அறிவித்தல்

.தமிழீழத் தாயகத்தில் இதுவரை காலமும் சிறிலங்கா அரச அடக்குமுறையால் அழிந்துபோயுள்ள எம் உறவுகளுக்கான நீதிகேட்கும் குரல்கள், இப்போது உலகசமுதாயத்தின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காணொளியை அவுஸ்திரேலியாவிலும் ஏபிசி(ABC) தொலைக்காட்சி மீள்ஒளிபரப்பு செய்துள்ளது.

தாயகத்தில் மறைக்கப்பட்டுப்போன எம்மக்களின் மீதான இனப்படுகொலை குறித்த விபரங்கள், சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டபோதுதான், இதனை சர்வதேச சமுதாயம் புரிந்துகொள்ளத் தொடங்கியமை என்பது ஆச்சரியமாக உள்ளபோதும், எமது மக்களுக்கான நியாயப்பாடுகளை, இப்போதாவது சர்வதேசங்கள் புரிந்துகொள்ள தொடங்கியமையானது, உலகப் பரப்பெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கு ஓரளவாவது ஆறுதலையும் எதிர்பார்ப்பையும் தந்துள்ளது.

சிறிலங்கா அரசும் அதன் படைகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில், இப்பேரழிவிற்கான நீதியைக்கோரி, சர்வதேச நியமங்களுக்குட்பட்ட தீர்ப்பினை எதிர்பார்த்து, அவுஸ்திரேலிய அரசினதும் சக குடிமக்களதும் ஒத்துழைப்பை நாடி, கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 23 ம் திகதி காலை 10.30 மணிக்கு, மெல்பேணில் பெடரேசன் சதுக்கத்திலும், எதிர்வரும் ஜூலை 30 ம் திகதி காலை 10.30 மணிக்கு சிட்னியில் மாட்டின் பிளேசிலும் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இணையுமாறு அன்புடன் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

மெல்பேண் – 23 – 07 – 2011 சனிக்கிழமை 10.30AM, @ Federation Square, Melbourne

தொடர்புகளிற்கு – 0425 174 918 / 0433 002 621

சிட்னி - 30 – 07 – 2011 சனிக்கிழமை 10.30AM, @ Martin Place, Sydney

தொடர்புகளிற்கு - 0469 089 883

ஜூலைப்பெருநினைவுகளை சுமந்த இம்மாதத்தில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுந்துவரும் குரல்களோடு நாமும் கைகோர்த்து, உரிமை மறுக்கப்பட்ட எமது தேசத்திற்காக நாங்களும் எங்கள் கரங்களை இணைத்துக்கொள்வோம்.

No comments: