விக்ரோறிய மானிலத்தில் ஆடிக்கூழ் விழா


.

விக்ரோறிய மானிலத்தில் கேசி காடினியா(casy+cardinia  council) பகுதியில்
ஆரம்பிக்கப்பட்ட கேசி தமிழ் மன்றம் பல நிகழ்வுகளை நடாத்திக் கொண்டு
வருகின்றது இதன் நிமித்தம் ஆடிப்பிறப்பு விழாவினை விழாவினை Berwick senior  citizeons Hall 122, high street, Berwick, என்ற முகவரியில் கடந்த ஞாயிறு 17.07 20011 அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்தினை ராகமாலிகா இசைக்
கல்லுரியின் ஆசிரியை டவீணா வேந்தனின் மாணவிகளான ஆரபி மதியழகன்இ நித்தியா பத்மசிறிஇ காவியா வேந்தன் ஆகியோர் பாடினார்கள்





இதனைத் தொடர்ந்து மன்றத்தின் தலைவர் அவர்கள் மன்றம் தொடங்கி எட்டு மாதங்களே ஆகிய நிலையில் மன்றத்தின் செயற்பாடுகளையும் மேலும் ஆற்றப் போகும் பணிகளையும் விரிவாக எடுத்துரைத்ததோடு மன்றத்தின் ஆண்டு கூட்டத்தினையும் நினைவு படுத்தி புதிய அங்கத்தவர்களின் விண்ணப்பத்தை இதுவரையும் பூர்த்தி செய்து கொடுக்காத புதிய அங்கத்தவர்களை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் திரு. திருமதி.சத்தியமூர்த்தி பொன்னம்மா அவர்கள் ஆடிக்கூழும் அவருடைய அனுபவமும் பற்றி சபை யோருடன் பகிர்ந்து கொண்டார்  திருமதி பொன்னம்மா அவர்களின் உரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே ஆடிக்கூழின் வாசம் மண்டபத்தை நிறைத்தது.பொன்னம்மா அவர்களின் பேச்சு முடிய மன்றத்தின் உறுப்பினர்கள்.ஆடிக்கூழினை சபையோருக்குப் பகிர்ந்து கொடுத்தனர்.
            சும்மா சொல்லக்கூடாது கூழ் மிகவும் சுவையாகவும் வாசனையாகவும்  தங்கத்தாதாவின் பாடல் போல மிக அருமையாக இருந்தை சபையோர் பேசக் கேட்கக்கூடியதாக இருந்ததோடு கூழ் காச்சியவர்கள் யார் என்று தேடும் முயற்சியிலும் ஈடுபட்டனர் சபையோர்.
ஆடிக்கூழ் குடித்து நிறைவோடு இருந்தவர்களை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை” பாடலுக்கு தாய்மார்கள் பாட சிறுவர்கள் கும்மிகொட்டி நடனமிட்டு சபையோரை மகிழ்வித்தார்கள். பெரியவர்கள் பாட சிறுவர்கள் ஆட உண்மையிலே இயற்கையான நிகழ்வை ரசித்த மனநிறைவு எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.
தமிழ் தாய் வாழ்த்துப் பாடிய மாணவிகள் சின்னம் சிறிய சிறுவர்களுக்கான
முகவர்ணம் போடவும் சில போட்டிகளை நடாத்தவும் பக்கத்து மண்டபத்தினுள் அழைத்து செல்ல  சபையோர் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த பட்டிமன்றம் ஆரம்பமானது.
ஆக்கபூர்வமான கருத்தினை” தாங்கி நிற்பது பழைய பாடல்களே”என்று ஒரு அணியும் இல்லை ஆக்கபூர்வமான கருத்தினை தாங்கி நிற்பது புதிய பாடல்களே” என்று மற்றொரு அணியும் வாதிட ஆரம்பித்தது.மன்றத்தின் செயலாளரும் கவிதை தொகுதி
சூரியப் பொழுதின் நாயகன் னுசமணிவண்ணன் அவர்கள் பட்டிமன்றதின் நடுவராகவும் சமூதாயத்துக்கு ஆக்கபூர்வமான கருத்தினை தாங்கி நிற்பது பழைய பாடல்களே என்ற தலைப்பில் வாத்திட்டவர்கள் சந்திரன்இ காந்தன் அவர்களும் சமூதாயத்துக்கு ஆக்கபூர்வமான கருத்தினை தாங்கி நிற்பது புதிய பாடல்களே என்று தலைப்பில் வாதிட்டவர்கள் கிருஸ்ணன் இறாம் அவர்களும். புதிய பாடல்களே என்று வாதிட்ட கிருஸ்ணனும் றாமும் புதிய பாடல்களுக்கு சிலேடை நயத்துடன் கூடிய விளக்கங்களை சபையில் அள்ளிதூவி சபையோரை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்க வைத்தனர்.
இருந்தபோதும் சந்திரனும்இகாந்தனும் பழைய் பாடலுக்குக் கொடுத்த விளக்கத்தின் பரிகாரம் பழைய பாடல்களே  சமுதாயத்துக்கு ஆக்கபூர்வமான கருத்தினை தாங்கி நிற்கின்றது.நடுவர் அவர்கள் தீர்ப்பினை வழங்கி பட்டி மன்றத்தினை நிறைவு செய்தார். இத்தோடு ஆடிக்கூழ் விழா இனிதே நிறைவு கண்டது.

No comments: