இலங்கைச் செய்திகள்

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்ரணிலின் "தேர்தல்' வெற்றி

இந்துக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மத செயற்பாடுகள் முன்னெடுப்பு

சீரற்ற காலநிலை * மழை * வெள்ளம்    10,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு: கிளிநொச்சி, முல்லையில் பெரும் இழப்பு

விவசாயத்துறையை மறுமலர்ச்சியடையச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்


19/12/2011

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தலைமைப் பதவி உட்பட ஏனைய பிரதான பதவிகளுக்கான வாக்கெடுப்பு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு தயா கமகேயும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



வாக்கு விபரம்:

தலைவர்
ரணில் விக்ரமசிங்க 72, கரு ஜயசூரிய 24

தேசிய அமைப்பாளர்
தயா கமகே 56, தயாசிறி ஜயசேகர 40

பிரதித் தலைவர்
சஜித் பிரேமதாச 52, ரவி கருணாநாயக்க 44

நன்றி வீரகேசரி

ரணிலின் "தேர்தல்' வெற்றி
Wednesday, 21 December 2011

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கிளர்ந்தெழுந்தவர்கள் தங்களது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு முன்வைத்த பிரதான காரணம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பக்கூடிய மக்கள் செல்வாக்கும் வலிமையுமுடையதாக கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால், ஐ.தே.க.வை இன்றைய பலவீனமான நிலைக்குக் கொண்டுவந்தவர் என்று தாங்களே குற்றஞ்சாட்டும் விக்கிரமசிங்கவுடனான போட்டியில் அவர்கள் கண்டிருக்கும் படுமோசமான தோல்வியை நோக்கும் போது வல்லமை பொருந்தியதாகக் காணப்படும் அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை.

ஐ.தே.க.வின் தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவருக்கு 68 வாக்குகளும் பிரதித் தலைவராக இருந்த கரு ஜெயசூரியவுக்கு 26 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாத்திரமே வாக்களிக்கத் தகுதியுடைய இத் தேர்தல்களில் பிரதித் தலைவர் பதவிக்கு கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்கவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகன் சஜித் பிரேமதாச 8 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேசிய அமைப்பாளர் பதவிக்கு விக்கிரமசிங்கவின் விசுவாசியான முன்னாள் அம்பாறை மாவட்ட எம்.பி.தயாகமகேயை எதிர்த்துப் போட்டியிட்ட பிரேமதாச அணி எம்.பி.யான தயாசிறி ஜெயசேகர 20 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். தயாகமகேயுக்கு 56 வாக்குகள் கிடைத்தன. சஜித் பிரேமதாசவுடன் கட்சியின் இணைத் தலைவராக இருந்து வந்த கரு ஜெயசூரிய தற்போது அந்தப் பதவியையும் இழந்து வெறுமனே செயற்குழு உறுப்பினராக மாத்திரம் இருக்கவேண்டிய பரிதாபநிலை.

ஐ.தே.க.வின் அரசியலமைப்பின் பிரகாரம் தலைவருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களின் மூலமாக அவரால் எப்போதுமே செயற்குழுவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியதாக இருந்து வந்திருக்கிறது. விக்கிரம சிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் நெருக்குதல்கள் காரணமாக கடந்த வருடம் அரசியலமைப்புக்கு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் தலைவருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை பெருமளவில் குறைக்கக் கூடிய ஏற்பாடுகள் எதுவுமே அவற்றில் இல்லை. தொடர்ச்சியாக பல தேர்தல்களில் ஐ.தே.க. விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் தோல்விகளைச் சந்தித்து வந்திருப்பதை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் கொண்டு அவருக்கெதிரான போராட்டத்தில் தங்களால் மேலெழும்ப முடியுமென்று கரு ஜெயசூரிய பிரேமதாச அணியினர் நம்பிச் செயற்பட்டதன் மூலமாக தங்களுக்கு இயல்பாக இருக்கக் கூடிய பலவீனங்களை வெளிப்படுத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். எது எவ்வாறிருந்தாலும், இத் தேர்தலின் முடிவுகளை அறிவதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அண்மைய கடந்த காலத்தில் இலங்கையில் அரசியற் கட்சியொன்றின் தலைவர் பதவிக்கு நடைபெற்றிருக்கக் கூடிய போட்டியை இந்தளவு ஆர்வத்துடன் ஊடகங்களும் மக்களும் நோக்கியிருப்பார்கள் என்று கூறமுடியாது.

எதிர்பார்த்தவாறே விக்கிரமசிங்கவுக்கு வெற்றியைத் தந்த இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஸ்ரீகொத்தாவின் முன்னால் காணக்கூடியதாக இருந்த அமளிதுமளி கட்சிக்குள் புரையோடிப்போயிருக்கின்ற குழுவாத உணர்வுகளைப் பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது. தலைவர்கள் என்னதான் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்கு உறுதி பூண்டிருப்பதாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசினாலும், அதை மானசீகமாக கூறியிருப்பார்கள் என்று எவரும் நம்பப் போவதில்லை. சூழ்ச்சித் தனமான காரியங்கள் அந்தரங்கமாக முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதற்கான சூழ்நிலையையே இரகசியவாக்கெடுப்பு தோற்றுவித்திருக்கிறது என்பது எமது அபிப்பிராயம் எது எவ்வாறிருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் மனம் விட்டுச் சந்தோசமடையக் கூடியதாக பல வருடங்களுக்குப் பிறகு ஒரு "தேர்தலில்' வெற்றி பெற்றிருக்கிறார். எமது வாழ்த்துக்கள்

நன்றி தினக்குரல்


இந்துக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மத செயற்பாடுகள் முன்னெடுப்பு
Tuesday, 20 December 2011 

இந்த நாடு ஒரு பௌத்த நாடு என பெரும்பான்மை இன மக்களால் வர்ணிக்கப்பட்டாலும் இந்நாடு ஒரு பூர்வீக இந்து நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் பௌத்தம், இந்து இரண்டையும் அனுசரித்து வாழ்ந்துள்ளனர் என்பதை பௌத்த நூலான மகாவம்சம் சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் தமிழ் அரசர்களும் பௌத்தத்திற்கு ஆதரவு வழங்கிய வரலாறும் உண்டு.

ஆனால் கடந்த 1948 ஆம் ஆண்டு எமது நாடு சுதந்திரம் அடைந்ததன் பின் இந்நாட்டில் இனரீதியாக தமிழ் மக்கள் பாகுபடுத்தப்பட்டு வந்துள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது. 2007 ஆம் ஆண்டு யுத்த சூழலில் இருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின்னும் 2009 ஆம் ஆண்டு மே மாத முடிவில் வடக்கு யுத்தம் ஓய்வுக்கு கொண்டுவரப்பட்ட பின்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் இந்து சமய வழிபாட்டு இடங்களும் புராதன இந்து கலாசார தடயங்களும் அழிக்கப்பட்டதை இச்சபையிலே பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன். இதில் அதிகமாக மதவிவகார பிரதி அமைச்சரின் திருகோணமலை மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி அவரது சேருவில் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இது மகிந்த சிந்தனையில் ஒரு அங்கம் என எண்ணத்தோன்றுகின்றது.

கௌதம புத்தர் ஒரு இந்து. ஆனால் அவர் வடக்கே அரசோச்சிய நாகர்களிடையே ஒரு சகோதரச் சண்டை குலோதரனுக்கும் மகோதரனுக்கும் மாணிக்க ஆசனத்துக்காக ஏற்பட்ட போது இதனை தீர்த்து வைக்க புத்தர் நாகதீபத்துக்கு இரண்டு முறை வந்தார். சமாதானத்தை நிலைநாட்டித் திருப்பினார். ஆனால் அவர் மதம் பரப்பவில்லை. அப்போது பௌத்த மதம் கூட தோன்றவில்லை. புத்தர் பரிநிர்வாணம் அடைந்து 450 அல்லது 500 ஆண்டுகளின் பின்பே இந்துவான மூத்தசிவனின் மகன் தேவநம்பிய தீசனின் காலத்தில் இலங்கையில் பௌத்தம் வந்தது.

ஆனால் இன்று இந்து மக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மதச் செயற்பாடுகளை கொண்டு செல்கின்றனர். கடந்த 26 ஆம் 27 ஆம் திகதிகளில் மாவீரர் நாள் என்பதை இட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் நாளாந்தம் நடைபெறும் பூசை வழிபாடுகளை இராணுவத்தினரும் சில இடங்களில் பொலிஸாரும் அரசுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களும் தடுத்துள்ளனர். இது இந்துக்களின் மத உரிமையைப் பறிக்கும் ஒரு செயலாகும். அதுமட்டுமின்றி அதன் பின்பும் சில இடங்களில் இந்து ஆலய பூஜைகளை தடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தப் பூசைகளை தடுத்தமை சார்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு நாளாந்த பூசைகளை புரிவதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தோம். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளிவெட்டி, பாரதிபுரம், மேன்காமம், கங்குவேலி, லிங்கபுரம் உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரும் ஏனைய அரச படைகளும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் நாளாந்த முழு பூசைகளையும் தடைசெய்துள்ளனர். இது இந்துக்களின் அடிப்படை மனித உரிமையை மீறிய ஒரு செயற்பாடு என்பதை இச்சபைக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பொதுவாக இந்துக்களின் உரிமைகளை பறிப்பதிலும் இந்து ஆலயங்களை உடைப்பதிலும் அரசுடன் இயங்கும் சிகல உறுமய பெரும் பங்காற்றுகின்றது. இந்நாட்டில் இனப்பிரச்சினை எதுவும் இல்லை என கூறி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கம் மறைமுகமாக மதப்பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இவ் வரவு செலவுத் திட்டத்தில் பௌத்த மதத்துக்கு கூடிய கவனம் செலுத்தியுள்ளது. பௌத்தமதத் தலங்களை சூழ்ந்து காணப்படும் பாடசாலை, மகப்பேற்று நிலையம், குடிநீர் போன்ற வசதி அமைக்கும் நோக்குடனும் புராதன பௌத்த தலங்களை பாதுகாக்கும் நோக்குடனும் 300 மில்லியன் ஒதுக்கியுள்ளது. ஆனால் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட புரதான வரலாற்று பெருமை மிக்க விஜயன் வரவுக்கு முற்பட்ட நகுலேஸ்வரத்தை சகல வசதியுடன் புனரமைக்கவோ, மாவிட்ட புரகந்தசாமி ஆலயத்தை புனரமைக்கவோ, வரவு செலவுத் திட்டம் சிறப்பிடங்களை வழங்கவில்லை. இந்தியா உதவியுடன் திருக்கேதீஸ்வரம் புனரமைக்கப்படுகின்ற நிலையில் அங்கு திட்டமிட்டு புத்த விகாரையை அமைத்துள்ளனர். இதுவும் அரசின் ஒரு செயற்பாடாகும்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில், பௌத்த மக்கள் எக்காலத்திலும் வசிக்காத பகுதிகளிலும் கூட திட்டமிட்டு பௌத்த விகாரை தாபிப்பு நடைபெறுகின்றது. இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம். அரசு இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும் அவர்களின் ஆன்மீகத்தையும், பாதிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்வதை உடன் நிறுத்த வேண்டும் எனக் கோருகின்றேன்.

இலங்கையில் மதவிவகார அமைச்சின் கீழ் இந்து கலாசார திணைக்களத்தில் கிட்டத்தட்ட 5060 இந்து ஆலயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்த சூழலால் 1471 இந்து ஆலயங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இவற்றுக்கு அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் நிதி போதுமானதல்ல. வழங்கப்படும் நிதி நேரடியாக ஆலயங்களுக்கு வழங்கப்படாமல் பிரதேச செயலகங்களுக்கு அரசு வழங்கும் ஒரு இலட்சம் ரூபா பிரதேச செயலகம், கிராம அபிவிருத்திச் சங்கம் என்று வகையில் குறைத்து கிட்டத்தட்ட 88,000 ரூபாவிலேயே ஆலயத்தின் புனரமைப்பைச் செய்ய முடிகின்றது. அத்துடன் தற்போதைய பொருட்களின் விலைக்கு இது போதுமானதாக இல்லை. குறைந்தது பத்து இலட்சம் ரூபாவாயினும் ஒரு ஆலயத்துக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன் நேரடியாக ஆலயங்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

மேலும் இந்து மதவிவகார அமைச்சின் கீழ் நடத்தப்படும் 1570 இந்து அறநெறிப் பாடசாலைகள் இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதிவில் அதைவிட அதிகம் உள்ளன. அதேபோன்று 8200 இந்து அறநெறி ஆசிரியர்கள் சேவை அடிப்படையில் ஆன்மிகம் போதித்துக் கொண்டிருக்கின்றனர். 1,65,000 மாணவர்கள் அறக்கல்வி கற்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மதவிவகார அமைச்சு கவனம் செலுத்தும் விதம் மிகக் குறைவாக உள்ளது. பௌத்த தர்மப்பாடசாலைகளுக்குப் பெரும்பாலான சலுகைகள் வழங்கப்படும் இவ்வேளை, இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு கண் துடைப்பாகவே கவனம் செலுத்துகின்றது. இங்கு கற்பிக்கும் அறநெறி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களம் நடத்தும் தர்ம ஆசிரியர் பரீட்சையிலும் சித்தி பெற்றுள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவும் சேவை அடிப்படையில் எவ்வித ஊதியமும் இன்றி கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மதவிவகார அமைச்சு ஆசிரி யர்களுக்கான சீருடை, மாணவர்களுக்கான சீருடை, இந்து சமய நூல்கள் மற்றும் சில பாடசாலைகளுக்கு தளபாடங்கள், இசைக்கருவிகள் போன்றவற்றை வழங்குகின்றது. அத்துடன் ஆன்மிக பொது அறிவுப் போட்டி இந்து சமய பரீட்சைகளை வைத்து பரிசுகள், சான்றிதழ்களை வழங்குகின்றது. ஆனால் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொருள் கொள்வனவுக்கு 2000 ரூபா பணம் மாத்திரம் வருடத்தில் வழங்கப்படுகின்றன,. இதனால் அறநெறி ஆசிரியர்கள் மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. வேறு எந்த கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.

இன்று பௌத்த அறநெறி ஆசிரியர்களுக்கும், இஸ்லாமிய அறநெறி கல்வி ஊட்டும் ஆசிரியர்களுக்கும், சமய கல்வி போதனா ஆசிரியர் நியமனங்கள் அரச பாடசாலைகளில் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய அறநெறி போதிக்கும் ஆசிரியர்களுக்கு இதுவரை இந்நியமனம் வழங்கப்படவில்லை. முன்பு ஒரு தடவை இந்து சமய ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையும் அரசால் நடாத்தப்பட்டும் பரீட்சை முடிவோ, நியமனமோ இதுவரை வழங்கப்படவில்லை.

அண்மையில் கல்வி அமைச்சின் விஷேட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நான் கல்வி அமைச்சருடன் இந்து அறநெறி ஆசிரியர்களையும் ஆன்மிகக் கல்வியின் பொருட்டு அரச ஆசிரியர் நியமனத்துக்கு உட்படுத்துமாறு கோரிய போது, அவர் அதற்கு ஏற்பாடு புரிவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், இதற்கு மதவிவகார அமைச்சும் ஏற்ற நடவடிக்கை மேற்கொண்டு விரைவாக இந்நியமனத்துள் அவர்கள் செல்வதற்கு உதவ வேண்டும். ஆன்மிகக் கல்வி என்பது எங்கள் சமூகத்துக்கு இன்றியமையாததாக உள்ளது. அதுமட்டுமன்றி அறநெறிப் பாடசா லை அனைத்துக்கும் சீருடை, தளபாடங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் தற்காலிக கட்டிடங்களிலும், அரச பாடசாலைகளிலும் ஞாயிறு வேளைகளில் இவ் அறநெறிப் பாடசாலை நடைபெறுவதால் இதற்கென கட்டிடங்களை அமைத்துக் கொடுக்கவும் முன்வர வேண்டும். இதற்கமைய கிராமங்கள் தோறும் கலாசார மண்டபங்கள் அமைக்கப்பட்டால் இவற்றை இவர்களும் பயன்படுத்த உதவியாக அமையும்.

இலங்கையில் கிட்டத்தட்ட 4000 இற்கும் மேற்பட்ட இந்து அமைப்புக்கள் ஆன்மிகப் பணியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கு பெரும்பாலும் எதுவித உதவியும் மதவிவகார அமைச்சால் வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த அமைப்புக்களின் பணியை மேம்படுத்த வருடாந்தம் இயன்றளவு நிதி உதவி வழங்கப்படுதல் வேண்டும். என கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு இலங்கையிலே கிட்டத்தட்ட 6000 இற்கும் மேற்பட்ட இந்துக்குருமார்கள் உள்ளனர். ஆனால் பௌத்த குருமார்களுக்கு வழங்கும் எந்தச் சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அடையாள அட்டை மாத்திரமே மதவிவகார அமைச்சு வழங்குகின்றது. இன்று பத்திரிகையாளர்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோருக்கு வழங்கும் உதவிகள் போன்று இவர்களுக்கும் வழங்க வேண்டும். இந்தியாவில் தமிழ் நாட்டில் இந்து மத குருமார்களுக்கு அரசு மாதாந்த கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் நோன்றவைகளை வழங்குவதுடன் அவர்களின் மரண வீடு உட்பட்ட நிகழ்வுகளுக்கும் உதவுகின்றது. இந்நிலையில் இங்கும் இந்துமத குருமார்களுக்கு இவ் உதவிகளை அரசு வழங்க முன்வரவேண்டும்.

ஆனால், இந்து காலாசார திணைக் களத்தால் பூசாரிமார்களுக் கான பயிற்சி வகுப்பு மாத்திரம் நடாத்தப் படுகின்றது. இதை பாராட்டுகின்றோம். அத்தோடு நின்றுவிடாது இந்து மதகுருமார்கள் காப்புறுதி, திட்டம், இந்து மதகுருமார் பயிற்சிக் கல்லூரி, இந்து மதகுருமார் பல்கலைக்கழகம், இந்து சமய தொல்பொருள் நூதனசாலை போன்றவற்றை வடக்கு, கிழக்கு மலையகம் போன்ற இடங்கள் உட்படவும் ஏற்படுத்துவதுடன், தொல்பொருள் ஆய்வாளர் நியமனங்கள் போன்றவை ஏற்படுத்தப்படவும் வேண்டும். அத்தோடு பௌத்த மதகுருமார்கள் போன்று இந்து மத குருமார்களுக்கும் கட்டாயமாக போக்கு வரத்து வாகன ஆசனம் வழங்கல் , வைத்தியசாலைகளில் தனி அறை வழங்கல் மற்றும் கவனிப்புகள் நீதிமன்றங்களின் சிறப்பேற்பாடுகள் உட்பட்ட அவசிய சலுகைகளை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மதவிவகார அமைச்சு இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் இந்துக்களிடையே இரு பஞ்சாங்க நடைமுறை உள்ளதால் அவற்றிடையே ஏற்படும் பிணக்கை தீர்க்க ஆராய்ந்து ஒரு பஞ்சாங்க நடைமுறையை கட்டாய மாக அமுல்படுத்த முன்வர வேண்டும். மேலும், இந்து ஆலயங்களில் நடத்தப்படும் உயிர்ப்பலியிடுதல் நிகழ்வை ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் தடை செய்ய வேண்டும். அதற்காக பௌத்த அரசியல்வாதிகள் உயிர்பலியிடுதலை இந்து ஆலயங்களில் தடுப்பதாக சென்று ஆலயங்களை அவமதித்து இந்துக்களை வேதனைப்படுத்தக் கூடாது. சட்ட ரீதியாக தடையை கொண்டு வந்து ஆலயங்களுக்கு அறிவித்து அதன் மூலம் தடையை ஏற்படுத்த வேண்டும். மற்றும் அறநெறிப் பாடசாலைகள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை பிரத்தியேக கல்வி நிலையங்கள் செயற்படுவதையும், மாணவர்கள் அறக்கல்விக்கு செல்லும் நிலையை தடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதையும் தடுக்கக்கூடிய வகையில் உரிய சட்டங்களை ஏற்படுத்தி அமுல்படுத்த முன்வரவேண்டும்.

தமிழுக்கோ, தமிழ் மொழிக்கோ, இந்துக்களுக்கோ, பௌத்த சமயம் அந்நியமானதல்ல. இந்துத் தத்துவங்களுக்கும், பௌத்த தத்துவ ங்களுக்குமிடையில் பாரிய வேறுபாடு இல்லை. புத்தபெருமான் பிறப்பால், வாழ்க்கையால் இறுதிவரை இந்துவாகவே இருந்தார். புத்தசமய கருத்துக்கள் சிங்கள மொழியில் இருப்பதைவிட தமிழ் மொழியில் கூடுதலாகவும் விளக்கமாகவும் உள்ளன. இவ்வாறு அமைந்துள்ள வேளையில் பாரம்பரிய வரலாற்று இடங்களை தொல்பொருள் திணைக்களத்துக்கு உட்படுத்தி அவர்களது பூர்வீகத்தை ஒழிக்கும் திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும். பௌத்த மதத்திற்கு கொடுக்கும் அதே உரிமையும் சலுகையும் இந்துசமயத்துக்கு வழங்கப்பட வேண்டும். இந்துக்களின் ஆலயங்களை இடித்து பௌத்த விகாரை கட்டிய இடங்களில் மீண்டும் இந்து ஆலயங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மத உரிமைக்காக சாத்வீகப் போராட்டங்களில் இந்துக்கள் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

2011 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் மதவிவகார அமைச்சரின் கீழ் இந்து சமய கலாசார திணைக்களத்துக்கு அறநெறிப் பாடசாலை, ஆலயம் உட்பட்ட ஆன்மிக செயற்பாட்டுக்கு 105,195,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை 2012 இற்கு இந்நிதி 93,950,000 ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. 11,245,000 குறைக்கப்பட்டுள்ளது என இந்து கலாசார திணைக்கள அறிக்கை மூலம் அறிகின்றேன். உண்மையில் இன்று இந்து மக்களின் ஆன்மிக செயற்பாட்டு நடவடிக்கைக்கு தேவைகள் அதிகம் உள்ள வேளையில் இந்நிதி குறைக்கப்பட்டது வேதனைக்குரியதாகும். தயவு செய்து அரசாங்கம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் இந்து சமய செயற்பாட்டுக்கு அதிகளவு நிதியை வழங்க முன்வரவேண்டும்.

அத்துடன் தர்ம பாடசாலை அபிவிருத்திக் கான 2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடு முற்றுமுழுதாக பௌத்தமத அபிவிருத்தியை மையமாக கொண்டதாக ஏற்படுத்தாது இந்து அறநெறி பாடசாலை அபிவிருத்திக்கும் பெரும் உதவி வழங்குவதாக அமைய வேண்டும் என வேண்டுவதுடன் விசேடமாக அண்மையில் அநுராதபுர சிறைச்சாலையில் இந்துக்களின் வழிபாட்டு மண்டபமும் விக்கிரகங்களும், திட்டமிட்டு உடைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதுடன் இச் செயற்பாட்டுடன் சம்பந்தமானவர்களை மதவிவகார அமைச்சும், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சும் சேர்ந்து விசாரணை செய்து தகுந்த தண்டனை வழங்குவதுடன் இந்த ஆலயத்தை அங்கு மீண்டும் அமைப்பதற்கும் உதவி புரியவேண்டும், எனவும் கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் ஏற்படாத வகையில் அரசு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோருகின்றேன்.

பொதுவாக இந்து சமயத்தை எந்தவொரு பௌத்தர் அவமதிக்க முற்படுகின்றாரோ அவர் கௌதம புத்தரையும், அவரால் தோற்றுவிக்கப்பட்ட தத்துவத்தையும் அவமதிக்கின்றார் என்பதே உண்மை, ஆகவே இந்நாட்டில் பௌத்தத்துக்கு மாத்திரம் தனிச்சலுகை வழங்காது சகல சமயங்களுக்கும் சம உரிமை வழங்கி பல்லின சமூகம், பல்லின சமயம் உள்ள ஒரு நாடு என வகுக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இதைவிடுத்து இது பௌத்த நாடு எனக்காட்டிக் கொண்டு ஏனைய சமயங்களை கீழ்மைப்படுத்த முற்பட்டால் இது எதிர்காலத்தில் இந்நாட்டில் மதப்பிரச்சினையையே தோற்றுவிக்கும்.
நன்றி தினக்குரல்



சீரற்ற காலநிலை * மழை * வெள்ளம்


10,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு: கிளிநொச்சி, முல்லையில் பெரும் இழப்பு

புத்தளம் – மன்னார் கரையோர போக்குவரத்து தடை

மர்லின் மரிக்கார்

வடகீழ் பருவ பெயர்ச்சி மழைக் காலநிலை ஆரம்பித்துள்ளதால் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக நாட்டில் 10 ஆயிரத்து 225 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 735 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

இவர்களில் 1668 குடும்பங்களைச் சேர்ந்த 6215 பேர் இருப்பிடங்களை விட்டு தற்காலிகமாக வெளியேறி 41 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்மழைக் கால நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அன ர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பி.ஆர்.பி. குளாப் கூறினார். இப்பருவ பெயர்ச்சி மழைக் காலநிலை காரணமாக கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிலையத்தின் பேச்சாளர் கொடுப்பிலி கூறினார்.

இம்மழை கால நிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3539 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 456 பேரும், யாழ். மாவட்டத்தில் 3484 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 381 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 120 ஆயிரத்து 95 பேரும், மன்னார் மாவட்டத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 729 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்காலநிலை மாற்றம் காரணமாகப் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்குமாறு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

32 பாரிய குளங்கள்

85 சிறு குளங்கள் வழிகிறது

இதேவேளை இம்மழையினால் நாட்டிலுள்ள 32 பாரிய குளங்களும், 85 சிறிய குளங்களும் தற்போது நிரம்பி வழிவதாகவும், 13 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் மட்டம் பேணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

மகா கனதராவ, நாச்சியாதுவ, ராஜாங்கணை, வாகல்கட, உறுகாமம், உன்னிச்சை, வேரகல, ஹந்தபான்கல, கவுடுல்ல, மின்னேரியா, பராக்கிரம சமுத்திரம், கந்தளாய் ஆகிய 13 குளங்களினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று முதல் மேலும் இரு குளங்கள் நிரம்பி வழிவதாகக் குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மாத்தளை வவுனியா, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களிலும் குளங்கள் நிரம்பி வழிவதாகவும் குறிப்பிட்டார்.

நீர் மட்டம் அதிகரித்துள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட முன்னர் பிரதேச வாசிகளுக்கு முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ராஜாங்கனை குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் மட்டம் பேணப்படுவதால் புத்தளம், எழுவன் குளப் பிரதேசத்தில் ஐந்து அடிகள் உயரத்திற்கு வெள்ள நீர் புத்தளம் – மன்னார் கரையோரப் பாதையைக் கடப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் லெப்டினண்ட் கேர்ணல் ஆர்.ஏ. ரணவீர கூறினார்.

இதன் காரணத்தினால் புத்தளம் – மன்னார் கரையோரப் பாதை போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெள்ள நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எழுவான்குளப் பிரதேச வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சீரற்ற காலநிலை
தொடரும்

தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் மெரில் மென்டிஸ் நேற்றுத் தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

வட கீழ் பருவ பெயர்ச்சி மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. அதனால் சில சந்தர்ப்பங்களில் கடலில் காற்றின் வேகம் 60 – 70 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கில்

வெள்ள அபாயம்

(அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி நிருபர்)

கிழக்கில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததோடு கடந்த இரண்டு நாட்களாக குளிருடன் கூடிய காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதனால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தொடரும் மழையினால் க.பொ.த. (சாதாரண) தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச, தனியார் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் இப்பருவ மழை காரணமாக விவசாயிகள் கடற்றொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களும் தொழிலுக்கு செல்ல முடியாமல் கஷ்ட நிலைக்கு ஆளாகியுள்ள னர். அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப் பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய கரையோர தாழ் நில குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதால் மக்கள் கவலையடைந்துள் ளனர். இப்பிரதேசங்களிலுள்ள விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடரும் மழை காரணமாக விவசாயம் பாதிப்படையலாம் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இயல்பு நிலை பாதிப்பு

(ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்)

ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். பாதைகள் எங்கும் நீர் நிரம்பி காணப்படுகின்றது. வசாயம், சேனைப் பயிர்ச் செய்கைகளும் பாதிப்படைந்துள்ளன. குளங்களில் நீர் நிரம்பி காணப்படுவதோடு வளவ கங்கை, கிரிந்தி ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது.

நன்றி தினகரன்

விவசாயத்துறையை மறுமலர்ச்சியடையச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது

அமைதியும் சமாதானமும் நிலைத்திருக்கும் எங்கள் நாடு பொரு ளாதாரத்துறையில் இன்று எதிர்பார்த்ததை விட கூடுதலான வளர்ச்சி அடைந்து வருகிறது. எமது நாட்டின் காசுப் பயிர்க ளான தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது சர்வதேச சந்தை வாய்ப்புக்கள் அதிகரித்து வரு வதுடன், உல்லாசப் பயணத்துறையிலும் நாடு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்னர், இவ்வாண்டில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சம் இல க்கை தாண்டியிருப்பது எங்கள் தேசிய வருமானத்திற்கு ஒரு சிறந்த உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது.

அதுபோன்று வெளிநாடுகளில் பணிபுரியும் 17 இலட்சம் இலங்கையர் கடந்த ஆண்டில் மாத்திரம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக நாட்டி ற்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். இவ்விலக்கு இவ்வாண்டில் 5.2 மில் லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கின்றது.

இவ்விதம் நாடு பொருளாதாரத்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்ற போதிலும், எங்கள் நாட்டின் தேசிய வருமானத் தில் பெரும்பகுதியை நாம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய் வதற்காக செலவிட்டு வருகிறோம்.

ஒரு நெறியான திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியையும், ஏனைய உப உணவுப் பொருட்களின் உற் பத்தியையும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்ற தவறிய காரணத் தினால் தான் இந்த நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டவர் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் அதாவது 1505 ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்கள் நாடு ஆசியாவின் நெற்களஞ்சிய மாக புகழ்பெற்று விளங்கியது.

பண்டைய மன்னர்கள், பராக்கிரம சமு த்திரம் போன்ற பாரிய நீர்ப்பாசன திட்டங்களை தங்கள் கடும் உழை ப்பினால் ஏற்படுத்தியதன் விளைவாகவே, அன்று நாம் நெல் உற் பத்தியில் ஆசிய நாடுகளில் தன்னிகரற்ற நிலையில் இருந்தோம். அன்று இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற அயல் நாடுகளுக்கு இலங்கை அரிசியை ஏற்றுமதியை செய்யுமளவுக்கு எமது விவசாயத் துறை சிறப்புற்று விளங்கியது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழும் எமது நாட்டின் விவ சாயத்துறைக்கு நல்ல ஆதரவு இருந்து வந்தது. ஆயினும் வர்த்தகத் திலும் பிரிட்டனின் தேசிய வருமானத்திலும் அக்கறை கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நெல் உற்பத்தியின் மீது அதிக கவனம் செலுத்தாமல் மலையகத்திலும்,

சப்ரகமுவ மாகாணத்திலும், வட மேற்கு மாகாணத்திலும் தேயிலை, றப்பர் மற்றும் தென்னந்தோட்டங் களை ஆரம்பித்து, அதன் மூலம் நல்ல வருமானத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்தார்கள்.

அதனால் தான் இவை மூன்றுக்கும் அன்று, காசுப் பயிர்கள் என்ற கார ணப் பெயர் சூட்டப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்க கல்ஓயா குடியேற்ற திட்டத்தை ஆரம் பித்து, விவசாயத்துறைக்கு ஊக்கமளித்தார். கல்ஓயா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட புதிய சிங்கள குடியேற்றங்கள் மட்டக்களப்பு, திரு கோணமலை,

அம்பாறை மாவட்டங்களில் அன்று பெரும்பான்மை இனங்களாக இருந்த தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் இம் மாவட்டங்களில் இவ்விரு சிறுபான்மை சமூகங்களுக்கு இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத் தின் எண்ணிக்கையும் குறைந்து அவ்விடங்களுக்கு சிங்கள பிரதிநிதி கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதுவும் இலங்கையில் இனப்பிரச் சினை தோன்றுவதற்கு இன்னுமொரு மறைமுக காரணியாக அமைந் திருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் நாட்டின் நெல் உற்பத்தியை பெருக்கு வதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாட்டின் நெல் உற்பத்தியை பெருக்குவதற் காக சுவர்ண பூமி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட அரச காணிகளில் அந்த விவசாயிகள் விவசாயத்தை சிறப்பாக செய் யாது இருந்தால், அக்காணிகளை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து அவற்றை பயன்தரக்கூடிய வகையில் விவசாயம் செய்ய முன்வருப வர்களுக்கு ஒப்படைப்பதற்கான திட்டம் ஒன்றை இப்போது வகுத் துள்ளார்.

அதனடிப்படையில் அரச காணிகளை சரியாக பயன்படுத்தாத விவசாயி களின் காணிகள் அவர்களிடமிருந்து திருப்பி பெறப்படும் என்று அமை ச்சர் அறிவித்துள்ளார்.

றம்புக்கன் ஓய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் குடியேறவுள்ள 2300 காணியற்ற குடும்பங்களுக்கு இப்பிரதேசத்திலு ள்ள அரசாங்க காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற் கான ஆவணங்களை ஒப்படைக்கும் நிகழ்வின் போது அமைச்சர் சிறிபால டி சில்வா 35 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்ப ட்ட இந்தத் திட்டத்தின் கீழ் 24 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆஸ் பத்திரி மற்றும் பாடசாலைகளுக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொ டுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த றம்புக்கன் ஓய நீர்த்தேக்கத்தில் 45 ஆயிரம் ஏக்கர் அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு 3 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் புதிய விளை ச்சல் நெற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் கொடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இவ்விதம் இன்றைய அரசாங்கம் மீண்டும் எங்கள் நாட்டில் ஓரளவுக்கு மந்த நிலை அடைந்துள்ள உணவு உற்பத்தி துறையை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் இப்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

நன்றி தினகரன்

மக்களை மீள்குடியேற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டியது அவசியம்


காணி மற்றும் காணி அபிவிருத்தி,

மீள் குடியேற்ற அமைச்சுக்களின்

வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் ஆற்றிய உரை



இலங்கையில் காணிப் பிரச் சினைகளால் பாதிக்கப்பட் டிருப்பவர்கள், வடக்குக் கிழக்குப் பகுதிகளிலுள்ள மக்களே, அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே உச்சமான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.



இவர்களிற் பலரிடம் தற்போது தங்கள் காணிகளுக்குரிய உறுதிகளோ, உரித்தாவணங்களோ இல்லை. அவற்றைப் பெறக்கூடிய நிலையும் பலருக்கில்லை.



போரின் காரணமாக இந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் தங்களிடமிருந்த ஆவணங்களைத் தவறவிட்டுள்ளனர். உயிரையே காப்பாற்ற முடியாத நிலையில் இருந்த மக்களால் எவ்வாறு ஆவணங்களையும் பொருட்களையும் காப்பாற்ற முடியும்? என நினைத்துப் பாருங்கள். இழந்துபோன ஆவ ணங்களை மீளப் பெறக்கூடிய சூழலும் இல்லை. யுத்தத்தினால் இந்தப் பகுதிகளிலிருந்த அரச திணைக்களங்கள் அழிவடைந்ததனால் அவற்றிலிருந்து ஆவணங்களும் அழிந்துவிட்டன.



ஆகவே கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட் டங்களிலுள்ள மக்கள் போரின் பாதிப்புக்களைத் தொடர்ந்து இப்போது காணிப் பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு காணியே அடிப்படைத் தேவையாக உள்ளது.



வீடமைப்புத் திட்டம் தொடக்கம் வாழ்வாதார உதவிகள் என அனைத்தையும் பெறுவதற்கு காணி அத்தியாவசியமாகும். ஆனால் காணி இருந்தாலும் அதற்குரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே அங்குள்ள மக்களின் பெரும்பாலானோர் உள்ளனர். இதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளைப் பெற முடியாத நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.



இந்த மக்களின் இந்த அவல நிலையை அங்கே நேரிலே பார்த் தறிந்தவன் நான். ஆகையால் தான் சொல்கிறேன் அங்குள்ள மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது மிக மிக முக் கியமாகும் என்று.



கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலே 2/3 க்கும் அதிகமான தொகையினர் அரசினால் வழங்கப்பட்ட காணி களிலேயே குடியிருந்தும் விவசாயம் செய்தும் வருகின்றனர்.



தென்பகுதியிலிருந்து வன்முறை காரணமாக இடம்பெயர்ந்து கொழும்பிலிருந்தும் மலையகத்திலிரும் வன்னிக்கு வந்த தமிழர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட் டங்களில் அரச காணிகளில் குடி யமர்த்தப்பட்டார்கள்.



இவர்கள் இந்தப் பிரதேசங்களில் மிக நீண்டகாலமாக இருக்கின்றபோதும் இவர்களிற் பலருக்கும் இதுவரையில் சான்றாதாரப் பத்திரங்களோ, உரித்து ஆவணங்களோ வழங்கப்படவில்லை. இப்போது இவர்களுக்கு முறையான உரித்தாவணங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.



இதைவிட பெருமளவானோர் காணியில்லாத நிலையில் இருக்கின் றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 12,438 குடும்பங்கள் தமக்குக் காணியில்லாதவர்களாக பதிவு செய்துள்ளனர்.



இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் 14,750 குடும்பங்கள் காணியற்ற நிலையில் உள்ளனர். இவர்கள் காணிக்காக விண்ணப் பித்திருக்கின்றனர். இதேவேளை கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 2,000 ற்கும் மேற்பட்டவர்கள் அரச காணிகளில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கான உரித்தாவணங்கள் விசாரணை செய்து வழங்கப்பட வேண்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் முஸ்லிம் மக்கள் உட்பட 7,500 குடும் பங்கள் காணியற்ற நிலையில் இருக் கின்றனர்.



இந்த மக்களின் நிலை மையை நாம் கவனத்தில் எடுக்க வேண் டும். இவர்கள் போரினாலும் பாதிக்கப்பட்டு உதவித் திட் டங்களைப் பெற முடியாத நிலையிலும் பாதி க்கப்பட்டுக்கொண்டிருக் கின்றனர். இந்த நிலையில்தான் நாம் அரசாங்கம் முன்னெடுத்த "மண்ணின் மகிமைத்" திட் டத்தை வரவேற்கிறோம்.



நாட்டின் அபிவிருத்தியும் பிரதேசத்தின் அபிவிருத்தியும் வளங்களையும் பயன்படுத் துவதிலேயே தங்கியுள்ளது. எல்லாவற்றுக்கும் அடிப்படை யானது முதலில் நிலமாகும். காணியற்ற நிலையில் பெருந் தொகையான மக்கள் இருக் கிறார்கள். இதேவேளை பராமரிப்பின்றிய நிலையில் பெருமளவு காணிகள் உள்ளன. இது அடிப்படையில் ஒரு முரணாகும். யாருடைய காணியும் பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் அது அபி விருத்திக்கும் அயல் மனி தர்களுடைய வாழ்க்கைக்கும் குறைபாட்டையே ஏற்படுத்தும்.



எனவேதான் ஒரு முறையான திட்டத்தின் மூலம் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்று கேட்கின்றோம். காணிப் பற்றாக்குறை மட்டுமல்ல காணி உரித்தாளர்களி டையே ஏற்படுகின்ற பிணக்குகளின் காரண மாகவும் ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.



இதேவேளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பிணக்குக்குரிய காணிகள் அபிவிருத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளமையை அவதானிக்கலாம். ஆகவே, காணி தொடர்பான தீர்வுகள் அவசியமானது.



இலங்கையில் ஏனைய மாகா ணங்களில் நடைமுறைப்படுத்துவது போன்று காணியற்றவர்களின் விப ரங்களை அரச வர்த்தமானி மூலமோ அல்லது பத்திரிகைகள் மூலமோ அறிவித்துத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமே காணியற்றவர்களின் சரியான விபரங்கள் திரட்டக் கூடியதாக இருக்கும்.



பொதுவாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மீள்குடியேற்ற மாவட் டங்களில் வருடாந்த உத்தரவுப்பத்திரம் மூலம் வழங்கப்பட்ட காணிகளுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி அளிப்புப் பத்திரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் பொது ஸ்தாபனங்கள், வணக்கத் தலங்களுக்கு நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளுக்கு குத்தகைப்பத்திரம் இதுவரை வளங்கப்படவில்லை ஆகவே இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



பொதுவாக கிளிநொச்சி, முல் லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பல காணிகள் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளன. சில காணிகளில் அத்துமீறி மக்கள் நீண்ட காலமாக குடியிருந் துள்ளனர். இவர்களுக்கு இக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அபிவிருத்தி செய்யப்படாத ஏனைய மத்திய வகுப்புத்திட்டக் காணிகளை காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் காணியற்றோர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.



குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில கிராமங்கள் ஏற்று நீர்ப்பாசன முறை மூலம்(ழிiஜீt யிrrigation) பயிர் செய்வதற்கு வழங்கப்பட்டது. எனவே, இப்பகுதி களுக்கு ஏற்ற நீர்ப்பாசன முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்பகுதிக் காணிகள் அபிவிருத்தி செய்யக் கூடியதாக இருக்கும். பொதுவாக மீள்குடியேற்ற மாவட்டங் களில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படா திருக்கும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் மூலம் இப்பகுதியிலுள்ள காணிகளை சுற்றாடல் சமநிலையைப் பேணும் விதத்திலும் நிரந்தர உபயோகத்திற்கும் வழிவகுக்கும் வகையில் திட்டமிட்டு வழங்கப்பட வேண்டும்.



இதைத் தவிர பெருமளவு தொகை யில் காணிகளை வைத்திருக்கும் நிலவுடைமையாளர்களின் தனிப்பட்ட நலனுக்காக ஆயிரக்கணக்கான காணியற்ற மக்களின் வாழ்வோடு விளையாட முடியாது.



தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியலில் ஈடுபடும் மூத்த அரசியல்வாதிகள் பலருக்கும் பல ஏக்கர் கணக்கில் காணிகள் உண்டு. இவற்றை அவர்கள் தமக்கு வாக்களித்த காணியற்ற மக்களுக்கே பகிர்ந்தளிக்கத் தயாரில்லாத நிலையில் இருக்கின்றனர். இவர்களே தங்களையும் பாதுகாத்து தங்களைப் போன்ற நில முதலாளிகளையும் பாதுகாக்க முற்படுகின்றனர்.



இவர்களுக்கு காணியற்ற ஏழை மக்களின் வாழ்வைப்பற்றி கரிசனையே கிடையாது என்பதை வன்மையாக இந்த மன்றிலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். "மண்ணின் மகிமை" திட்டத்தின் கீழ் இதற்கு இலகுவாக தீர்வு காணக் கூடியதாக இருக்கும். ஆகவே அத்திட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.



வடக்கின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்த அவை யின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். போர் முடிந்து 2 1/2 ஆண்டுகள் கடந்த பின்னரும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் தொடர்ந்தபடியே உள்ளன. இன்னமும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் 1000 கணக்கான மக்கள் தங்கியிருக்கும் நிலையே தொடர்கிறது.



மீள்குடியேற்றம் என்பது இன்னும் குறை நிலையிலேயே உள்ள தென்பது குறிப்பிடத் தக்கது.



போர் முடிந்த பின்னர் மீண்டும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கப் போய்விடலா மென எல்லா மக்களும் நம்பினர். இந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு அரசாங்கமும் செயற்படத் தொடங்கியது. மீள்குடியேற்றத்தைச் சாத்தியப்படுத்துவதில் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவுக்கும் நிறையப் பங்குண்டு. ஜனாதிபதி அவர்களின் பணி ப்பின் பேரில் கெளரவ அமை ச்சர்களான பசில் ராஜபக்ஷவும், டக்ளஸ் தேவானந்தாவும் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தனர்.



அந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய மான நிகழ்ச்சியாகவே இருந்தது. 2 1/2 ஆண்டுக்குள் 70% இற்கும் அதிகமானோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது சாதனையே. ஆனால் ஏனைய மக்களும் மிக விரைவாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும். மற்றவர்களைப் போல தாங்களும் தங்களுடைய சொந்த ஊர்களில் வாழ வேண்டுமெ ன்று அகதி நிலையிலிருக்கும் மக்கள் விரும்புகிறார்கள்.



உள்ளூரில் இடம்பெயர்ந்த அகதிகள் என்ற நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப்போகிறது? ஆகவே மீளக் குடியேற வேண்டிய மக்களை உரிய இடங்களில் குடியமர்த்த வேண்டிய நடவடிக்கையை நாம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.



இதேவேளை சில நடைமுறைப் பிரச்சினைகளை நாமும் அறிவோம். இங்கு வடக்குக், கிழக்கிலே கண்ணிவெடி அகற்ற வேண்டிய பிரதேசங்களாக 20% மான நிலப்பகுதி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தொடர்ந்து கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.



வடபகுதியில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். 10,000ற்கு மேற்பட்ட பணியாளர்கள் தினமும் வெடி பொருட்களை அகற்றும் நட வடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். முற்றாக வெடிபொருள் அபாயத்தை நீக்கினாலே அந்தந்தப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்க முடியும் என்பதை நான் அறிவேன். இது தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகளில் நானும் பங்கேற்றவன் என்பதனால் இது பற்றிய விடயங்கள் எனக்குத் தெரியும்.



கிளாலியில் அண்மையில் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்து அவற்றை வெற்றி கொண்டு மீள்குடியேற்றத்தைச் சாத்தியப் படுத்தியுள்ளோம். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பி னர்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.



ஆசிரியருக்கு எழுதுங்கள்
அச்சுப் பிரதி








No comments: