யாமத்திரி எரிகிறது - ராஜா



திவலையென
சுருங்கிவிட்டது வெளிச்சம்.
இருட்பெருங் கடலில்
இட்ட சுடராய்
யாமத்திரி எரிகிறது.
இனி-
நிகழ்த்த எதுவுமில்லை.
நினைவுகளென படிந்துவிட்டவை
விசிறியின் சுழற்சியில் மேலெழும்.
ஒற்றை நிகழ்வாய்
யாமத்திரி எரிகிறது.
மரண ஒத்திகையென
உறங்கிப் போகலாம்
உயிர்த்தும் எழலாம்
ஒற்றை கடவுளாய்
யாமத்திரி எரிகிறது
.

நீர்தொட்டு
மனங்கிறுக்கும் கனவுகள்
வாசிப்பதற்குள் உலர்ந்துவிடும்
ஒற்றை சாட்சியாய்
யாமத்திரி எரிகிறது.
மற்றுமொரு விடியல் வரும்
இயக்கங்கள் தொடரும்
யாமத்திரி எரிகிறது
ஒற்றை நம்பிக்கையாய்.

nantri:uyirmai

No comments: