.
புனிதமகான் யேசு அவதரித்த நாளில் அவன் புகழ் பாடி மகிழ்வோம்!
எல்லோருக்கும் 2011ஆம் நத்தார்ப் பண்டிகை இன்பகரமாகவும் மற்றும் 2012ஆம் புதுவருடம் எல்லா நலன்களையும் நல்கும் ஆண்டாகவும் அமைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்.
மலைப் பிரசங்கஞ் செய்த மாமுதலே – எம்மை
நிலைப்படுத்தி நெறிப்படுத்தும் நிரந்தரனே இயேசு பாலா!
(மலைப்)
தலைப்படுத்திப் பாரிலுள்ளோர் தவறிழைத்தால் நல்வழியைப்
புலப்படுத்திப் பாவமெலாம் போக்கிட மன்னித் தருளும்
(மலைப்)
தேடிநீயும் ஆவினங்கள் தொழுவமதை நாடி ஆயர்
பாடிமகிழ்ந்(து) ஆர்ப்பரிக்கப் பரமலோகத் தேவர் ஆட
கூடிடுநல் ஓரைதனில் கூசுமொளி யோடு வானம்
சூடிடவோர் நட்சத்திரம் தோன்றிநிற்க உதித்த தேவா!
(மலைப்)
‘வாழ்க வளமுடன்’
கலாநிதி இளமுருகனார் பாரதி

No comments:
Post a Comment