனாய்வுத் துறை (சி.ஐ.ஏ.) யுடன் இணைந்து செயற்படும் வகையில் பாதுகாப்பு இரகசிய சேவை எனும் புதிய அமைப்பு வாஷிங்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் புதிய அமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் உலகளாவிய எமது நோக்கு விஸ்தரிக்கப்படும் என பென்டகனின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய போர்வலயங்களில் இருந்து தமது சேவையை வெகு தொலைவில் பிரதிபலிக்க வைப்பதாகவும் மீள ஒழுங்கமைக்கும் முயற்சியாகவும் இராணுவத்தின் மனித வளப் புலனாய்வினை சீரமைக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக சகல அதிகாரிகளும் உரிய இடங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படுவரெனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மாற்றங்களும் படை நகர்த்தல்களும் எப் பகுதிகளில் இடம்பெறும் என தெரிவிப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத ஒழிப்பு மற்றும் ஆயுதப் பரவலாக்கம் ஆகியவற்றைத் தடுப்பதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அதேவேளை, சீனா உள்ளிட்ட நாடுகளின் வல்லமை அதிகரித்து வரும் நிலையில் ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் மீது ஒபாமா நிர்வாகம் அதிகளவான கவனம் செலுத்தி வருகின்றது.
நன்றி தினக்குரல்

பிரிட்டனில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி

Thursday, 26 April 2012

பிuk_financial_crisis_ரிட்டன் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் வீழச்சி அடைந்துள்ளது.

இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது.

டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே, இன்னொரு வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது நெருக்கடியை 1970ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கமரூன் கூறியுள்ளார்.

இப்பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமரும், நிதியமைச்சர், ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என்று எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார கொள்கைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று, தானும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்


கிலானிக்கு 30 வினாடிகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Thursday, 26 April 2012

raza_gilani_1நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு 30 வினாடிகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.


பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்கினை விசாரிக்க பிரதமர் கிலானி மறுத்து வந்தார். இது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி கிலானிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. 7 நீதிபதிகள் ‌கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் யுசுப் ராஸா கிலானி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கிலானி கூறுகையில், என் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். எப்போதுமே நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து வருகிறேன் என்றார்.

இந்நிலையில் பிரதமர் கிலானி இன்று ஆஜரானார். அவருடைய வழக்கில் நீதிபதிகள் அவரை குற்றவாளி என அறிவித்தனர்.

இருப்பினும் கிலானிக்கு அடையாள தண்டனையாக 30 வினாடிகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
நன்றி தினக்குரல்

No comments: