ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்பு மலர் -முருகபூபதி


.        
அன்புள்ள இலக்கிய நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு ஏப்ரில்மாதம் மெல்பனில் நடைபெறவுள்ளது.  சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு. பாடும்மீன் சு. சிறிகந்தராசா தலைமையில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழா 2012 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை, இலக்கிய இதழ், அவுஸ்திரேலிய சிறப்புமலரை வெளியிடவுள்ளது.
ஏற்கனவே தமிழக கணையாழி மற்றும் பிரான்ஸ் அம்மா ஆகிய இதழ்களும் இலங்கையில் மல்லிகை மற்றும் ஞானம் இதழ்களும் அவுஸ்திரேலிய சிறப்பு மலர்கள் வெளியிட்டிருப்பது தாங்கள் அறிந்ததே.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு இதழ் ஆசிரியர் பணியை ஏற்றுள்ளமையால் குறிப்பிட்ட ஜீவநதிமலருக்கான படைப்புகளையும் சேகரித்து அனுப்பவேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளேன்.
எனவே தங்களது புதிய படைப்பொன்றை எதிர்வரும் 2012 ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பதாக எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்களுடைய ஒளிப்படத்தையும் தங்கள் படைப்புடன் அனுப்பிவைக்கவும்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், கட்டுரை முதலான துறைகளில் தங்கள் படைப்புகளை எழுதலாம்.   ஏற்கனவே எதிலும் பிரசுரிக்கப்படாத புத்தம் புதிய தரமான படைப்பை அனுப்பிவைக்கவும்.
புகலிடத்தில் தமிழ், தமிழ்க்கல்வி, ஊடகம், ஓவியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்புமலர்தொடர்பாக ஜீவநதி ஆசிரியர் திரு. கலா. பரணி அவர்களுடன்  ஏற்கனவே உரையாடி அவரது சம்மதமும் விருப்பமும் பெறப்பட்டுள்ளது.
தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படும்.


(03) 9308 1484,  04166 25 766


No comments: